மஞ்சுளா மதுரை
என் கால்சுவடுகள் எனக்கான மண்ணில் கருவுற்று கிடக்கின்றன
எனது பிள்ளைப் பிராயங்களைபிரியமுடன் கூடிக் கழித்த அமைதியுடன்
பழைய வீட்டின் வாயிற்படியை பிடித்தபடி காத்திருக்கும் வாசனைகளை முகர்ந்து
வெளியேறிக்கொண்டிருக்கும் காற்றுடன் திசையெங்கும் மிதந்து கொண்டிருக்கின்றன என் சிறகுகள்
இன்று மாறிய என் உடலெங்கிலும்அதன் நிழல்கள் உராய்ந்து கொண்டிருக்க
எனது பிரியங்கள் யாவையும் விட்டு விட்டு
பெரும் கால மழையில் நனைந்து கரைந்து கொண்டேயிருக்கிறேன் மிகுந்த வலியுடன் –