This entry is part 19 of 21 in the series 31 மே 2015

 

சத்யானந்தன்

 

மரம்

நெடிதுயர்ந்து

நின்றது

 

பாழுங் கிணற்றுள்

இறங்கி நீண்ட

வேர்கள் ஒரு நாள்

ஒரு தவளையைக் கண்டு

மௌனம் கலைத்தன

 

 

“எங்களைப் பற்றி

நீ

மேலே போகலாமே”

 

 

“பற்றுதலால்

கிடைப்பதெல்லாம்

திரும்ப முடியா

இடமே”

 

கீழ் நோக்கித்

தாவியது

தவளை

Series Navigationடிமான்டி காலனிஇடிமுகில் மின்னலில் மர்மமான பாஸிட்டிரான் பரமாணுக்கள் உண்டாவதை முதன்முறைக் கண்டுபிடிப்பு