பா. வெங்கடேசன் கவிதைகள் — சில குறிப்புகள் ‘ இன்னும் சில வீடுகள் ‘ தொகுப்பை முன் வைத்து …

This entry is part 1 of 15 in the series 23 ஜூலை 2017

‘ இன்னும் சில வீடுகள் ‘ தொகுப்பு 1995 – இல் முன்றில் வெளியீடாக வந்துள்ளது. இவரது கவிதைகள் எளியவை ; தகவல்தன்மை கொண்டவை. சில இடங்களில் வாக்கியங்களில் இடையில் முற்றுப்புள்ளி அமைந்துவிடுகிறது. இது கவிதையில் வடிவச் சிதைவை உண்டாக்கிவிடுகிறது. முதல் கவிதை ‘ பேறு ‘ . இது கிராமியப் பாங்கு கொண்டது . கவிதையின் தொடக்கமே நன்றாக இருக்கிறது. சமீபத்தில் காதல் சுருக்கிட்ட கயிற்றில் தொங்கினாளாம் ஒரு பெண் — ‘ காதல் தோல்வியால் […]

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

This entry is part 2 of 15 in the series 23 ஜூலை 2017

அவன் நடந்து போய்க்கொண்டிருக்கிறான் அவன் நடந்து போய்க்கொண்டிருக்கிறான் தன்னுள் தன்னை அதிகம் நிரப்பிக் கொண்டதில் வழிந்து கொண்டிருக்கிறான் வானத்தை வளைத்துப் போட்ட பின் கடல்களையும் சொந்தமாக்கிய மகிழ்ச்சி அவன் நெஞ்சில் கற்பனைக் கோட்டையின் சுவர்கள் பளபளக்கின்றன அவன் மனத்தில் இருந்த கூரிய முட்காடு முற்றிலும் எரிக்கப்பட்டதில் அவ்விடம் கருமை பூத்துக் கிடக்கிறது அவன் பின்னால் வந்து விழுகிற பழிச்சொற்கள் அவன் செவி புகுவதேயில்லை யாரும் ஏற்றுக் கொள்ளாத தனி ராஜ்ஜியத்தில் அவன் மட்டும் இருக்கிறான் ராஜாவாக … […]

கம்பன் கஞ்சனடி

This entry is part 4 of 15 in the series 23 ஜூலை 2017

பிரசன்ன ரணதீரன் புகழேந்தி யாரும் பார்க்காத நேரமது சட்டென மணமகனை தள்ளிவிட்டு மணமகள் தலைதெறிக்க ஓடினாள். மண்டபவமே திடுக்கிட்டது. மணகோலத்தில் நடந்து வந்துகொண்டிருந்தவள் திடிரென ஓட்டமெடுக்க காரணமென்ன என புலம்பியபடியே கண்ணாடி முன் நின்று யோசித்து கொண்டிருந்தாள் பர்வதம். அச்சமயம் “மா! மா! அம்மா” என வாசலில் நின்று கத்தி கொண்டிருந்தான் பலதேவா. “டேய் என்னடா பிரச்சனை” என்று வினவியபடியே வந்தாள். “எதுக்கு மா கார்லாம் புக் பண்ணிருக்க ஆட்டோல போய்ட்டு வந்துருக்கலாம்ல” “டேய் மானத்த வாங்காத […]

தொடுவானம் 179. காதல் என்பது இதுதானா?

This entry is part 5 of 15 in the series 23 ஜூலை 2017

            பன்னீர் செல்வன் இரண்டாம் நாள் இரவும் எங்களுடன் தாங்கிக்கொண்டான்.மூவரும் இரவில்உறக்கம் வரும்வரை பேசிக்கொண்டிருந்தோம்.           காலையிலேயே இருவரும் வெளியேறிவிட்டனர். கோவிந்த் பள்ளிக்கு டாக்சியில் புறப்பட்டான். அவன் வாகனம் வாங்கவில்லை. அதை ஓட்டும் பயிற்சியும் பெறவில்லை. பன்னீர் பேருந்தில் ஏறி சிங்கப்பூர் பல்கலைக்கழகம் சென்றுவிட்டான். மாலை வரை நான் அறையில் தங்கினேன். கோவிந்த சேகரித்து வைத்திருந்த தமிழ் நாவல்களை நோட்டமிட்டேன். ஏறக்குறைய மு.வ.வின் அணைத்து நூல்களும் […]

