Articles Posted by the Author:

 • ஆதலால் காதல்செய்வோம்…

  ஆதலால் காதல்செய்வோம்…

  செ.புனிதஜோதி   காதல்கவிதைஎழுத கொஞ்சம் காதலும் தேவைப்படுகிறது…   எழுத்துக்கள் மோகத் தறியில் நெய்யப்படக் காதல் அவசியமானதாகத்தான் உள்ளது…   சோம்பலான மூளையை சுறுசுறுப்பாக்க சோமபானமாய் காதல் அவசியமானதாகத்தான் உள்ளது…   சிறைப்பட்ட இதயவாசலில் பட்டாம்பூச்சி பறக்க காதல் அவசியமானதாகத்தான் உள்ளது… எழுதுகோலோடு விரல்கள் காதல் செய்யவும் காகிதத்தோடு எழுத்துகள் காதல் செய்யவும் குறைந்தபட்ச காதலாவது அவசியமாகத்தான் உள்ளது…   பிரபஞ்சம் மலர எவ்வளவு காதல் தேவைப்பட்டிருக்கும்? நீயும் நானும் பிரபஞ்சத்தின் அங்கம் தானே… காதல் சிறைப்பிடிக்காமல் […]


 • சுந்தர ராமசாமி கதைகள் – பிரசாதம்

  சுந்தர ராமசாமி கதைகள் – பிரசாதம்

        அழகியசிங்கர்               இந்த முறை கதைஞர்களின் கூட்டத்தில் சுந்தர ராமசாமியின் கதைகளைப் பற்றிப் பேசினோம். எல்லோரிடம் மூன்று கதைகளைப்பிரித்துக் கொடுத்தேன்.            பிரித்துக் கொடுப்பதோடு அல்லாமல் நானும் கதைகளைப் படிப்பேன்.            ஜனவரி மூன்றாம் தேதி 1992 ஆம் ஆண்டு க்ரியா வெளியிட்ட புத்தகமான சுரா கதைகளை வாங்கினேன்.  அப்போது அந்தப் புத்தகம் விலை ரு.90.           என்னிடமிருந்த புத்தகத்தின் முதுகுப் பக்கத்தில் எலி   சற்று பதம் பார்த்து விட்டது.  இத்தனை வருடங்களில் அதன் தாள்கள் உடைந்து விழ ஆரம்பித்து விட்டன.           சரி, […]


 • நிழலில்லாத மரம்……

  நிழலில்லாத மரம்……

    ச.சக்தி   “சாலையோர  பயணிகளுக்காக  நிழல்  தந்த மரங்களின்  கிளைகளையெல்லாம்  வெட்டி விட்டு ,    நிழல் தராத  மரங்களையெல்லாம்  சாலையோரமாக   நட்டு  வைத்துக்கொண்டிருக்கிறார்  மின்சார  ஊழியரொருவர் ” ……!!!!    கவிஞர் ; ச.சக்தி,


 • சக்கரங்கள் நிற்பதில்லை! – மெல்பனில் நடந்த மல்லிகை ஜீவா நினைவரங்கு !  ஒரு பார்வை

                                                              கிறிஸ்டி நல்லரெத்தினம் வாழ்க தமிழ்மொழி!  வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழியே! வாழ்க  நிரந்தரம்  வாழ்க  தமிழ்மொழி வாழிய வாழியவே! வான மளந்த தனைத்தும்  அளந்திடும் வண்மொழி வாழியவே!……..    மகாகவி பாரதியின் தமிழ் வாழ்த்து திருமதி சரண்யா  மனோசங்கரின் குரலில் தேன் மதுரமாய்  அந்த மண்டபத்தை நிரப்புகிறது! இது மகாகவியின் நினைவு நூற்றாண்டு என்பதை நினைவுபடுத்துகிறது.   இம் மாதம்  19 ஆம் திகதி ஞாயிறு மாலை சரியாக  நான்கு மணி.  […]


 • சொல்வனம் இணையப் பத்திரிகையின் 261 ஆம் இதழ்

  சொல்வனம் இணையப் பத்திரிகையின் 261 ஆம் இதழ்

    அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 261 ஆம் இதழ் இன்று (26 டிசம்பர் 2021) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையை இந்த வலை முகவரியில் படிக்கலாம்: https://solvanam.com/           இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:   கட்டுரைகள் : நம் வீட்டைத் திரும்பிப் பார்த்தல் – EarthRise  – பதிப்புக் குழு இன்சுலினும் அமெரிக்க மருத்துவமும் – லதா குப்பா புவிச் சூடேற்றம் –விஞ்ஞானக் கேள்விகள்– பகுதி 8 – ரவி நடராஜன் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேச – உத்ரா கி.ரா நினைவுக் குறிப்புகள் – 30 – அ. ராமசாமி பண்டைச் சீன […]


