முக்காடு போட்ட நிலா

This entry is part 3 of 4 in the series 24 மார்ச் 2024

                                                                        மீனாட்சி சுந்தரமூர்த்தி                                                                வானவீதியில் முழுநிலா வெள்ளை நிறமெனச் சொல்ல முடியாது பழுப்பு நிறத்தில்  வெண்ணையைத் தட்டி மெழுகியது போல் நகர்ந்து கொண்டிருந்தது. . அழகு நங்கை ஒருத்தி தன் சேலைத் தலைப்பால்  முகத்தை மூடிக்கொண்டது போல் அன்னத்தின் மெல்லிய தூவி மேகம் ஒன்று அதை மறைத்தது. சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகமில்லை, பெரிய கடை வீதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தேனீர்க்  கடைகள் திறந்திருந்தன. காய்கறி, பழங்கள் ஏற்றி வந்தவர்களும், மயக்கம் தெளிந்து எழுந்த குடிமகன்களும், […]

ஜானி

This entry is part 2 of 4 in the series 24 மார்ச் 2024

‘மாப்பிள்ளைக்கு அமெரிக்காவில் வேலையாம். திருமணத்துக்குப்பின் மீராவும் அமெரிக்கா போய்விடுவாளாம்.’ என்று மற்றவர்கள் பேசும்போதும் சரி, தன் நெருங்கிய தோழிகள் ‘நீ கொடுத்துவச்சவடீ’ என்று சொல்லும்போதும் சரி, முன்னைவிட, தன் முகம் மிக அழகாக இருப்பதுபோல் உணர்ந்தாள் மீரா. ‘முகம் மட்டுமா இனி முகவரியும் அழகாக இருக்கலாம். மாப்பிள்ளை குரு என்கிற குருராஜ், கணினி மென்பொருள் பொறியாளர். இரண்டு ஆண்டுகளாக அவன் இருப்பது அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில். தனி வீடு. தனியாகவே இரண்டு ஆண்டுகள் வாழ்ந்தவன். இப்போது மீராவோடு […]

ஆசை வெட்கமறியாதோ..?

This entry is part 1 of 5 in the series 18 பிப்ரவரி 2024

 குரு அரவிந்தன் (நான் காதல் என்றேன், அவள் டேற்ரிங் என்றாள். ஒன்று மனசைத் தொட்டு உடலைத் தொடுவது,மற்றது உடலைத் தொட்டு மனசைத் தொடுவது.சரியா பிழையா தெரியவில்லை. ) எழுபது கிலே மீற்றர் வேகத்தில் சென்ற நான் சைகைவிளக்கு சிகப்பு நிறத்திற்கு மாறவே வண்டியை நிறுத்தினேன். அதே வேகத்தில் வந்த அவள் எனது வண்டிக்கு அருகே தனது சிகப்புநிற வண்டியை நிறுத்திவிட்டு உதட்டுக்குச் சாயம் பூசிக்கொண்டிருந்தாள். இப்படியான முகஅலங்காரங்களை சாதாரணமாக சைகை விளக்குகளில் வண்டியை நிறுத்தும் போது பெண்கள் […]

பயணமா? பாடமா?

This entry is part 2 of 2 in the series 24 டிசம்பர் 2023

நாளை பாலி பயணத்திற்கு கயல்விழி  தயாராகிக் கொண்டிருக்கிறார். மகள் கலையரசி வெற்றிகரமாக உயர்நிலை   3ஐத் தொடர விருக்கிறார்.  மகன் காவியன் இரண்டு மாதங்களில்   தேசிய   சேவையில் சேரவேண்டும். விடுமுறை மாதம். டிசம்பர். இரண்டு மாதமாகவே கலை ‘பாலி, பாலி’ என்று புலம்பிக்கொண்டிருக்கிறார். கயல்விழி இந்தப் பயணத்தை  ஏற்பாடு செய்வது முக்கியமாக கலையரசிக்காகத்தான்.  கயல்விழிக்கு முத்தையா என்பவர்தான் பயணமுகவர். புள்ளி வைத்தால் போதும். கோலம் அவர் பொறுப்பு. எங்கே   தங்குவது? போக்குவரத்து ஏற்பாடுகள்  […]

ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 8

This entry is part 4 of 6 in the series 17 டிசம்பர் 2023

( 8 ) வணக்கம்ங்கய்யா….-கை கூப்பிச் சொல்லியவாறே ஒருவர் உள்ளே நுழைவதைப் பார்த்து பதில் வணக்கம் சொன்னான் இவன். ஐயா…கீழுத்து கிராமத்துலேர்ந்து வர்றேனுங்க…பக்கத்து வெங்கிமலைல ரெண்டு நாளா சரியான மழைங்க… நின்றுகொண்டே சொன்ன அவரை, முதல்ல உட்காருங்க….என்றான் இவன். இருக்கட்டுங்கய்யா…என்றவாறே பேச்சைத் தொடர்ந்தார் அவர். இந்த அலுவலகத்திற்கு வந்த நாள் முதல் கவனித்துக் கொண்டுதான் வருகிறான். வருகிறவர்கள் கிராமத்து மக்கள். ரொம்பவும் பயந்தவர்களாயும், மரியாதை கொண்டவர்களாயும், இருக்கிறார்கள். பொது ஜனம் அலுவலகங்களை அணுகும்போது அவர்களுக்கு ஏனிந்தத் தயக்கம்? […]

