This entry is part 5 of 9 in the series 30 மார்ச் 2025

நவநீத கிருஷ்ணன் 

லட்சம் கோடி காதல் கண்ட

கரை கொண்டவள்  நீ

காதலர் கொஞ்சும் காட்சியின் சாட்சி  நீ

நுரை தள்ள திரும்பத் திரும்பக் கரை வந்து 

நோகிறாய் நீ

பேர் ஆழம் 

பெரு அகலம் 

கொண்டு

பேரன்பு என்ன என்று 

புத்தி சொல்கிறாய்,

அதை கத்தி சொல்கிறாய் 

கேளா காதும் 

பாரா கண்ணும் 

கொண்ட  மானுடர் நாங்கள்

என்றறியாத நீ

Series Navigationவடதுருவத்தில் ஒரு எரிமலைத்தீவுசொல்வனம் இணையப் பத்திரிகையின் 339ஆம் இதழ்