மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2010ம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதைகள் தேர்வும் பரிசளிப்பு நிகழ்ச்சியும்

This entry is part 7 of 44 in the series 16 அக்டோபர் 2011

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2010ம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதைகள் தேர்வும் பரிசளிப்பு நிகழ்ச்சியும் ஆகஸ்ட் 21அன்று நடந்தது. 2010ஆம் ஆண்டில் உள்நாட்டுத் தினசரி, மாத, வார இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளை ஆய்வு செய்து கதைகளுக்கு ரொக்கப் பரிசளிக்கும் திட்டத்தைச் சங்கம் தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. காலாண்டுக்கு ஐந்து கதை வீதமாக ஆண்டுக்கு இருபது கதைகளைத் தேர்வுச் செய்து அவற்றுக்குத் தலா இருநூறு வெள்ளி பரிசளிக்கப்பட்டது. தேர்வுச் செய்யப்பட்ட இருபது கதைகளிலிருந்து ஒரு கதையைத் தேர்வுச் செய்து அந்தக் கதைக்கு ஆயிரம் வெள்ளியும் பரிசளிக்கப்பட்டது.

2010ஆம் ஆண்டில் சிறந்த சிறுகதைகளாகக் கீழ்க்கண்டவைத் தேர்வு செய்யப்பட்டன.

4.3.1. அவள் – நான் – அவர்கள் : மா.சண்முகசிவா
4.3.2. உண்மை அறிந்தவர் : ரெ.கார்த்திகேசு
4.3.3. சாம்பல் : முனீஸ்வரன்
4.3.4. கிடைத்த பக்கங்கள் : சிதனா
4.3.5. மழையிலும் ஆடலாம் : மைதீ.சுல்தான்
4.3.6. சுதந்திர ஏதிலிகள் : நாகேசுவரி சுப்ரமணியம்
4.3.7. அந்நியன் : இளமணி
4.3.8. கவலைப்படாதே : மைதீ.சுல்தான்
4.3.9. நெற்றி விளக்கு : நிலா வண்ணன்
4.3.10. என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் : வே.இராஜேஸ்வரி
4.3.11. அப்படியே இருக்கட்டும் : கௌரி சர்வேசன்
4.3.12. மலதோஷம் : முனீஸ்வரன்
4.3.13. அப்பா : உதயகுமாரி கிருஷ்ணன்
4.3.14. இப்படியும் மனிதர்கள் : சி. வடிவேலு
4.3.15. முதன் முதலாக : க.கோபால்
4.3.16. மலர்க்கொடி : கே.பாலமுருகன்
4.3.17. மனசும் மயானம் தான் : சிதனா
4.3.18. முடிவு : எம்.ஆர்.தனசேகரன்
4.3.19. நிகரற்றவன் : புண்ணியவான்
4.3.20. எழுதாத ஒப்பந்தங்கள் : கௌரி சர்வேசன்

காலாண்டுக்கு ஒரு முறை கூடி தலா ஐந்து கதைகள் வீதமாக இருபது கதைகளையும் தேர்வுச் செய்யும் குழுவில் தலைமை நடுவராக திரு.வ.முனியன் பணியாற்றியிருந்தார். அவருடன் ஏ.மு.சகாவும் கு.ச.இராமசாமியும் இணந்தே இந்த இருபது கதைகளையும் தேர்ந்தெடுத்திருந்தனர். தேர்வு செய்யப்பட்ட இருபது கதைகளிலிருந்து ஒரு சிறந்த கதையைத் தேர்வுச் செய்யவும் மொத்தக் கதைகள் பற்றி ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கவுமான பொறுப்புகள் தமிழக எழுத்தாளர் எஸ்.ராமகிரிஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. கௌரி சர்வேசன் எழுதிய “எழுதாத ஒப்பந்தங்கள்” என்னும் கதையை இருபது கதைகளில் சிறந்த கதையாக எஸ்.இராமகிருஷ்ணன் தேர்வு செய்தார். அக்கதைக்கு ஆயிரம் வெள்ளி பரிசாக வழங்கப்பட்டது. இந்த இருபது கதைகளும் “எழுதாத ஒப்பந்தம்” என்னும் தலைப்பில் நூலாகக் தொகுக்கப்பட்டு அந்தத் தொகுப்பும் அன்று வெளியிடப்பட்டது. இருபது கதைகளுக்குத் தலா இருநூறு வெள்ளி ரொக்கப்பரிசை செர்டாங் இலக்கிய வட்டத் தலைவர் எழுத்தாளர் எல்.முத்து வழங்கினார். சிறந்த கதைக்கான ஆயிரம் வெள்ளி பரிசை நமது சங்கம் வழங்கியது.

