This entry is part 3 of 4 in the series 7 ஜனவரி 2024

ஆர் வத்ஸலா

அடிப்படை மரியாதை

அதீத புரிந்துணர்வு

பொறுப்புணர்வு

மன முதிர்ச்சி

என

ஒரு நல்ல மருத்துவருக்கு உரித்தான

அனைத்து

குணங்களையும்

கொண்டிருக்கிறாய்

நீ

உனது பணியிடத்தில்

வீடு திரும்பியதும்

வெள்ளை கோட்டுடன்

அவற்றையும்

மாட்டிவிடுகிறாய்

ஆணியில்

Series Navigationதிருக்குறளில் அறம் – ஒரு யதார்த்தப் பார்வைபுத்தாண்டில் இளமை