This entry is part 3 of 8 in the series 29 டிசம்பர் 2024


ஆர் வத்ஸலா

நடைபாதையில் காய்கறி வியாபாரம்
கிழவிக்கு
டிரைவர் பொறுக்கிய காய்க்கு
கேட்ட பணத்தை
வீசினார்
காரில் வந்த கனவான்
பொறுக்கி எடுத்த காசை
சுருங்கிய கையால்
டிரைவர் கையில் வைத்து விட்டு
அடுத்த ஆளை கவனித்தாள்
கிழவி

Series Navigationசிறகசைப்பில் சிக்காத வானம்.மையச் சுழற்சியின் மாண்புகள்.