புனைப்பெயரில்.
லிட்டில் இந்தியாவில் கலவரம், தமிழர்கள் 27 பேர் கைது. வாகன விபத்து. ஒருவர் மரணம். தொடர்ந்த 400 பேர் கலவரம்.
தொடர்ந்து, அந்த ஊர் நாட்டான்மைகள் சொல்லுகிறார்கள்,
சிங்கப்பூரியன்ஸ் இதை செய்திருக்க மாட்டார்கள், கூலி வேலை கும்பல் குடிபோதையில் செய்த ரகளையே இதென்று.
எந்த ஒரு தேசத்திலும், ஒரு வாகன விபத்து 400 பேரை கலவரம் செய்யத் தூண்டாது… செத்தவர் பத்தோடு பதினொன்றான “ஆம் ஆத்மி”யாக இருக்கும் போது.
சிங்கப்பூரில் செத்தவரும் ஒரு ஆம் ஆத்மி தான். சாதாரண கூலித் தொழிலாளி.
பின் ஏன் 400 பேர் கலவரம்.
குடி போதை மட்டும் தானா…?
சரி, சிங்கப்பூரின் விஸா பற்றி சற்றே தெரிந்து கொள்வோம்.
ஒர்க் பெர்மிட், “எஸ்” பாஸ், அப்புறம் அது பி 1 2 என்று போகிறது.
இந்த ஒர்க் பெர்மிட்டும், “எஸ்” பாஸும் தான் அடித்தட்டு வர்க்கத்தினுடையது.
தமிழகம் பொறுத்தவரை, ராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை ஏரியாவில், சிங்கப்பூர் போகும் கூட்டம் அதிகம்.
இதில் வணிகத்திற்காக கட்டமைப்புடன் போன , போகும் செட்டியார் இனம் இதில் மாட்டாது.
அடுத்த கட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கால் காணி அரை காணி வகையறாவும், படிப்பால் வேலைக்கு சேர முடியாத கூட்டமும் தான் இந்த 400 பேர் கொண்ட கும்பலின் கூட்டம்.
ஊரில் ஒருவன் 75,000 முதல் ஒரு லட்சம் வரை ஏஜெண்டிடம் கொடுத்து சிங்கப்பூர் செல்வான்.
இந்த ரூபாய்..? ஊரில் 2 வட்டி 3 வட்டிக்கு ( மாத வட்டி ) பணம் பெற்றுச் செல்வான்.
ஒர்க் பெர்மிட்டில் 600 வெள்ளி முதல் 1000 வெள்ளி வரை தருவார்கள். அதில் தங்குமிடம், சோறு எல்லாம் பிடிக்கப்படும். வருடத்திற்கு ஒரு முறை வருவதே தகினத்தோம் ….
ஊருக்கு 10000 அல்லது 15000 எப்போவாவது அனுப்பும் போது அது வட்டிக்கும், மொய்க்குமாக கரையும்.
சிலவருடம் திரும்ப வந்தாலும், பின் வட்டிக்கு வாங்கிச் சொல்வான்.
இந்த சுழலில் இருந்து வரவே முடியாத ஒரு சூழல்.
அவனுக்கு மன அழுத்தம் உச்சத்தில் இருக்கும். வார கடைசியில் லிட்டில் இந்தியாவில் ஜே ஜே என்று கூடுவார்கள். கடைகளில் கடனாக பெற்ற பொருட்களின் செட்டில்மெண்ட் , புதுக்கடன், ஹவாலாவில் வீட்டுக்கு பணம் அனுப்ப, அப்புறம் குவார்டர் & கூத்தியா…
ஊரில் தன் இன கலரை வெறுக்கும் மன நிலைக்கு இயல்பாகவே மாறிப் போன்வனின் சொர்க்கமாக தெரிவது, வியட்நாம், ஆர் பி சி ( சீனா ), பிலிப்பைன்ஸ் பெண்களின் நிமிட நேரக்கணக்கில் கிடைக்கும் புணர்தல் இன்பம்.
பின் வேலைக்கு … என்று சுழலும் இவனது வாழ்வின் நிலைக்கு சிங்கப்பூர் சீமான் அது தான் அந்த ஆளும் வர்க்கம் என்ன செய்கிறது…?
சுத்தமானது தான் சிங்கப்பூர், ஆனா அதன் ஆளும் வர்க்கத்தின் மனதோ முழு முழு அழுக்கானது.
ஒரு காலத்தில் சந்தை பொருளாதராம் இந்தியாவில் திறந்து விடப்படாத பொழுது சிங்கப்பூர் வியாபார சொர்க்கம் போல் இருந்தது. ஆனால் , இன்றைய நிலை…?
அதனால், டூரிஸம் செக்டார் என்று சொல்லி, சிங்கப்பூரை உல்லாசபுரியாக அந்த அரசு மாற்றி விட்டது.
