சிறகசைப்பில் சிக்காத வானம்.

This entry is part 2 of 8 in the series 29 டிசம்பர் 2024

ரவி அல்லது

இரவெல்லாம்
இருந்து
வரைந்தேன்
வண்ணமற்று
வாஞ்சையின்
தூரிகையில்.
வடிவமற்றே
ஒளிர்ந்தது
இரவு
பகலாக
அதனழகில்.

இப்படியிருந்தால்
எப்படிக் காண்பதென்றார்கள்
பகலைப்
பார்வைக்குருடர்கள்.

பார்க்கும்
பகலாக்கிக்கொண்டிருந்தேன்
இவர்களுக்காக
இரவை
பார்க்குமாவல் மேவ.

விடிந்து விட்டதே
என்றார்கள்
எப்பொழுதும்போல
கலக்கத்தில் .

ம்ம்ம
பார்க்கலாம்
என்றேன்
பரவசம் சூழ.

மறுபடியும்
சொன்னார்கள்.
இப்படி இருந்தால்
எப்படிக்
காண்பதென்றார்கள்.

நான்
மறுபடியும்
வரைந்தேன்.
அவர்கள்
பார்ப்பதாக
முயன்று கொண்டே
இருந்தார்கள்
விழிகளுக்கு
திரையிட்ட

வண்ணமொரு
வினோதப்போக்கில்
என்னை விளையாட விட்டு.


-ரவி அல்லது.
ravialladhu@gmail.com

Series Navigationதி.ஜானகிராமன் – 100 கடந்த,  காவ்ய நாயகன் வணிகமேயானாலும்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *