This entry is part 5 of 9 in the series 8 மார்ச் 2026

மழை புராணம் – 22 ( for march 8.3.26)

மழை அண்ணா
######

மழை அண்ணா மழை அண்ணா தாங்க முடியலே
நீ விட்டு விட்டுப் பெய்யறதும்
விடாமெ பெய்யறதும் தாங்கமுடியலே
வீட்டுக்குள்ள பள்ளிச் சீருடை காயவும் வழியில்லே
ஈரமான நாய்க்குட்டி வெளியே நிக்கவச்சு பார்க்க முடியலே
உள்ளே விட்டாக்க பெரியவங்க ஏச்சு
குடையில்லாம கடைத்தெருவுக்கு போய்
காய் கறி வாங்க முடியலே
லீவும் விடலே நனையவும் முடியலே
கர்ணன் போல் நிமிர்ந்திருந்த
எங்க வீட்டுக் கொய்யா மரத்தை நீ என்ன செஞ்சே
அணிலும் மைனாவும் கதை பேசும் கொய்யாமரத்தை
நீ சாய்ச்சு வுட்டே தாங்கமுடியலே
ஈரமான ஊர் ஈரமான தெரு ஈரமான மனுசன்
உலர்ந்த தமிழன்  ஒருவனையும் காண முடியலேன்னு
எங்கள் பாரதி சொன்னார்
குளுகுளுன்னு இருந்தாலும்
ஒரு அளவுக்குமேல் மழை அண்ணா வாட்டாதே
நாட்டில் விவசாய பயிரெல்லாம் முழுகிப்போச்சு
மழை அண்ணா கொஞ்சம் இடைவெளி விட்டு வாயேன்
வெயில் தம்பியும்  வரட்டுமே தெருவுக்குள்ள.
                            – பா.சத்தியமோகன்

Series Navigationகைக்குள்…நூறு குடம்