விபசாரம், போதை என்பது கண்டுக்கொள்ளப்படாத ஓப்பன் அவுட் சோர்சிங் அட் லோக்ல் பிளேஸஸ் என்றாகிப் போனது சிங்கப்பூரில்.
இப்படி கசக்கிப் பிழியப்படும் தொழிலாள வர்க்கத்தின் இட்டுக்கட்டான சூழல் என்ன அந்த அரசுக்குத் தெரியாதா..?
அங்கு ஜொலிக்கும் உயர் ரக கட்டடங்கள் எழுப்பப்படுவது தொழிலாள வர்க்கத்தில் ரத்தத்தை உறிஞ்சி என்பது நாம் அறிய வேண்டும்.
பஸ் மோதி விட்டது என்ற தொடரே இல்லை.
போலீஸ் நிலையத்தில், குடி போதையில் பஸ்ஸிற்குள் வந்து விழுந்து விட்டான் என்று அந்த சிங்க்ப்பூரியன் டிரைவர் சொன்ன கோணத்திலேயே காவலர்கள் பேசியதால், நிர்க்கதியற்ற மனநிலைய்ல் அது பிறரையும் பயமாக பிடித்தாட்ட அங்கு பேயாட்டம் ஆகியது.
இந்த பேயாட்டத்திற்கு முழுக்காரணம் சிங்கப்பூர் அரசின் ஒழுக்கமற்ற நிர்வாக நிலைப்பாடே..
இழப்பீடு அவனுக்கு கிடைக்காது என்ற பயம் வரும் படி ஏன் காவலர்கள் நடந்து கொண்டார்கள்..?
சிங்ப்பூரியன்ச் அப்படி செய்ய மாட்டார்கள் என்று சொல்லும் அரசு, சிங்கப்பூரியன்ஸ் செய்யும் விபச்சாரத்தையும், கையூட்டுப் பெற்று அங்கு கண்டுக் கொள்ளப்படாமல் இருக்கும் போதை சாமாச்சாரங்களையும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை…?
கீழ்த்தரமான சிருங்கார போதை நகரமாக சிங்கப்பூர் முழுதும் மாறி வருகிறது.
இந்தப் பிரச்சனையை ஒழுங்காக கையாளாவிட்டால், சிங்கப்பூரின் அழிவிற்கு விரைவில் ஆரம்பம் ஆகும்.
அந்த குற்றவாளிகளுக்கு பிரம்படி கொடுக்கும் முன் , அந்த அரசு தன்னை சுயபரிசோதனை செய்திடல் வேண்டும்.
- சீதாயணம் நாடகம் -11 படக்கதை -11 சி. ஜெயபாரதன், கனடா
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 29
- பெண்ணுக்குள் நூறு நினைவா ?
- (அ)சிங்கப்பூர் அல்லது சிருங்காரப்பூர்
- வாக்காளரும் சாம்பாரும்
- முரண்பாடுகளே அழகு
- மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே [மீள் பதிப்பு] [பாரதி பிறந்த தினம் : டிசம்பர் 11]
- கர்ம வீரர் காமராசர்!
- ஓரினச்சேர்க்கையும் ஹிந்து மரபும்
- நீங்காத நினைவுகள் – 25
- அத்தியாயம்-13 சிசுபாலவதம் பகுதி -1
- தாயகம் கடந்த தமிழ் 2014 கோயம்புத்தூர், இந்தியா ஜனவரி 20, 21,22
- மழையெச்ச நாளொன்றில்…
- முதுவேனில் பதிகம்: திருமாவளவனின் கவிதைகள்
- அன்பின் வழியது
- எஸ்ஸார்சி கனவுமெய்ப்படும் – சாதிய கட்டமைப்பும் கட்டுடைப்பும்.
- அண்ணாத்தே ஹாசாரேயும், கேசரி வாலும்
- இலக்கியச்சோலை- வளவ. துரையன் எழுதிய ”சின்னசாமியின் கதை” நாவல் வெளியீட்டு நிகழ்ச்சி
- நிராகரிப்பு
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -53 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) ஆத்மாவின் வடிப்பு ..!
- பாதை
- புகழ் பெற்ற ஏழைகள் – 37.பாரதத்தாயின் தவப்புதல்வராகத் திகழ்ந்த ஏழை
- பணம் காட்டும் நிறம்
- சில்லி விண்ணோக்கி முதன்முறையாக இரட்டை ஏற்பாட்டு விண்மீனைச் சுற்றும் விந்தைக் கோள் ஒன்றைக் கண்டுபிடித்தது.
- நான் பிறந்து வளர்ந்த கிராமம் தெம்மூர்
- கடத்தலின் விருப்பம்
- திண்ணையின் இலக்கியத் தடம்-13
- மருமகளின் மர்மம் – 7
- ஜாக்கி சான் – 20. ஹாங்காங்கில் மறுபடியும் வாய்ப்பு
- பாம்பா? பழுதா?
- ‘விஷ்ணுபுரம் விருது’