நாவல்  தினை              அத்தியாயம் நாற்பத்துநாலு பொ.யு 5000

This entry is part 3 of 6 in the series 17 டிசம்பர் 2023

                                                             பூர்த்தி விடிந்தபிறகு தான் கரப்புகள் எவ்வளவு அழிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்தது. கிட்டத்தட்ட முழு இனப் படுகொலை.  அரசாங்கத்தில் வெவ்வேறு நல்ல பதவிகளில் இருக்கும் மூத்த,  நிறம் மங்கிய கருப்புகள்  அரண்மனை வாசலில் பழைய மோட்டார் வாகனங்களின் சக்கரங்கள் முன்னும் பின்னும் நகர நசுக்கப்பட்டு ரத்தவாடையோடும் தசை நாற்றத்தோடும் தெரு முழுக்க அங்கங்கே சாணகம் போல் ஒட்டியிருந்தன. வீடுகளுக்குள் இருந்து இழுத்து வரப்பட்ட கரப்பு இனப் பெண்கள் விஷவாயு சுவாசிக்க வைக்கப்பட்டு உடல் முறுக்கி இறந்தன. பள்ளிகளுக்குள் […]

நாவல்  தினை        அத்தியாயம் நாற்பத்துமூன்று  பொ.யு 5000

This entry is part 2 of 3 in the series 10 டிசம்பர் 2023

   வானம்பாடியின் பயோ தொலைபேசி உள்ளங்கையில் அழைத்தது. காலை நான்கு மணிக்கு குழலனின் அழைப்பு அது.  அவனோடு பேசாமல் இரண்டு நாட்கள் அவளுக்கும் குயிலிக்கும் கடந்திருக்கின்றன. எல்லாம் குயிலியும் வானம்பாடியும் ஒரு வாரமாகக் கட்டில் பகிர்ந்து கொண்டதை குழலன் பகடி செய்த பிறகுதான்.  வானம்பாடியின் கட்டிலில் சிறு ஒலி ஏதோ வந்ததில் தொடங்கியது இது. ராத்திரி முழுக்க அவள் புரண்டு படுக்கும் போது வந்த ஒலி என்று ஆறடி தூரத்தில் அடுத்த கட்டிலில் துயின்றிருந்த குயலி சொல்ல, […]

ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 7

This entry is part 3 of 3 in the series 10 டிசம்பர் 2023

இருக்கட்டு;ங்கய்யா…பன்னெண்டு மணி வரைக்குமாச்சும் எரியட்டும்..;பிறகு அணைச்சிக்கிடுவோம்…- சிரித்துக் கொண்டே சொன்னார் லட்சுமணன். நம்ம வீடுகள்னா இப்டி பகல்ல லைட்டுப் போடுவமா? இந்த எடத்துலெ எவ்வளவு வெளிச்சம் இருக்கு…அது போதும்…அணைங்க… கேட்கமாட்டீங்களே… என்றவாறே விளக்கை அமர்;த்தினார் லட்சுமணன். எந்தமாதிரியான சூழ்நிலைல உட்கார்ந்திருக்கோம்ங்கிறதைவிட, எப்படி வேலைசெய்கிறோம்ங்கிறதுதானே முக்கியம் லெட்சுமணன்? அது உள்ளதுதானுங்க…ஆனாலும் பொதுமக்கள் வந்து போகுற இடமில்லீங்களா? பார்வையா இருந்தாத்தானே மதிப்பா இருக்கும்… அவுரு சொல்றதும் சரிதான சார்…நீங்க ரொம்ப சிம்பிள் சார்…அப்படியிருக்கக் கூடாது…ஆபீசுக்குன்னு உள்ள ஸ்டேட்டசை மெயின்டெய்ன் பண்ணத்தான் […]

ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 6

This entry is part 2 of 2 in the series 3 டிசம்பர் 2023

( 6 ) அய்யா, இங்கே சொருகட்டுங்களா…? – கேட்டவாறே எரிந்து கொண்டிருக்கும் பத்தியைக் கையில் வைத்துக் கொண்டு இடம் பார்த்துக் கொண்டிருந்தார் பியூன் லட்சுமணன். இந்த பாருங்க லட்சுமணன், நான் உங்களுக்குப் பலமுறை சொல்லிட்டேன்…என்னை இப்படி ஐயா கொய்யான்னெல்லாம் கூப்பிடாதீங்கன்னு…கேட்க மாட்டேங்கிறீங்க. சாதாரணமா சார்ன்னே கூப்பிடுங்கன்னு சொன்னா திரும்பத் திரும்ப இப்டியே கூப்பிடுறீங்களே? எனக்கு ரொம்பக் கூச்சமா இருக்கு… ஐயா, உங்களை மாதிரி மனுசாளைக் கூப்பிடாம வேறே யாரைக் கூப்பிடச் சொல்றீங்க? நல்ல மனசுள்ளவாளைத்தான் மனசோட […]

நாவல்  தினை              அத்தியாயம் நாற்பத்திரண்டு பு.யு 5000

This entry is part 1 of 2 in the series 3 டிசம்பர் 2023

   சகல இன சஞ்சீவனி ஏற்றுமதிக்காக உருவாக்கி வாங்குவார் இல்லாமல் போன கண்கவரும் தகரக் குடுவைகள் கோகோ பானக் குடுவைகள் போல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.  மாட்டு ஈக்களின் இறகுகளும், கால்களுமாக மிதந்து கொண்டிருக்கும் திரவம் கறுப்பு வண்டல் கீழே தேங்கியிருக்க மேலே அழுக்கு நெடியும் நிறமுமாக காய்ச்சிக் கிளறப்பட்டபடி எங்கணும் நிறைந்திருந்தது.  சில குடுவைகளில் இருந்து திரவம் கசிந்து அவை வைத்திருக்கும் இடம் முழுக்க பாதாளச் சாக்கடை வாடை தூக்கலாக மேலெழும்பிக் கொண்டிருந்தது.  மெல்ல ஊரும் வாகனங்கள் […]