This entry is part 3 of 5 in the series 16 நவம்பர் 2025

புதிய பார்வைகள் பெறும்போது
கதைகள்
புதிய கதைகளாகி விடுகின்றன.
– பி.கே. சிவகுமார்

கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து வளரும் எழுத்தாளர் ஜார்ஜ் ஜோசப் எழுதிய “பெருநெஞ்சன்” சிறுகதை.

** நிகழ்வில் கலந்து கொள்ள எழுத்தாளர் ஜார்ஜ் ஜோசப் இசைந்துள்ளார் **

நாள் & நேரம்:
நவம்பர் 19 2025 புதன் அமெரிக்கக் கிழக்கு நேரம் இரவு 8:30 மணி
நவம்பர் 20, 2025 வியாழன் இந்திய நேரம் காலை 7:00 மணி

** மேலே உள்ள புதிய இந்திய நேரத்தை நினைவில் கொள்ள மறவாதீர்கள் **

ஜூம் கூட்டத்தின் சுட்டியும் சிறுகதையின் சுட்டியும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

அனைவரையும் அன்புடன் நிகழ்வுக்கு அழைக்கிறோம்.

Zoom Meeting Link:
https://us06web.zoom.us/j/84585206505?pwd=nbkimFES812gshWJ19vvbDHew6yCfu.1

To join using Zoom Meeting ID & Pass Code:
Go to zoom.com and use
Meeting ID: 845 8520 6505
Passcode: 285383

“பெருநெஞ்சன்” சிறுகதையின் சுட்டி:
https://drive.google.com/file/d/1fmqPLlZTki-ZSCqZJXnE2LSwk94XtjlH/view?usp=drivesdk

ஜார்ஜ் ஜோசப் 

இயற்பெயர் ஜோ. ஜார்ஜ் இம்மானுவேல். திருச்சியின் பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர். இயற்பியலில் இளமறிவியல் பட்டம் பெற்ற இவர், முதுகலைத் தமிழ்ப் படிப்பினை திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் முடித்தவர். தற்போது அதே கல்லூரியில் முனைவர்பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். பல்கலைக் கழக மானியக் குழுவின் தகுதித் தேர்வில் (JRF தேர்ச்சி பெற்றவர். கவிதை, கதை, கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என இயங்கி வரும் ஜார்ஜ், இறையியல், மெய்யியல் ஆகிய துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர். தொடர்ந்து பல்வேறு சிற்றிதழ்களிலும், இணைய கலை இலக்கிய இதழ்களிலும் எழுதிவருகிறார். ஊர் சுற்றுவதில் விருப்பம் கொண்டவர். இஸ்மாயில், பூனைகளில்லா உலகம் ஆகிய நாவல்களை மொழிபெயர்த்துள்ளார். எமரால்ட் சிறுகதைத் தொகுப்பு கடந்தாண்டு பிரசுரமானது. இது இவரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. 

தொடர்புக்கு: george.joshe@gmailcom

Series Navigationவலைக்காட்சியில் தொலைந்த தலைமுறை….மழைபுராணம் – 8