மாயாவதியின் ராஜினாமாவும் அரசியல் கணக்குகளும்

This entry is part 6 of 15 in the series 23 ஜூலை 2017

மணிகண்டன் ராஜேந்திரன் ஜனாதிபதி,துணை ஜனாதிபதி தேர்தலில் நாடே பரபரப்பாக இருக்கிறது.. திடிரென்று பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி தலித்துகளின் பிரச்சனையை பாராளுமன்றத்தில் பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று தன்னுடைய மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது இந்திய அரசியலில் அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது.. எப்போதும் போல மாயாவதியின் ராஜினாமாவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றது… எல்லோருக்கும் இப்போது எழும் ஒரே கேள்வி மாயாவதியின் பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் […]

பையன்கள் : சுப்ரபாரதிமணியன்

This entry is part 7 of 15 in the series 23 ஜூலை 2017

” அந்த பீகார் பையனெ எதுக்குடா அடிச்சே ” ” திருட்டுப் பய… கை ..வெச்சுட்டான்.”” ” எங்க..” “ சண்முகம் மாளிகைக் கடையிலே என்னமோ சாமான திக்கித் திணறி கேட்டிருந்தவன் சக்கரை ஒரு கிலோ பாக்கெட் கட்டி வெச்சிருந்ததை எடுத்திருக்கான். ” ” என்ன ஒத்துட்டானா… இல்ல சாத்தனும்னு சாத்தறீங்களா. ” ” ஒத்துட்ட மாதிரிதா உளறுனான். அவன் பாஷை யாருக்குத் தெரியும். ” அவன் பீகார்க்காரன , ஒரிசாக்காரனா , இல்லெ…” ” இப்போ […]

பறப்பியல் பொறித்துவப் புரட்சி ! வானில் பறக்கும் தரைக் கார் “வாகனா” !

This entry is part 8 of 15 in the series 23 ஜூலை 2017

Posted on July 22, 2017 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா துணைப் பேராசிரியர் மேரி கம்மிங்ஸ்  http://news.mit.edu/2010/profile-cummings-0405 http://mems.duke.edu/faculty/mary-cummings http://www.bbc.com/future/story/20131031-a-flying-car-for-everyone https://en.wikipedia.org/wiki/Missy_Cummings ++++++++++++++++++++ பறப்பியல் பொறித்துறைப் புரட்சி !  செங்குத்தாய் உயரும் கார் ! சீராக ஏறி இறங்கும் தரைக் கார் !  முன்னோடி வாகனம் உருவாகி விட்டது ! வாணிபத் தயாரிப்பு வாகனமாய்  வாசலில் நிற்கப் போகிறது !  புதிய வானூர்தி   பரிதி சக்தியால் பறக்கும் ! எரி வாயு வின்றிப் […]

கவிநுகர் பொழுது-17 ( மு.ஆனந்தனின், ‘யுகங்களின் புளிப்பு நாவுகள்’,நூலினை முன்வைத்து)

This entry is part 9 of 15 in the series 23 ஜூலை 2017

மு.ஆனந்தனின், ‘யுகங்களின் புளிப்பு நாவுகள்’,நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரையின் கட்டுரை வடிவமாக இதைக் கொள்ளலாம். யுகம், புளிப்பு, நா மூன்றின் கூடுகை, யுகங்களின் புளிப்பு நாவுகள். புளிப்பு என்பது ஒரு சுவை. புளித்துப்போதல் என்பது சலித்துபோதலின் குறியீடு எனக் கொள்ளலாமா? புளித்த பதார்த்தங்கள் கெட்டுப் போனதன் விளைவு என்பதாகவும் பொருள் படக்கூடும். அவ்வாறெனில் திரிந்து போன ஒன்றை அடையாளம் கொள்வதற்கான சாத்தியத்தைக் கொண்டது நா. அந்த நாவே புளிப்பாய் மாறினால் என்னவாகும். அதுவும் […]

ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2017

This entry is part 10 of 15 in the series 23 ஜூலை 2017

அன்புடையீர், இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.  ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2017 http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot 20000 பார்வைகளை எட்டி விட்டோம். கடந்த மாத இதழுக்கு (>250 பார்வைகள்) தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பிப் படித்திடச் சொல்லுங்கள். நன்றி. தமிழ் மலர் குழு