This entry is part 7 of 12 in the series 27 ஜூலை 2025

அவனுக்கு தெரிந்த, தெரியாத, 

நதி,உபநதி,கிளைநதி 

எல்லாமே அவனதுபோல் உணர்வு. 

பாடும் பறவைகள், 

வீசும் காற்று, 

மலரும் நந்தவனம் 

உயர்ந்த மலைகளும் 

குன்றுகளும் கோபுரமும் 

எல்லாமே அவனதா?

கேள்விக்கேட்டு 

தியானத்தில் அமர்ந்தவனுக்கு 

அவனே 

ஒன்றுமில்லா 

உயிராக நின்ற தருணம் 

எல்லாமே 

ஒன்றுக்குள் ஒன்று 

பிண்ணிப்பிணைந்து 

உருவாகி, உருமாறி 

சூன்யமாய் உணர்ந்தான் .

சூன்யத்தில் சூன்யமாய் 

காற்றோடு, ஒளியோடு, ஒலியோடு 

மண்ணோடு, நீரோடு 

ஆகாயமாய் நின்றுணர்ந்த 

தருணமே நிலையானது

தவத்தில் நின்றவனுக்கு.

–  ஜெயானந்தன் 

Series Navigationவண்ண நிலவன்- வீடுகல்விதை