வெலிகம ரிம்ஸா முஹம்மதின் நூல் வெளியீட்டு விழா

author
0 minutes, 1 second Read
This entry is part 3 of 20 in the series 26 ஜூலை 2015

rim2வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய `அறுவடைகள்’ நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 2015 ஆகஸ்ட் 01 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு தமிழச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும், இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு, தாயக ஒலி ஆசிரியர் திரு தம்பு சிவசுப்பிரமணியம் தலைமையில் இடம்பெறவிருக்கிறது.

இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக இலண்டன் இலக்கிய நிறுவகத்தின் தலைவர் வவுனியூர் இரா உதயணன் அவர்களும் சிறப்பதிதிகளாக அல்ஹாஜ் எம்.எம். சப்ரி, டாக்டர் அல்ஹாஜ் ஏ.பி. அப்துல் கையூம் (ஜே.பி), கே. அரசரத்தினம், ந. கருனை ஆனந்தன், உளவளவியலாளர் யூ.எல்.எம். நௌபர், மு. கதிர்காமநாதன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். பிரபல தொழிலதிபர் அல்ஹாஜ் எம்.எம். சப்ரி நூலின் முதற்பிரதியைப் பெற்றுக்கொள்வார்.

வரவேற்புரையை தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவும், வெளியீட்டுரையை கவிஞர் நஜ்முல் ஹுஸைனும் நிகழ்த்த, கவி வாழ்த்தை தாஜுல் உலூம் கலைவாதி கலீல் பாடுவார். நயவுரையை திருமதி வசந்தி தயாபரன் வழங்க ஏற்புரையை நூலாசிரியரும், நன்றியுரையை ஊடகவியலாளர் கே. பொன்னுத்துரையும் நிகழ்த்துவார். இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகளை படைப்பாளி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா தொகுத்து வழங்கவுள்ளார்.

aruvadai`அறுவடைகள்’ வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 11 ஆவது நூல் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Thanking You.

இப்படிக்கு,
வெலிகம ரிம்ஸா முஹம்மத்

Series Navigationநகங்கள் ( 2013 ) – மலையாள திரைப்படம்தொடுவானம் 78. காதல் மயக்கம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *