வந்தேறி

  சித்ரா   கீரைக்காரம்மா மளிகைக்காரத் தாத்தா ஆட்டோக்கார அண்ணா உரையாடிய மொழி..     போக்குவரத்து நெரிசலில் வசைப் பாடிய சொந்தங்களின் அடுக்கு மொழி உட்பட..     எண்ணங்களின் சுருதியில் இணைந்து விட்ட மொழி. உணர்வுகளை மீட்டும் போது…

சீனியர் ரிசோர்ஸ்

  குளிர் அறையிலும் லேசாக வியர்ப்பது போல் இருந்தது சபேசனுக்கு. அவ்வறையில் அம்மூவரை தவிர வேறு யாரும் இல்லை. “என்னங்க இப்படி பண்ணீட்டீங்க! ..நீங்க    சீனியர் ரிசோர்ஸ் ன்னு தானே ஆன்சைட்டுக்கு அனுப்பி வைச்சோம்!” என்று   ஆரம்பித்தார் வட்ட மேசை சுற்றி…

தேடாத தருணங்களில்

சித்ரா --------------- கூழாங் கற்களை தேடிப் பழகிய கைகள் வெறுங்கையாகவே குவிந்து மூடிக்கொண்டன ஒர் தீர்மானத்துடன்.. தேடுவதை ஏன் நிறுத்திவிட்டாய் என மெல்ல தட்டிக் கேட்கிறேன் விரல்களை இதழ்களாக விரித்துக் காண்ப்பிக்கிறது தேடாத தருணங்களில் மட்டுமே உருவாகும் சுயமான ஒளிக் கற்களை…

இடமாற்றம்

_________ கண்களுக்கு எதிரே விரல்களுக்கு இடையே நழுவுகிறது தருணங்கள்   இந்நாட்டு மக்களின் மெல்லிய சிரிப்பை அதிராத பேச்சுக்களை கலைந்திராத தெருக்களை நேர்த்தியான தோட்டங்களை   வாரிச் சுருட்டி வெண் கம்பளத்தில் அடுக்கி அணைத்தபடி உடன் கொணர நேர்ந்தால் கை நழுவுகிற…

மார்கழி கோலம்

***********   முகத்தை வருடிய தென்றல் வண்ண வண்ண இளநிறங்கள் ஏற்று சின்னஞ்சிறு இருதய வடிவங்களில் அமர்ந்தது மேசையில் கிடந்த குறிப்பேட்டின் அட்டையில் ..   கைபேசி,கணினி,மடிகணினியின் மின்னூட்ட கயிறுகள் நெரிக்கும் மேசைக்கு - உயிர் தெளித்து மார்கழி கோலம் ...…

கவிதை பக்கம்

கவிதை பக்கம் காலியாக சிலகாலம் கவிதையான நிகழ்வுகளும் குறைவான காலம் திடீரென பள்ளிகூட அலுமினி கூட்டம் - பழைய சினேகிதிகள் ஒவ்வொருவராய் பேச்புக்கில் கண்டுபிடிப்பு - சபை நிறைந்தது பேச்புக் கூட்ட பக்க உரையாடல் பள்ளிகூட வராந்தாவாக சலசலப்பு பலவருடத்திற்கு பிறகு…

இந்நிமிடம் ..

இந்நிமிட குப்பிக்குள் பழைய நினைவுகளை புதிய நினைவுகளை திணிக்க திணிக்க திமிறி ஓடுகிறது அமைதி.. இந்நிமிட கொள் அளவில் வைக்க வேண்டியதை மட்டும் வைத்து எடுக்க எடுக்க -இந்நிமிடம் அடுத்த ,அதற்கடுத்த நிமிடம் .. மாற்று நிறங்களின் தறி பாவில் ஊடு…

கல்லா … மண்ணா

  என்னவோ  துரத்துகிறது எப்படியோ  தப்பிக்கிறேன்   போயிராத கோயிலிருந்து பிரசாதம் வருகிறது - கடவுள் கொடுக்க சொன்னதாக ..   ஒடி  ஒடி வருகிறேன் ரயில் கிளம்பிவிட்டது ! பகீர் என்றானது - வாழ்க்கை முடிந்து விட்டது  போல் ..…

தலைமை தகிக்கும்…

_____________ சூரியனை சூழ்ந்த கோளங்கள் சுற்றி திரிகின்றன தனி சுதந்திரத்தோடு தன்னை வட்டமடிக்கிற நிலா பெண்களோடு.. தலைமை பதவியின் தனிமையால் கலகலப்பாய் பழக ஆளில்லாமல் தனித்த தலைமை தகிக்க சூரியனின் பெருமூச்சும் உஷ்ணமாய் பூமியை நேருக்கு நேர் நிறுத்தி கேள்வி கேட்டால்,…

அகாலம் கேட்கிற கேள்வி

ஆழ்வேர் நேச காதலினாலோ பாசி படர், மாசு தொடர்பினாலோ பத்து மாதம் காத்திருக்கிற எப்பிறப்பும், விநாடியில் மறைக்கிற அகால மரணமும் அகங்காரமும், வன்மமும் தேவையா ? அரிதிலும் அரிதான வாழ்க்கையில் என கேட்கிறது காதோரம் ஓர் கேள்வி. அகாலத்தின் கூர்முனையின் புரிதலை…