20 சிறுகதைகளையும் மிகவும் சிறப்பாக ஆய்வுச் செய்து அக்கதைகளின் விமர்சனங்களையும் அழகாக விவரித்தார் எஸ்.ரா. மேலும், “உலக இலக்கிய வரலாற்றில், தோட்டப்புறம் அல்லது கிராமப்புற சூழலை ஆப்பிரிக்கர்கள்தான் முன்னிலைப்படுத்தி பதிவாக்கி வருகிறார்கள். அவர்களை அடுத்து இத்தகையப் பதிவுகளை இலக்கியமாக்கி வருபவர்கள் மலேசியர்கள்தான். மலேசியப் பதிவுகள் எல்லாக் காலத்திலும் முறையாக நடக்கிறது. அதன் வளர்ச்சியும் நன்கு தெரிகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திட்டமிட்ட உழைப்பால் இங்குள்ள இலக்கியம் நல்ல முன்னேற்றம் அடைந்ததைக் காண முடிகிறது. மலேசிய இலக்கியங்களை தமிழ்நாட்டு நூலகங்களில் படிப்பதற்கான வாய்ப்புகளும் இந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. உலகத்தில் எந்த இலக்கியத்தையும் சிறந்தது என்றோ, தரம் குறைந்தது என்றோ கூற முடியாது. அந்தந்த மண்ணில் வசித்து, வாழ்க்கையைப் பதிவு செய்வதிலும், அந்த சூழலுக்கு ஏற்ப இலக்கியம் படைப்பாகிறது. ஒன்றோடு ஒன்றை ஒப்பிடுவது தேவையற்றது. ஆனால் ஒரு புதிய விசயத்தை சொல்கின்ற போது புதிய சிந்தனையோடு சொல்ல வேண்டும். நிகழ்கால வாழ்க்கையைப் பதிவு செய்யும் போது, நிகழ்கால மொழியும் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். எந்த ஒரு இலக்கியமும் உண்மையான இலக்கியப் பதிவாக இருக்க வேண்டும்” என்று கருத்துரைத்தார்.

Series Navigationமீண்டும் ஒரு முறைஎஸ்.ரா. தலைமியில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறுகதைப் பயிலரங்கு
author

கே.எஸ்.செண்பகவள்ளி

Similar Posts

3 Comments

  1. Avatar
    கே.எஸ்.செண்பகவள்ளி says:

    வணக்கம். “திண்ணை”யில் என் படைப்புகளைப் பதிவுச் செய்தமைக்கு மிக்க நன்றி. முனைவர் ரெ.கார்த்திகேசு அவர்களுக்கும் என் அன்பான நன்றிகள்!

  2. Avatar
    Venkatesh says:

    இந்தச் சிறுகதைத் தொகுதி சென்னையில் கிடைக்க வாய்ப்புண்டா? விவரம் தெரிவித்தால் மகிழ்வேன்.

    1. Avatar
      R.Karthigesu says:

      வெங்கடேஷ்,

      இது மலேசியாவில் பதிப்பிக்கப்பட்ட நூல். சென்னையில் விற்பனைக்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. பின்னால் ஏற்பாடு செய்யப்பட்டால் திண்ணை வழியே அறிவிப்போம்.
      நன்றி.

      ரெ.கார்த்திகேசு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *