வசந்ததீபன்
வானத்தில் மிதக்கிறது
குளத்தில் மிதக்கிறது
என் கனவிலும் மிதக்கிறது நிலா
மயிர் நீப்பின்
உயிர் வாழா கவரிமான்
இலக்கியம் புனைவானது
கண்காணிப்பு காமிரா
வருபவர்களை கண்டுபிடிக்கணும்
அவள் மீது அவன் கண்காணிக்கிறான்
காகிதத்தில் எழுதி மகிழ்கிறான்
500 கோடி
ஆயிரம் கோடி
அடித்து வெளியே எறிந்தபடியே இருந்தேன்
அந்த கரப்பான்பூச்சி வந்தபடி இருந்தது
தனியனான என்னோடு இருக்கட்டுமென விட்டுவிட்டேன்
இருளைக் குடித்தது
ஒளியாய் உருவெடுத்தது
தீபத்தின் சுடர்
தெருவோரத்தில் உட்காருகிறான்
இந்த நாட்டுக் குடிமகன்
வீடற்ற அவன்
என் இருப்பு எரிச்சலூட்டுகிறதா? சீவித்தள்ளுங்கள்
என் கவிதைகள் உறுத்துகிறதா? நறுக்கிவீசுங்கள்
என் கனவுகள் குடைகிறதா? வெட்டித்தள்ளுங்கள்
நதியில் கனவுகளை படகாக்கி
என் உயிர் பூக்களை நிரப்பி
நீண்ட தூரப்பயணத்திற்கு
நிதமும் அனுப்புகிறாள் அந்தக் கள்ளி.