வந்தவாசி. ஏப்ரல்.27. இலக்கிய வீதி, பாரதிய வித்யா பவன், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து
நடத்தும் ‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வில், தமிழில் கவிதைத் தளத்தில் தொடர்ந்து
சிறப்பாகச் செயல்பட்டுவரும் கவிஞர் மு.முருகேஷ்-க்கு ’அன்னம் விருது நேற்று சென்னையில்
நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.
இந்த விருது வழங்கும் விழா சென்னை மயிலாப்பூரிலுள்ள பாரதிய வித்யா பவன்
அரங்கில் நேற்று (ஏப்ரல்-26) மாலை நடைபெற்றது. இவ்விழாவிற்கு, மூத்த வழக்கறிஞர்
’சிகரம்’ ச.செந்தில்நாதன் தலைமையேற்றார். ‘இலக்கிய வீதி’ அமைப்பின் நிறுவனர்
இனியவன் முன்னிலை வகித்தார். கவிஞர் கந்தர்வனின் படைப்புகள் பற்றி கவிஞர்
தங்கம்மூர்த்தி சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில், கவிதைத் தளத்தில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுவரும்
கவிஞர் மு.முருகேஷூக்கு ‘சிகரம்’ ச.செந்தில்நாதன் ‘அன்னம் விருதினை’ வழங்கினார்.
’அன்னம் விருதி’னைப் பெற்ற கவிஞர் மு.முருகேஷ், வந்தவாசி நூலக
வாசகர் வட்டத்தின் தலைவராகவும், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின்
ஆலோசகராகவும் இருந்து சமூகம், கல்வி மற்றும் இலக்கியப் பணிகளில் தொடர்ந்து
ஈடுபட்டு வருகிறார். இதுவரை 42-க்கும் மேற்பட்ட கதை, கவிதை , கட்டுரை, சிறுவர்
இலக்கியம், விமர்சன நூல்களை எழுதியுள்ள இவர், தனது நூல்களுக்காக 25-க்கும் மேற்பட்ட
பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவரது படைப்புகள் மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்டு நூல்களாகவும் வெளிவந்துள்ளன. இலக்கிய மாநாடுகளில்
உரையாற்றுவதற்காக இலங்கை, சிங்கப்பூர், குவைத், மலேசியா ஆகிய நாடுகளிலுள்ள
அமைப்புகளின் அழைப்பின் பேரில் சென்று, உரையாற்றி வந்துள்ளார். மத்திய அரசின்
இலக்கிய அமைப்பான சாகித்திய அகாடெமி ஏற்பாட்டில், மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்,
கர்நாடகாவிலுள்ள மைசூரு, ஆந்திர மாநிலம் விஜயவாடா ஆகிய இடங்களில் நடைபெற்ற
தேசிய அளவிலான இலக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளார்.
இவரது படைப்புகளை இதுவரை 6 கல்லூரி மாணவர்கள் இளமுனைவர் பட்ட ஆய்வும்,
3 மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வும் செய்துள்ளனர். இவரது கவிதைகள் மதுரை காமராஜர்
பல்கலைக் கழக பாடத்திட்டத்திலும், விருதுநகர் வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரிப்
பாடத்திட்டத்திலும், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி பாடத்திட்டத்திலும்
இடம் பெற்றுள்ளன.
சமச்சீர் பாடத்திட்டக் குழுவில் இடம்பெற்று, 1-ஆம் வகுப்பு மற்றும் 6-ஆம் வகுப்பு பாட நூல்கள்
உருவாக்கத்தில் பங்களிப்பு செய்துள்ளார். 2010- ஆம் ஆண்டு வெளியான இவரது ‘குழந்தைகள்
சிறுகதைகள்’ எனும் நூல், தமிழக அரசின் ’புத்தகப் பூங்கொத்து’ எனும் திட்டத்தில் தேர்வாகி,
தமிழகத்திலுள்ள 32 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விழாவில், ’இலக்கிய வீதி’ அமைப்பின் துணைத் தலைவர் வாசுகிபத்ரி, கவிஞர்கள் ஜெயபாஸகரன்,
அமுதபாரதி, மயிலாடுதுறை இளையபாரதி, கா.ந.கல்யாணசுந்தரம், யாழினி முனுசாமி, பாரி கபிலன்,
எழுத்தாளர்கள் புதுகை மு.தருமராசன், பானுமதி தருமராசன், எஸ்.வி.வேணுகோபாலன் உள்ளிட்ட
ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
விழாவை, துரை.இலட்சுமிபதி ஒருங்கிணைத்தார்.
இணைப்பு: படக்குறிப்பும் படமும்
இலக்கிய வீதி, பாரதிய வித்யா பவன், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து
நடத்தும் ‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வில், தமிழில் கவிதைத் தளத்தில் தொடர்ந்து
சிறப்பாகச் செயல்பட்டுவரும் கவிஞர் மு.முருகேஷ்-க்கு ‘சிகரம்’ ச.செந்தில்நாதன் ’அன்னம் விருது ’
நேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கினார். அருகில், (இடமிருந்து)
துரை.இலட்சுமிபதி, ‘இலக்கிய வீதி’ இனியவன், கவிஞர் தங்கம்மூர்த்தி ஆகியோர் உள்ளனர்.
Murugesh Mu haiku.mumu@gmail.com
Attachments area
- கதிரியக்கம் இல்லாத அளவு கடந்த அணுப் பிணைவு மின்சக்தி ஆக்கத்திற்கு சைனா பேரார்வ முயற்சி
- “கால் பட்டு உடைந்தது வானம்” எஸ்தரின் கவிதைகள் குறித்து எனது பார்வை
- அளவளாவல். புத்தகம் பகிர்தல்
- அதனாலென்ன…
- ‘இலக்கிய வீதி’ அமைப்பின் சார்பில் கவிஞர் மு.முருகேஷ்-க்கு ’அன்னம் விருது’
- Pusher Trilogy
- Ushijima the Loan Shark
- பெண் உடலை கட்டுப்படுத்துவதிலிருந்து வௌிப்படும் தீவிரவாதம்