நீலே ஒபெர்முல்லர்
guardian.co.uk, Wednesday 30 May 2012 12.24 EDT
பாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் மரணங்கள்
நீலே ஒபெர்முல்லர்
guardian.co.uk, Wednesday 30 May 2012 12.24 EDT
பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால்தான் சென்ற வருடம் தன் மகள் ஷமின் இறந்தாள் என்பதை ஜினோ ஒப்புகொள்ள கஷ்டப்படுகிறார். “என்னுடைய மகள் இறக்கவேண்டிய அவசியமில்லை” என்று பத்து குழந்தைகளுக்கு தாயான 62 வயது ஜினோ மெல்ல சொல்கிறார். ”சமிமின் பாவங்களை என்னால் மன்னிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், அவளுக்கு உதவி செய்ய எனக்கு ஒரு வாய்ப்பளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்”
பாகிஸ்தானின் சட்டங்களின் படி, தாயாரின் உயிரை காப்பாற்ற மட்டுமே கருக்கலைப்பு சட்டப்பூர்வமானது. 97 சதவீத முஸ்லீம் நாடாக இருக்கும் இந்த நாட்டில், திருமணத்துக்கு வெளியே பாலுறவு கடுமையாக தண்டிக்கப்படும் இந்த நாட்டில் கருக்கலைப்பு என்பது மிகவும் கடுமையாக எதிர்கொள்ளப்படுகிறது. ஷமின் கருவுற்றபோது அவர் திருமணமாகியிருக்கவில்லை. அப்பா இல்லாமல் குழந்தையை பெற்றுக்கொள்வதற்கு அஞ்சி கருக்கலைப்பு செய்து கொள்ள ஒரு தாதியை அணுகியபோது அவர் மலேரியா எதிர்ப்பு மருந்தை கொடுத்திருக்கிறார். குழந்தை வயிற்றில் இருந்தபோது ஷமிம் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்.”அப்போதுதான் என்னை கூப்பிட்டு முழுவதையும் சொன்னாள். அவளை உடனே கிளினிக்குக்கு கூட்டிச்சென்றேன். ஆனால் நேரம் கடந்துவிட்டது. அவள் அன்றே இறந்துவிட்டாள்”
ஷமினின் கதை பாகிஸ்தானில் அடிக்கடி நடக்கும் பொதுவான கதை. குட்மாச்சர் இன்ஸ்ட்டிட்யூட்டின் கணக்கின்படி, வருடந்தோறும் பாகிஸ்தானில் 890000 பெண்கள் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு செய்துகொள்கிறார்கள். சுமார் 800 பேர்கள் இதில் இறக்கிறார்கள். சுமார் 197000 பேர்கள் கருக்கலைப்பு சரியாகச் செய்யப்படாததால், சிக்கல்களுக்கு ஆளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். “இவை எல்லாமே மிகவும் குறைவாக காட்டப்படும் எண்ணிக்கைகள். ஏனெனில் பெரும்பாலான கருக்கலைப்புகளும், சிக்கல்களும் பேசப்படுவதே இல்லை” என்று நிகாட் கான் கூறுகிறார்.
“இதில் பிரச்னையே, இந்த கருக்கலைப்புக்கு சட்டப்பூர்வமான் அங்கீகாரம் இல்லை என்பதுதான்” என்று ஷிரிகட் கா பெண்கள் நலவாழ்வு மையத்தின் தலைவராக இருக்கும் பௌவுஸியா விகார் கூறுகிறார். “கருக்கலைப்புக்காக செல்வதே ரிஸ்கான விஷயமென்றும், கருக்கலைப்பின்போது பெண் இறந்துவிட்டாள் அவளே குற்றவாளி” என்று முன்கூட்டியே தீர்ப்பு எழுதப்பட்டுவிடுகிறது என்கிறார். இந்த ரிஸ்கை பெண்கலே தனியாக எடுக்கலாம். ஆனால், “பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்கு சென்று பிறகு அதனால் உடல்நலமற்று போனால், அந்த பெண்ணால் வீட்டு வேலைகளை செய்யமுடியாது. மேலும் அந்த குடும்பம் பொருளாதார ரீதியில் நசியவும் ஆரம்பிக்கும்.” என்று கான் கூறுகிறார். “இவ்வாறு அந்த பெண் குடும்பத்துக்கு வேலைகளை செய்யமுடியாமல் போவது, குடும்பத்துக்கும் ஏன் நாட்டுக்குமே பொருளாதார் ரீதியிலும் சுமையாகிவிடுகிறது”
