எட்டு நாள் வாரத்தில் !
மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++++
கண்ணே ! எனக்குத் தேவை உன் காதல் !
பெண்ணே ! உண்மை அது நீ அறிவாய் !
கண்ணே ! உனக்கும் தேவை என் காதல் !
எனக்கும் தேவை அது போல்;
காதலிப்பாய் ! கட்டிப் பிடிப்பாய் ! கண்ணே !
காதல் புரிவதைத் தவிர
வேறில்லை உனக்கு வேலை,
வாரத்தின் எட்டு நாட்களும் !
உன்னை நேசிப்பேன் ஒவ்வோர் நாளும்,
என்றும் நீ என் மனதில் தான் !
ஒன்று மட்டும் சொல்வேன்,
என்றும் உன்னைத் தான் நேசிப்பேன் !
நேசிப்பாய் என்னை !
நெருங்கிப் பிடிப்பாய் என்னை !
காதல் தவிரக், கண்ணே ! வேறொன்றில்
கவனம் எதற்கு
எட்டு நாள் வாரத் துக்கு ?
வாரத்தின் எட்டு நாட்களும்
நானுன்னைத் தான் நேசிப்பேன் !
வாரத் துக்கு
நாட்கள் எட்டும் போதவே போதா,
எனது கவனம் முழுதும்
உனக்குச் செலுத்த !
+++++++++++++++++++