கோபால் ராஜாராம்
ஜெயமோகன் தன் வலை தளத்தில் திண்ணை பற்றியும் மற்றும் பி கே சிவகுமார் பற்றியும் எழுதியுள்ள கீழ்க்கண்ட பத்திகள் என் கவனத்திற்கு வந்தது.
‘பி.கே.சிவக்குமார் 2000 வாக்கில் எனக்கு அணுக்கமாக இருந்த திண்ணை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த கோ.ராஜாராம், கோ.துக்காராம் வழியாக அறிமுகம். திண்ணை இணையதளம், பின்னர் எழுத்தும் எண்ணமும் குழும உரையாடல் வழியாக தெரியும். ஒரு சில மின்னஞ்சல்கள், மற்றபடி பொது வெளி உரையாடல்கள் மட்டுமே. இணையம் உருவான காலகட்டத்தில் அப்படித் தெரியவந்த பலரில் ஒருவர். அவருடைய தந்தை பி.குப்புசாமி ஜெயகாந்தனின் நண்பர் என்பதனால் குப்புசாமியை சிலமுறை சந்தித்துள்ளேன். எனக்கு குப்புசாமி மேல் மதிப்பு அதிகம்.
திண்ணை ஆசிரியர் பரிந்துரையால் பி.கே.சிவக்குமார் நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கிறேன் – நேரில் பார்க்காமலேயே. திண்ணையின் சார்பில் எனி இண்டியன் பதிப்பகம் தொடங்கப்பட்டபோது என் நூல்களை அவர்கள் வெளியிட்டனர். அதில் பி.கே.சிவக்குமார் ஒரு பங்குதாரர். அமெரிக்கா சென்றபோது ஒருமுறை ஒரு ஹலோ சொல்லுமளவு சந்தித்துள்ளேன்.’
இதில் உள்ள சில தகவல் பிழைகள் :
- பி கே சிவகுமாரை நானோ அல்லது துகாராமோ ஜெயமோகனுக்கு அறிமுகம் செய்விக்கவில்லை.
- திண்ணையின் சார்பில் எனி இந்தியன் புத்தக விற்பனை மையம் மற்றும் பதிப்பகம் தொடங்கப் படவில்லை. திண்ணை பொறுப்பாளர்களான நானும் துகாராம் கோபால்ராவும் அல்லாமல் பி கே சிவகுமாரும், பாரி பூபாலனும் எனி இந்தியன் பதிப்பகத்தின் பங்குதாரர்கள்.
- பி கே சிவகுமாரின் ஆலோசனையின் பேரில் எனி இந்தியன் இணைய வழி புத்தக விற்பனை மையம் தொடங்கப் பட்டது. புத்தக வெளியீடு மற்றும் வார்த்தை இதழ் வெளியீடு அதன் தொடர்ச்சியே.
- எனி இந்தியன் பதிப்பகத்தின் வெளியீட்டு நூல்களுக்கு பதிப்பகத்தின் சார்பில் நான் பதிப்புரை எழுதியிருக்கிறேன். முன்னுரை, அணிந்துரை, பின்னுரை முதலியன ஆசிரியரின் பொறுப்பு. அதனால் அதற்கான பரிந்துரை நான் செய்திருக்க வாய்ப்பே இல்லை.
ஜெயமோகன் இந்த தகவல் பிழைகளை சரி செய்வார் என்று நம்புகிறேன்.
- உவள்
- பார்வை
- வாளி கசியும் வாழ்வு
- ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -2 காட்சி 1 பாகம் -6
- நாவல் தினை அத்தியாயம் பதினெட்டு CE 300
- குழந்தைகளை மகிழ்விக்கும் டைனஸோக்களின் உலகம்
- இந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அணுமின்சக்தி நிலையம் கக்கிரபாரா யூனிட் -3 மின்வடத்துடன் சேர்க்கப் பட்டது.
- சூட்டு யுகப் பிரளயம் !மாந்தர் பிழைப்ப தெப்படி ?
- கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது விழா
- சொல்வனம் இணையப் பத்திரிகையின்296 ஆம் இதழ்
- ஜெயமோகனுக்கு – பி கே சிவகுமார், திண்ணை, எனி இந்தியன் பற்றிய தகவல் பிழைகள்