மில்லனியம் வளர்ச்சி குறிக்கோள் 5 இன் படி, கர்ப்பமாவதன் மூலமாக பெண்கள் இறப்பதை 75 சதவீதம் குறைக்க வேண்டும் என்றும், முழு நாட்டுக்கும் கர்ப்ப கால சுகாதார வசதியை 2015இற்குள் கொடுக்க வேண்டும் என்று கோருகிறது, இருப்பினும் இந்த குறிக்கோள் அடைவது கடினமானது, ஜனவரி 2012இல் வெளிவந்த ஒரு ஆய்வின்படி, கருக்கலைப்பு சதவீதம் அதே அளவில் இருந்தாலும், 1995இலிருந்து 2008க்குள் கருக்கலைப்பு பயிற்சி இல்லாத சிறுமருத்துவமனைகள் மூலமாக பெற்ற கருக்கலைப்புகளின் வீதம் 44இலிருந்து 49ஆக உயர்ந்திருக்கிறது. கருக்கலைப்பை சட்டத்துக்கு புறம்பானதாக ஆக்குவது என்பது ஏன் கருக்கலைப்பு எண்ணிக்கையை அதிகரிக்கிறது என்பதற்கு சரியான காரணம் உண்டு. கருக்கலைப்பை சட்டத்துக்கு புறம்பானதாக ஆக்கும் நாடுகள், மிகச்சிறிதளவே கருக்கலைப்பு, கர்ப்பகால சுகாதாரம் ஆகியவற்றில் சமூக முதலீட்டை செய்கின்றன. இதனால், கர்ப்பகால சுகாதாரம் குறைவதால், தேவையற்ற கர்ப்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால், திருட்டுத்தன கருக்கலைப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
ஷாநாஸின் கதையும் இதேதான். திருமணமான ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதால், ஷாநாஸ் கர்ப்பமடைந்தார். அவரது தாயார் அதனை கண்டுபிடித்ததும், ஷாநாஸை கடுமையாக அடித்தார். இருப்பினும், தனது 17 வயது மகளை தாதியிடம் கூட்டிச்செல்ல சம்மதித்தார். ஷாநாஸ் அந்த வலிநிறைந்த அனுபவத்தை சொல்கிறார். ”அந்த தாதி ஒரு மரக்குச்சியை என்னுள் செருகினாள். அது வெளியே வந்தால் இன்னும் இரண்டு நாளைக்கு மீண்டும் அதனை உள்ளே செருக சொன்னாள். ” அந்த வழிமுறை ஷாநாஸுக்கு நிரந்தர மூத்திரக்குழாய் காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அவள் இனி குழந்தையே பெறமுடியாத நிலைக்கும் தள்ளிவிட்டுவிட்டது. தனது கௌரவத்தை காப்பாற்றிகொள்ள ஷாநாஸ் ஒரு மனநிலை சரியில்லாதவரை திருமணம் செய்யவேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டார்.
“இவை போன்ற விஷயங்களால், கருக்கலைப்பு ஒரு மனித உரிமையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று டாக்டர் தாபிந்தா சோருஷ் கூறுகிறார். “கருக்கலைப்புக்கும், திருமணத்துக்கு முந்திய உறவுக்கும் இருக்கும் அவப்பெயர் காரணமாக சிறுமிகளது வாழ்க்கை நிரந்தரமாக அழிக்கப்பட்டுவிடுகிறது. “ என்று கூறுகிறார். 2010இல் ஷோரோஸின் குழு பாகிஸ்தானில் இந்த நோக்கம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்று ஆராய்ந்தார்கள். “எங்களது ஆராய்ச்சியின்படி, கருக்கலைப்பு பாவம் என்று கருதி, கருக்கலைப்பு தேவைப்பட்டு வரும் பெண்களைக்கூட டாக்டர்கள் திருப்பி அனுப்பிவிடுகிறார்கள்” என்று கூறுகிறார். “ஆனால், இது ஒழுக்கத்துக்கான கேள்வி அல்ல. இது சுகாதாரத்துக்கும், ஒவ்வொருவரும் தனக்கு வேண்டிய சுகாதாரத்துக்கான உரிமைக்குமான கேள்வி” என்று டாக்டர் சோருஷ் கூறுகிறார்.
ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிவிப்பாளர், ஆனந்த் குரோவர், 2011இல் உலகம் முழுவதும் கருக்கலைப்பு சட்டப்பூர்வமானதாக ஆக்கப்பட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். கருக்கலைப்பு என்ற மருத்துவ வழிமுறையை குற்றமாக ஆக்குவதன் மூலம், பெண்களுக்கான எல்லா உரிமைகளும் மறுக்கப்படுகின்றன என்றும், பெண்களது வாழ்க்கை, சுகாதாரம் சமத்துவத்துக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்றும் கூறுகிறார்.
