ஆத்ம கீதங்கள் –14 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. !

This entry is part 5 of 17 in the series 1 பெப்ருவரி 2015

(அருகில் மரணம்)

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

நீ அவரைத் தாழ்வாக மதித்து,

அவர் உன்னை மேலாக மதித்தால்

இழந்த அவரது ஒளிமயம்

எழுந்திடும் புதிதாய் ஒன்று சேர்ந்து !

சத்தியம் அவரது தகமை,

மினுக்கும் காதலில் தோன்றும் எழில்வளம்;

கனிவான சுடர் விழிகள் என்றும்

காணப்படும் !

அந்தோ பரிதாபம் என்னிலை !

நினைவில் மட்டும்

காதலியாய்

நீ என்னைப் பார்க்கிறாய்

மெல்லிய தாய்ப் புன்னகைத்து

நள்ளிராக் கனவுகளில் !

எனது கை விசிரி வீச்சு மூலம்

நகைச் சுவை யோடு

உனது பகற் கனவு அமைதியில்

மீண்டும் மீண்டும் சொல் :

கனிவான சுடர் விழிகள் எப்போதும்

காணப் படும் என்று !

என் ஆன்ம உணர்வு நீண்டு செல்லும்

வெளி நோக்கி

வெளுத் தடங்கிய என்னுடல் விட்டு;

மெல்லிய குரலைக்

கேட்பதைத் தவிர வேறு வழியில்லை !

என் பளுவைத் தாங்க உதவும்

உன் காதல் நினைவு;

என்னரும் கவிஞனே !

வந்து காட்டு உன் காதலை ! வா !

பந்தம் உண்டாக்கட்டும்

தற்போது கொண்ட காதல்;

கனிவான சுடர் விழிகள் என்றும்

மினுக்கட்டும் !

என்னரும் கவிஞனே !

எனது தேவ தூதனே !

கண்களின் கனிவை நீ புகழ்ந்த போது

கவி பாடும் வேளை களில்

நெருங்கும் என் முடிவை

நீ நினைத்துப் பார்த்தாயா ?

ஓரக் கண்களில்

பார்த்த புனைவு ஜாலங்கள் என்ன !

புதை குழி சீக்கிரம்

தேர்ந் தெடுக்கப் போகுது !

கனிவான சுடர் விழிகள் என்றும்

மினுக்கட்டும் !

[தொடரும்]

++++++++++++++++++++++++++++++++++++

மூல நூல் :

From Poems of 1844

Elizabeth Barrett Browning Selected Poems

Gramercy Books, New York 1995

 

  1. http://wednesdaymourning.com/blog/elizabeth-barrett-browning-beyond-victorian-love-poems/
  2. http://en.wikipedia.org/wiki/Elizabeth_Barrett_Browning
  3.  http://www.online-literature.com/elizabeth-browning/
Series Navigationவைரமணிக் கதைகள் – 1 கற்பூரம் மணக்கும் காடுகள்சிறு ஆசுவாசம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *