This entry is part 4 of 5 in the series 16 நவம்பர் 2025


பா.சத்தியமோகன்

மழைத்தூறலின் தெளிப்பை
முகமெல்லாம் புள்ளியிட்ட  மூவயது மகளின் முகத்தில்
வடியும் நீர்த்துளிகளோடு
கொண்டு சென்றுவிடலாம்
டூவிலர் சாலையில்
பாய்ந்து முன்னேறும் போக்குவரத்து நெரிசலில்
முதுகுப்புறம் கடக்கும்
அந்தி மழை வானவில்லை
வீட்டுக்குள் எப்படி கொணர்வது?

***

Series Navigationகதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடல், ஜார்ஜ் ஜோசப் எழுதிய “பெருநெஞ்சன்” சிறுகதைசிறகு ஒடிந்த பறவை