This entry is part 4 of 8 in the series 20 அக்டோபர் 2024

வசந்ததீபன்

பிச்சைப் பாத்திரம் ஏந்தித் திரிகிறான்

வீடுகளெல்லாம் மூடப்பட்டிருக்கின்றன

புத்தன் அலுக்காமல் அலைகிறான்

பொம்மைகளிடம் பேசக் கற்றுக் கொண்டேன்

குழந்தைகளிடம் பாடக் கற்றுக் கொண்டேன்

கண்ணாடியிடம் சிரிக்கக் கற்றுக்கொண்டேன்

கவிதைகள் பூக்கின்றன

பூக்கள் பூக்கின்றன

ஈர இதயம்

போர்க்களம்

பூக்களம்

பாக்களம்

மன்னிப்பதா ?

தண்டிப்பதா ?

மனசைக் கேட்டுச் சொல்கிறேன்

புனைவுகளால் நெய்யப்பட்டது என் உள்ளம்

அதிர்வுகளை தாங்காது எழுப்பிடும் சப்தம்

கனவுகளையே ஜனித்துக் கொண்டிருக்கிறது

குமிழியிட்டுக் கொண்டிருக்கிறது

நின்றபாடில்லை

தூர்ந்து போன கிணறு.

Series Navigationதிட்டுத் திட்டாக தேங்கிய வனம்.நதியில் கனவுகளை படகாக்கி