கனடாவில் கவிஞர் ஆரணியின் நூல் வெளியீடு

This entry is part 5 of 7 in the series 22 செப்டம்பர் 2024

குரு அரவிந்தன்

கனடாவில் உள்ள மார்க்கம் நகரில் சென்ற 14-09-2024 சனிக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த முன்னாள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் (கவிஞர் ஆரணி) ‘நினைவிடைத் தோய்தல்’ என்ற கவிதை நூல் வெளியிட்டு வைக்கப்பெற்றது. மார்க்கம் நகரில் உள்ள யுயniin ஊழஅஅரnவைல ஊநவெசநஇ 5665 14வா யுஎநரெந என்ற இடத்தில் உள்;ள அரங்கில் இந்த நிகழ்ச்சி இடம் பெற்றது. இந்த நிகழ்வுக்கு பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கினார். பிரதம விருந்தினராக மாகாணப் பாராளுமன்ற உறுப்பினரான திரு. லோகன் கணபதி கலந்து கொண்டார்.

நிகழ்வின் தொடக்கத்தில், கனடாவின் மதிப்புக்குரிய தமிழ்ப் பிரமுகர்களான பாஸ்டர் ஜெயானந்தசோதி, எழுத்தாளர் குரு அரவிந்தன், இயக்குனர் திரு. மதிவாசன் சீனிவாசகம், திரு. ப. ஜெயச்செல்வன், திருமதி. சுந்தரேஸ்வரி யோகராஜா, திருமதி. செல்வா அருள்ராஜசிங்கம், திருமதி. சந்திரிகா சின்னத்துரை, திருமதி. வனிதா சிவானந்தலிங்கம், திருமதி. ஜெயநிதி சிவானந்தசிங்கம், திரு கந்தசாமி இளந்திரையன், திருமதி. சிவரஞ்சிதம் ரஞ்சித் அலோசியஸ் ஆகியோர் இணைந்து இந்த நிகழ்வில் மங்கள விளக்கேற்றி வைத்தனர்.

மங்கள விளக்கேற்றியதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து, கனடிய தேசியப்பண், அகவணக்கம் ஆகியன இடம் பெற்றன. கனடிய தேசியப்பண், தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியன செல்வி மாதங்கி திருஞானசம்பந்தன் அவர்களால் இசைக்கப்பெற்றன. இதை அடுத்து பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களின் தலைமையுரை இடம் பெற்றது. தொடர்ந்து ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களின் வரவேற்புரையும், அடுத்து பிரதம விருந்தினர் திரு. லோகன் கணபதி அவர்களின் உரையும் இடம் பெற்றது. அவர் தனது உரையில் ‘தாம் வாழும் சமூகத்தின்மீது அக்கறை கொண்டவர்களே இலக்கிய வாதிகளாகப் பிரகாசிக்கின்றார்கள். இப்படியானவர்;களின் பங்களிப்பு எமது சமூகத்திற்கு இன்று அவசியம் தேவைப்படுகின்றது’ என்று குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து சுருவில் மக்கள் ஒன்றியத்தின் திரு. கிருஸ்ணபிள்ளை திருவருள், கனடா – வேலணை ம.ம. வி பழைய மாணவர் சங்கம் சார்பாகத் திரு. சிவஞானம் இளஞ்செழியன், கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் தலைவர் க. ரவீந்திரநாதன், ரொறன்ரோ பல்கலைக் கழக தமிழ் இருக்கைக் குழு சார்பாக திரு. சிவன் இளங்கோ, ஐயப்பன் ஆலயம் சார்பாகத் திரு குருசாமி சுப்பிரமணியம், தென்புலோலியூர் கிருஸ்ணலிங்கம் ஆகியோரின் வாழ்த்துச் செய்திகள் இடம் பெற்றன.

இந்த நிகழ்வுக்கு அடுத்ததாக கவிஞர் அகணி சுரேஸ் அவர்களால் கவிதை நூல் பற்றிய அறிமுக உரையும், அதைத் தொடர்ந்து முனைவர் திருமதி. வாசுகி நகுலராஜா அவர்களால் நூல் ஆய்வுரையும் நிகழ்த்தப்பட்டன. தனது ஆய்வுரையில் சில கவிதை வரிகளை எடுத்துக் காட்டி ஆசிரியரைப் பாராட்டினார்.

டாக்டர் போல் ஜோசப் அவர்களின் நூல் நயப்புரையைத் தொடர்ந்து, நூலாசிரியரின் ஏற்புரையும் நன்றியுரையும் இடம் பெற்றன.

 நூலாசிரியர் நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களுக்கும், வருகைதந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். அதன் பின் நூல் ஆசிரியரால் சிறப்புப்பிரதிகள் வழங்கப்பட்டன. நிகழ்வுக்கு வருகை தந்தோருக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராகத் திருமதி. ஜோதி ஜெயகுமார் பணியாற்றினார்.

Series Navigationமலைபடுகடாம் காட்டும் வாழ்வியல்ஜீவனோ சாந்தி
author

குரு அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *