This entry is part 1 of 9 in the series 8 மார்ச் 2026

                 

                                   வளவ. துரையன்   

      சொர்க்க ரதமொன்று

மெதுவாகப் போகிறது.

சோக முகத்துடன்

பின்னால் ஒரு சிலர்

இப்பொழுதெல்லாம்

தீச்சட்டிக்காரரும்

வண்டியின் உள்ளேதான்;

பின்னால் வாகனங்கள்

மனிதரை இழுத்துப் போகின்றன.

நடந்து செல்பவர்

மிகக் குறைவு.

உடன்பால்தானே

நாளைக்கெல்லாம்

விடுமுறை போட முடியாது.

சீக்கிரம் முடிஞ்சு

ரயிலைப் புடிக்கணும்;

கொடுத்த கடனைப்

புள்ளகிட்ட சொலி இருப்பாரோ?

வயசான சாவுனா

கல்யாண சாவுதாப்பா

அழுகையே இல்ல பாரு;

எல்லாவற்றையும் கேட்டு

பிய்த்துப் போட்ட

பூக்கள் சிரிக்கின்றன.

Series Navigationஎத்தனை நாளைக்கு?