 • ஞானம்

  ஞானம்

  செ.புனிதஜோதி உதிர்க்கப்பட்ட சொற்கள் உணர்வுகளால் பின்னப்பட்ட மாலை…   என் மனக்கருவையில் உதித்தக் குழந்தை…   மோனம் பூத்த வேளையில் மலர்ந்த மலர்…   எனக்கு நானே மொழிபெயர்ப்பு செய்தாலும்.. மொழியாய் வரைகிறாய் என்னை…   நீ உதிர்க்கும் சொற்களில் உயிர்பெறும் கவிதை..   கை,கால் அசைக்கும் கருவாய் உணர்கிறேன்…   எழுத வைத்தவனே நீ தானே மயக்கமுற்றே உன்னை வடிக்கிறேன் ஞானவடிவாய்   செ.புனிதஜோதி சென்னை


 • வீரத்திருமகன்களுக்கு வீரவணக்கம்

  வீரத்திருமகன்களுக்கு வீரவணக்கம்

  முனைவா் சி. இரகு, திருச்சி. வீரர்களே வீரர்களே இந்தியாவின் காவலர்களே உற்றார் உறவினர்களைத் துறந்தே நாட்டைக் காத்தீர்களே…! எங்கள் உயிர்க்காத்த தோழர்களே உங்களை இழந்தோம் – நாங்களோ கண்ணீ ர்க் கடலில் மிதக்கின்றோம். வீரத் திருமகன்களே இந்தியப் புதல்வர்களே காலச்சூழ்நிலையில் சிக்கிக்கொண்டீர்களோ…? வானூர்தியே வசப்படுத்திய வல்லமையோரே – அந்த ஊர்தியே காலனாய் மாறிவிட்டதோ…? எங்கள் நெஞ்சமோ பரிதவிக்கின்றதே. முப்படையின் முதல் தலைமை தளபதியே நாட்டின் பாதுகாவலரே பிவின் ராவத்தே எல்லையைக் காத்த புண்ணியவானே வீரர்களோடு வீரமரணம் அடைந்தீரோ…? […]


 • அழகியலும் அழுகுணியியலும் 

    அழகர்சாமி சக்திவேல்  காலத்தால் அழிக்க முடியாதது அழகு ஒன்றுதான். தத்துவங்கள் யாவும், ஏதோ ஒருநாளில், மணலைப்போல உதிர்ந்து போகின்றன. இலையுதிர்காலத்தின் வாடி உதிர்ந்த  இலைச் சருகுகளின் அடுக்குப் போல,  நம் கோட்பாடுகள் யாவும், ஒன்றையொன்று பின்தொடர்கின்றன.  ஆனால், அழகு மட்டுமே, எல்லாப் பருவங்களிலும், மகிழ்ச்சி தரக்கூடியது. அழகு மட்டுமே, நித்தியத்தின் உடைமை.      ஆஸ்கார் வைல்ட்                                                                       அழகு என்பது படைப்பவனைப் பொறுத்தது மட்டுமல்ல. பார்ப்பவனையும் பொறுத்தது. பரதநாட்டியம் ஆடும் பெண்ணின் மார்பசைவிலும், பெல்லி நடனம் ஆடும் பெண்ணின் இடையசைவிலும், பெண்கள், நளினத்தின் அழகைக் காட்டுகிறார்கள். அந்தப் பெண்களின், அந்த […]


 • நெல் வயல் நினைவுகள்

  நெல் வயல் நினைவுகள்

  கு.அழகர்சாமி (1)   சொற்ப நிழலானாலும் வெயிலில் ஒதுங்க நிழல் உதவிய தலை பரத்திய நெடுந் தென்னைகள் காணோம்.   உச்சி வெயிலில் உருகிய வெள்ளியாய் தண்ணீர் தகதகத்துத் தளும்பிய கண்மாய் காணோம்.   காற்று தலை சாய்த்த நிலத் தலையணை களத்து மேடு காணோம்.   நெடுக வழியின் இரு புறமும் நின்று வரிசையில் வரவேற்ற வாச நெல் மணி வயல்கள் காணோம்.   பையனாய்ப் போன வழி தானே என்று பையப் போனேன்.   […]


 • வேடிக்கை மனிதரைப் போல

  வேடிக்கை மனிதரைப் போல

  அழகியசிங்கர்                   நான் கவிதை எழுதுவதால்             நான் ஒரு வேடிக்கை              மனிதனாகப் பலருக்குத் தென்படுகிறேன்             ஒன்றும் தெரியாதவன் என்கிறார்கள்             அப்பாவி என்கிறார்கள்             எதையும் சாமர்த்தியமாக              முடிக்கத் தெரியாதவன் என்கிறார்கள்               எப்போதும் கவிதை எழுதுவதால்             சோம்பேறி என்கிறார்கள்             ஆனால் –             எனக்கு முன்னால் பலர்             வேடிக்கை மனிதர்களாக              தென்படுகிறார்கள்               அரசியல் வாதிகளை  “          எடுத்துக் கொள்ளுங்கள்             […]