குலாலய் இஸ்மாயில், பாகிஸ்தான் பெண்கள் குழுவான Aware Girls என்பதன் நிறுவனர். இவர் கருக்கலைப்பை சட்டப்பூர்வமானதாக ஆக்குவது சரியான திசை என்று கூறுகிறார். ஜூன் 2010இல் இவரும் டச்சு நாட்டு தன்னார்வ நிறுவனமும் இணைந்து கருக்கலைப்பு உதவி தொலைபேசி எண் ஆரம்பித்தார்கள். இந்த அனாமதேய சேவை கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டது. நாங்கள் ஏராளமான மிரட்டல்களை எதிர்கொண்டோம் என்று இஸ்மாயில் கூறுகிறார். இந்த நாட்டில் மதத்தீவிரவாதம் அதிகரித்திருக்கிறது. கருக்கலைப்பு என்பது தவறான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால், இந்த ஹாட்லைனை பத்திரிக்கைகள் தொலைக்காட்சிகள் மூலமாக வெளியிட முடியவில்லை. ஆகவே சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டுமே பிரச்சாரம் செய்கிறோம் என்கிறார். ஒவ்வொரு வாரமும் சுமார் 200 பெண்கள் இந்த ஹாட்லைனை தொடர்பு கொண்டு பாதுகாப்பான கருக்கலைப்புபற்றிய விவரங்களை கேட்டுப்பெறுகிறார்கள்.
ஷமின், ஷாநாஸ் ஆகிய இருவரும் தங்களுக்குத்தாங்களே உதவிக்கொள்ள முனைந்தார்கள். ஆனால், நிகழ்ந்துவிட்ட கர்ப்பத்தை மறைக்க அவர்கள் எடுத்த முயற்சிகள் ஷமினின் இறப்பிலும், ஷாநாஸின் நிரந்தர சுகாதார கேட்டிலும் முடிந்தன. பாதுகாப்பற்ற கருக்கலைப்பு மட்டுமே ஒரே வழியாக இருப்பது அவர்களை போன்றே எண்ணற்ற பெண்களுக்கு ஒரே வழியாக இருக்கிறது. “பகிரங்கமாக கருக்கலைப்பு உதவி செய்வது எங்களது உயிர்களுக்கே ஆபத்தானது” என்று டாக்டர் சோருஷ் கூறுகிறார். பலுச்சிஸ்தானில் கருக்கலைப்பு பற்றியும், குடும்ப கட்டுப்பாடு பற்றியும் ஆராய்ச்சி செய்ய சென்றபோது அவரது இரண்டு களப்பணி ஆய்வாளர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். “உலக நாடுகள் இந்த பாகிஸ்தான் அரசாங்கத்தை வலியுறுத்தி கருக்கலைப்பு செய்துகொள்ளும் உரிமையை அடிப்படை மனித உரிமையாக அங்கீகரிக்க வைக்க வேண்டும். அதன் பிறகே களப்பணி புரியும் எங்களால் மாற்றங்கள் நிகழ முடியும்“ என்று குலாலை இஸ்மாயில் கூறுகிறார்
- சந்திரனில் விவசாயம் எப்படி நடக்கலாம் என்று யூகம் தரும் இயந்திர விவசாயப் பண்ணைகள்
- மலேசிய தான் ஸ்ரீ சோமா அறவாரியத்தின் அனைத்துலகப் புத்தகப் பரிசினை இலங்கை அறிஞர் மு.பொன்னம்பலம் வென்றார்
- மூன்று பேர் மூன்று காதல்
- மதிப்பும் வீரமும்
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……………… 8. தி.ஜ.ரங்கநாதன் – ஆஹா ஊகூ
- அரசன் சார்ந்த அறநெறி / இல்லற நெறி – (இராமாயண ராமர் பற்றி)
- காளை மேய்த்தல்(Ox Herding)- பத்து ஜென் விளக்கப் படங்கள்
- வெளி
- கண்ணீர்ப் பனித்துளி நான்
- தாகூரின் கீதப் பாமாலை – 43 சதுப்பு நிலப் பாடல்கள்
- ஒருவர் சுயத்தனம் பற்றி எனது பாடல் -1 (1819-1892) (புல்லின் இலைகள் -1)
- நினைவுகளின் சுவட்டில் (105)
- சந்திப்பு
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 39
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -6
- பி.ஜி.சம்பத்தின் “ அவன் நானல்ல ( மலையாளக்கதை ) – ஒரு பார்வை
- 22 ஃபீமல் கோட்டயம் ( மலையாளம் )
- நம்பிக்கை ஒளி! (10)
- சீமைத் தரகர்களும் ஊமை இந்தியர்களும்
- வந்த வழி-
- பாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் மரணங்கள்
- வேள்வெடுத்தல் (வேவு எடுத்தல்) என்னும் நகரத்தார் திருமண நடைமுறை
- ஆத்ம சோதனை
- உன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை? – 1
- பூகோளம் சூடேறி ஆர்க்டிக் பனிப் பாறைகள் உருகி கடல் வெப்பம், மட்டம் உயர்வு.
- அக்னிப்பிரவேசம் -13