வாழ்க்கை

This entry is part 4 of 10 in the series 22 டிசம்பர் 2024

அன்று

என் முப்பதுவயதுப்

பண்டிகையில்

ஆயிரம் வெள்ளியில்

எனக்கு உடுப்பு

ஐம்பது வெள்ளியில்

அப்பாவுக்கு உடுப்பு

இன்று 

எழுபது வயதில்

என் பிள்ளைகளின்

பண்டிகையில்

ஐயாயிரம் வெள்ளியில்

அவர்களுக்கு உடுப்பு

ஐம்பது வெள்ளியில்

எனக்கு உடுப்பு

விட்டெறிந்த கல்லாய்

வட்டப் பயணமாய்

வாழ்க்கை

அமீதாம்மாள்

Series Navigationஎனக்கு ஒரு கோப்பை மது கொடுங்கள்வாக்குமூலம்  

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *