Articles Posted in the " கதைகள் " Category

 • பயணம் – 3

    ஜனநேசன்  3             பாண்டியன் அன்றைய அஸ்ஸாம் மாநிலமாக இருந்த ஷில்லாங்கில் இந்திய ராணுவத்தில் துணைக் கேப்டனாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு 22 வயது.  ஆறடி உயரத்தில் கறுப்பாக கட்டான தேகம்.  களையான முகம்.  ஞாயிற்றுக்கிழமை அன்று பகலில் நான்கு மணி நேரம் முகாமிலிருந்து வெளியே சென்று வர அனுமதி உண்டு.  அப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமை முகாமுக்கு வெளியே சகவீரர்களுடன் நகரின் நடுவில் அமைந்திருந்த பூங்காவிற்கு வந்தனர்.             கனத்து வளர்ந்து விரிந்து நிழல்பரப்பிய […]


 • பூக்கொத்து

  பூக்கொத்து

    கடல்புத்திரன்   ஜீவாவிற்கு அம்மாவையும் , அப்பாவையும் இந்த நாட்டுக்கு எடுத்த பிறகு சாதனை புரிந்தது போல இருக்கிறது . மனதில் நிம்மதி பூக்கத்தான் செய்தது . ஆனால் , கிராமத்தைப் போல வருமா ? . பழக்கப்படாத கட்டடக்காடாக விரியும் , செயற்கையாகப் படைக்கப்பட்ட நகரை நினைத்தால் பயமாக இருக்கிறது . சாலைகளில் பொறுமையில்லாமல் ஓடும் வாகனங்களினால் முதியவர்களே அதிகமாக உதிர்கிறார்கள் . அங்கே இயற்கை இவர்களைஅரவணத்துக் கொள்கிறது . இங்கே இல்லை . […]


 • பயணம் – 1,2

  பயணம் – 1,2

    ஜனநேசன்               “சீனாக்காரப் பாட்டி உங்களுக்கு ஒரு தபால்!” என்று தபால்காரப் பெண் ஒரு கடிதத்தைக் கொடுத்துப் போனாள்.  அன்று சனிக்கிழமை மகன் ஜெயக்கொடி வீட்டில் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தவன், அம்மா ஓடிப்போய் தபால் வாங்கி ஆர்வமாய் பிரித்து வாசிப்பதைக் கவனித்தான்.  கண்ணீல் நீர்வழிய அம்மா வாசித்தாள்.  விரைந்து எழுந்து கடிதத்தை வாங்கிப் பார்த்தான்.  எழுத்துக்கள் எல்லாம் ஆங்கில எழுத்துக்களாக இருந்தன. வார்த்தைகள் புரியவில்லை.  அம்மாவின் பெயர் மட்டும் புரிந்தது.  அனுப்பியவர் ‘லிங்டாங், ஷில்லாங் […]


 • ’மனுசங்க’

  ’மனுசங்க’

                                                                           எஸ்ஸார்சி    ‘சார் இருக்காரா’ வாயிலில்  ஓர் கூப்பிடும்  குரல். அவன் மனைவி எட்டிப்பார்’த்தாள். யாரோ ஒரு இளைஞன் யூனிகான் வண்டியிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தான்.  வீட்டினுள்ளே  ஏதோ  காரியமாக  இருந்த அவன் வீதிப்பக்கமாக ‘யாரு’  என்று சொல்லிக்கொண்டே எழுந்து வந்தான். ‘யாரோ புதுசா வந்திருக்காங்க பாருங்க’ மனைவி சொல்லிவிட்டு […]


 • கூட்டுக்குள் கல்லெறிந்தவள்

  கூட்டுக்குள் கல்லெறிந்தவள்

      முனைவா் சி. இரகு      அவள் ஒன்றும் அழகில்லை. ஆனால் அறிவானவள், தன் அறிவைப் பயன்படுத்தி ஒரு குடும்பம் என்கின்ற அழகான கூட்டினை உருவாக்கினாள். நாளெல்லாம் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்க்கை ஓடத்தில் பயணித்துக் கொண்டிருந்தாள். தனக்கென வாழாமல் தன் குடும்பதிற்காகவும், தன் பிள்ளைகளே வாழ்க்கை என்ற முனைப்பில் இரவும் பகலும் அவா்களின் நினைப்பில் வாழ்ந்துகொண்டிருந்தாள். அவளின் அறிவையும் ஆளுமையும் கண்ட அவ்வூா் மக்களுக்கு சிறந்த முன் மாதிரி பெண்ணாகவும் விளங்கினாள். இதனைக் […]


 • யார் சரி?

  யார் சரி?

