படிமை – திரைப்பட பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கை

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 22 in the series 2 மார்ச் 2014

முழுவேகத்தில், உலகத் தரமான பாடத்திட்டத்தோடு படிமை திரைப்பட பயிற்சி இயக்கத்தை மார்ச் மாதம் முதல் தொடங்கவிருக்கிறது தமிழ் ஸ்டுடியோ. இடையில் மார்ச் முதல் வாரத்தில் தியடோர் பாஸ்கரன் அவர்கள் படிமை மாணவர்களோடு உரையாடுகிறார். இன்னமும் ஐந்து மாணவர்கள் இதில் இணைந்துக் கொள்ளலாம். பாலு மகேந்திராவின் சினிமாப் பட்டறை மூடப்படுமாயின், அதில் இதுவரை பயின்று வந்த மாணவர்களையும் இந்த பயிற்சி இயக்கத்தில் சேருமாறு அழைப்பு விடுக்கிறேன். வணிக சினிமா, வெகுஜன சினிமா, கலைப் படங்கள் என்கிற போலிக் கற்பிதங்களை தாண்டி, எது சினிமா என்கிற உண்மையை உங்களுக்குள்ளிருந்தே உணரும் இடமாக இந்த பயிற்சி இயக்கம் அமையும்.

தமிழ் ஸ்டுடியோவின் படிமை திரைப்பட பயிற்சியின் இரண்டாவது Batch க்காக இதுவரை 7 நண்பர்களை தேர்வு செய்து வைத்துள்ளேன். இன்னமும் 5 நண்பர்கள் இந்த பயிற்சி வகுப்பில் இணைந்துக் கொள்ளலாம். எப்படியும் மார்ச் இறுதி வாரத்திற்குள் சேர்க்கை முடிக்கப்பட்டு, வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளேன். படிமை திரைப்பட பயிற்சி வகுப்பில், திரைப்படத்திற்கான வடிவம், உள்ளடக்கம் இரண்டிற்கும் தீவிரமான பயிற்சி அளிக்கப்படும். காட்சிப்படிமங்களின் வழியே, பார்வையாளனை ஒரு பயணத்திற்கு இட்டு செல்லவும், காட்சிப் படிமங்கள் எத்தகைய சக்திவாய்ந்த ஒன்று என்பதையும் இந்த பயிற்சியின் வழியே நண்பர்கள் அறிந்துக் கொள்ளலாம். ஒன்னரை வருடம் நடக்கும் இந்த பயிற்சி முழுக்க முழுக்க சனி, ஞாயிறு இரண்டு தினங்கள் மட்டுமே நடக்கும். இரண்டு நாட்களும், காலை 10 மணி முதல், மாலை 6 மணி வரை பயிற்சி நடக்கும். இந்த திரைப்பட பயிற்சி திட்டத்தில் சேர்ந்து படிக்க விரும்பும் நண்பர்கள் உடனே தொடர்பு கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன். கட்டணம் ஏதுமில்லை, கிராமப் புற நண்பர்களுக்கு எப்போதும் முன்னுரிமை உண்டு. தகுதி என்று எதுவுமில்லை, ஆனால் தமிழ் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகள் இந்த பயிற்சி வகுப்பிற்கு வந்து வகுப்பெடுக்க இருக்கிறார்கள்.

தொடர்புக்கு: தினேஷ் 9578780400

Series Navigationமருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம்மருமகளின் மர்மம் 18நீங்காத நினைவுகள் – 36கொலுஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-24 துரோணரின் வீழ்ச்சிபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 48அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் நடத்தும் கலை – இலக்கிய சந்திப்பு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *