This entry is part 5 of 5 in the series 29 அக்டோபர் 2023

ஆர் வத்ஸலா 

வேகும் வெயில்

முட்டை அவிக்கவும்

அப்பளம் சுடவும்

அதை தாராளமாக உபயோகிக்கலாம்  தோன்றுகிறது

நல்ல வேளையாக 

கணவர் 

மகன்

மருமகள்

மூவரும் வீட்டிலிருந்தே பணிபுரிபவர்கள்

வீட்டுக் கடனடைந்தவுடன் நான் விருப்ப ஓய்வு எடுத்தாகி விட்டது

பேரக் குழந்தைகளை “வீடியோ கேம்”உடன் ஒரு அறையில் அமுக்கி விட்டேன்

சமையல் வாயு தீர்ந்தவுடன் இன்னொன்றுக்கு பதிவு செய்துவிட்டேன்

கடன்காரன் இன்னமும் வரவில்லை

நேற்று மாலையில் நடைப்பயிற்சி

செய்கையில் 

தெருக்களில் குப்பை கண்டேன் புகைப்படத்துடன் மாநகராட்சிக்கு 

புகார் செய்தேன்

மெட்ரோ ரயில் திட்டம் ஊர்ந்து செல்வதைப் பற்றி 

இன்று ஒரு நாளிதழுக்கு

கடிதம் எழுதினேன்.

தொலைகாட்சியில் காட்டுகிறார்கள் –

தெருக்களில் உள்ள கூட்ட நெரிசலை –

புரியவில்லை –

ஏன் தான் ஜனங்கள் இந்த 

வெயிலில் இப்படி வெளியே போகிறார்களோ!

Series Navigationஊருக்குப் போகவேண்டும்