      மனோ. பணி ஓய்வு பெற்றவர். எழுபதை நெருங்கிவிட்டார். தேக்காவில் வாசம். பணியில் இருக்கும்போது நேரம் அவருக்குப் பிரச்சினையாக இருந்தது. காசு கிள்ளியதில்லை. இப்போது நேரம் இருக்கிறது. காசு அவ்வப்போது கிள்ளலாம். இரண்டு மகள்கள். மதிப்புமிக்க வேலை, பணிப்பெண் வசதிகளுடன் தனித்தனி இடங்களில் தனித்தனி வீடுகளில் இருக்கிறார்கள். வார இறுதியில் ஒன்றுகூடல்கள் நடக்கும்.   மனோவின் மனைவி மாது என்கிற மாதவி. அவரும் அறுபதைத் தொட்டுவிட்டார். குளிக்கும் சோப்பு தேய்ந்து ஒட்டாகிவிட்டால் அதைப் புதிய சோப்புடன் […]


 • சந்திப்போமா…

  சந்திப்போமா…

      சிவகுமார்   இருபது வருடங்களுக்கு முன் ஜகனும் கருணாவும் தீர்மானமாக அந்த முடிவை எடுத்தார்கள். கருணாவுக்கு கடவுள் மேலும், கர்மாவிலும், வாழ்க்கை முழுவதும் முன்பே தீர்மானிக்கப் பட்டது என்பதிலும் நம்பிக்கையில்லை. வாழ்க்கையை ஒருவன் அந்த நிமிடம் எது சரி என்று படுகிறதோ, அதைச் செய்து தீர்மானிக்க வேண்டும் என்பது அவன் கருத்து. அதற்கு நேர் எதிர் கருத்து ஜகனுக்கு. தன் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் கடவுள் அருகிலிருந்து கவனித்துக் கொள்கிறார், முன்பே செய்த முன்வினைப் […]


 • துஆ

  துஆ

    இஸ்லாமிய கலாச்சாரத்தின் பின்னணியில் நோன்புப் பெருநாள் சிறுகதை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆமினாவும் மஹ்முதாவும் டன்லப் தெரு அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் ரமலானின் தராவீஹ் தொழுகையில் கலந்துகொள்கிறார்கள். 2020,2021ல் கொவிட் கெடுபிடிகள். பாதுகாப்பு இடைவெளி, முன்பதிவு என்று பள்ளியில் சந்திப்பதையே அவர்கள் நினைத்துப் பார்க்கமுடியாத வகையில் இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. பள்ளிகள் மீண்டும் வழக்கம்போல் செயல்படவேண்டும் என்ற அவர்களின் துஆவை அல்லாஹ் கபுல் செய்துவிட்டான். 2022 ஏப்ரல் 2ஆம் தேதி அவர்கள் பள்ளியில் சந்தித்துக் […]


 • கும்பகோணத்திலிருந்து ஒரு தேள்

  கும்பகோணத்திலிருந்து ஒரு தேள்

    சிவகுமார் கும்பகோணத்திலிருந்து வந்த பஸ் கோயம்பேடு நிலையத்தில் நுழையும் போது காலை மணி ஆறரை இருக்கும். சரியாகத் தூங்காமல் கண் விழித்த குகன் மனதில் அம்மாவின் முகம் சற்றென்று தோன்றி அம்மாவை நினைத்துக் கொண்டான். சுமாராக படித்த அவனுக்கு வேலை எதுவும் கிடைக்காமல் குடும்ப பாரத்தை சுமக்க வேண்டி  சென்னையில் கட்டிட வேலைக்கு ஒப்புக் கொண்டு முதல் முறையாக பெரிய நகரத்திற்கு வந்திருக்கிறான். மெளலிவாக்க்ததில் உருவாகிக் கொண்டிருக்கும் பல அடுக்கு மாடி குடியிருப்பில் எலெக்ட்ரிகல் அஸிஸ்டெண்ட்டாக […]


 • நான்காவது கவர்

  நான்காவது கவர்

    பா. ராமானுஜம்   மூன்று  கவர்களில் இரண்டைக்  கொடுத்துவிட்டேன்; எந்தப் பிரச்னையும் இல்லை. வாங்கிக்கொண்ட ஊழியரின் மெருகேற்றப்படாத கருப்பு கிரானைட் முகத்தில் ஒரு வினாடி ஒளி தோன்றி மறைந்தது. கழுத்தில் தொங்கிய அடையாள அட்டை அவர் பெயர் சாகண்டி வீரய்யா என்று அறிவித்தது.   வீரய்யா உடனடியாக வேலையில் இறங்கினார். ‘பைட்ட கூச்சண்டி, சுப்பாராவ்காரு. பிலுஸ்தானு’ (வெளியில் உட்காருங்கள், சுப்பாராவ் ஸார். கூப்பிடுகிறேன்’). அவர் குரல் உறுமி மேளம் மாதிரி ஒலித்தது.   மூன்றாவது கவரை […]