This entry is part 6 of 9 in the series 4 ஜூன் 2023

வளவ. துரையன்

தேய்ந்து கொண்டே போய்
இல்லாமல் ஆகிவிடும்
நாள்காட்டியாக போலத்
தடுமாறுகிறது நெஞ்சம்.

திருவிழாவில் தொலைத்துவிட்ட
பெற்றோரைத் தேடும்
சிறுவன் போலத்
தவிக்கிறேன்.

யாரைப் பார்த்தாலும்
உதவிசெய்ய வருபவர்
போலவே தெரிகிறது.

ஆனால்

அவர்கள் மனத்திலிருந்து
சுத்தமாக என்னை
அழித்திருப்பதை
அறியும்போதுதான்
அழுகை வருகிறது.

தண்ணீரில் தத்தளிக்கும்
சிற்றெறும்பு ஒன்று
துரும்பொன்றைத் தேடுகிறது.

விழுகின்ற பழுப்பு இலைகளை
மனம் விட்டுவிடாமல்
எண்ணிக் கொண்டிருக்கிறது.

Series Navigationகேட்டதுஇந்த இரவு