ஆதியோகி கவிதைகள்

ஆதியோகி கவிதைகள்
This entry is part 2 of 19 in the series 25 ஜூன் 2023

ஆதியோகி

நிழல்களைப்
பாதிப்பதேயில்லை,
நிஜங்களின்
உணர்வுகள்…!
***
நிர்வாணம் என்கிற
ஒற்றை நிஜத்தை
மறைப்பதற்குத்தான்
விதவிதமாய்
எத்தனை ஒப்பனைகள்…!
***
என்னதான் கடந்து
வந்துவிட்ட போதிலும்
அவ்வப்போது
உணர்வுகளின் ஊடாய்
முகம் காட்டி விட்டுத்தான்
போகின்றன,
முந்தைய பல பரிமாணங்கள்…!
                                      – ஆதியோகி

+++++++++++++++++++++++

Series Navigationமுள்வேலிப் பூக்கள்நட்புக்காக

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *