சொற்கீரன். நீர்வாழ் முதலை ஆவித்தன்ன ஆரக்கால் வேய்ந்த அகல் படப்பையின் அணிசேர் பந்தர் இவரிய பகன்றை அணிலொடு கொடிய அசைவளி ஊர்பு தேரை ஒலியில் பசலை நோன்ற சேயிழை இறையின் செறிவளை இறங்க சென்றனன் வெஞ்சுரம் மாண்பொருள் நசையிஇ காந்தளஞ்சிறு குடி கௌவை முரல பல்லியம் கறங்க பாழ்நீடு இரவின் அரிவாய் குரலின் அஞ்சிறைப்பூச்சி பகுவாய்த் தெள்மணி அலம்பல் மாக்கடல் ஓதம் நிறைத்தன்ன பாயல் பரவி ஊடிய நுண்மாண் நுழை ஊசி ஊர்பு துன்பியல் செவ்வழி உய்த்த […]
நிமாய் கோஷ் – ஆவணப்படம் – புத்தகம் வெளியீட்டு விழா. திருச்சி சங்கங்கள்
ஜனவரி 15, 2023 மாலை 6.05 மணி நிகழ்வின் நேரடி ஒளிபரப்புநிகழ்வில் இணையZoom Meeting ID: 6191579931 – passcode kuvikam123 அல்லது இணைப்பு https://bit.ly/3wgJCib youtube நேரலை இணைப்புhttps://bit.ly/3v2Lb38 குவிகம் மின்னிதழ் வாசிக்க முந்தைய நிகழ்வுகளின் காணொளிகள்
முனைவர் என்.பத்ரி ‘சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால், உழந்தும் உழவே தலை’என்பது வள்ளுவன் வாக்கு.விவசாயிகளை போற்றும் வகையில் வள்ளுவன் உழவுக்கென்றே ஒரு அதிகாரத்தை ஒதுக்கி குறள்களை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.உலகில் எண்ணற்ற தொழில்களை மக்கள் செய்து வந்தாலும்,மனித இனம் உயிர் வாழ உணவைத்தரும் விவசாயத்தொழிலே மிக முக்கியமானதாகும்.ஒவ்வொரு தைத்திங்கள் முதல் நாளன்றும் விவசாயிகள் தமது விவசாயம் செழிக்க உதவியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் சூரியனுக்கும்,கால்நடைகளுக்கும் சிறப்பு வழிபாடுசெய்வது தமிழர் பண்பாட்டில் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. விவசாயிகளின் […]
அன்புடையீர், 9 ஜனவரி 2023 சொல்வனம் இணையப் பத்திரிகையின் 286 ஆம் இதழ் 8 ஜனவரி 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: கிருஷ்ணவேணி மற்றும் சத்யோகம் – தெலுங்கில்: டாக்டர் காத்யாயனி வித்மஹே (தமிழில் ராஜி ரகுநாதன்) [தெலுங்கு புதினங்கள் தொடர்]இயற்கையின் கலகம் – ஜான் லான்செஸ்டர் (தமிழில்: கோரா )மாற்றாரை மாற்றழிக்க- உத்ராசீனா… ஓ… சீனா! – ஒரு அரிசோனன்பெருங்கரடி: கிரெக் […]
வணக்கம்,காற்றுவெளி தை (2023) மின்னிதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது.படைப்புக்களைத் தந்துதவிய படைப்பாளர்களுக்கு நன்றி.அடுத்த இதழ் சிற்றிதழ் சிறப்பிதழாக வெளிவரும்.கட்டுரைகள் சுய சரிதையாக அமையாமல் ஆய்வாக சமகால,கடந்தகால சிற்றிதழ்களின் தொகுப்பாக இருப்பின் நன்று.இம்மாதம் 20ஆம் திகதிக்கு முன்பாக அனுப்புங்கள்.படைப்புகள் லதா எழுத்துருவில் அமைதல்வேண்டும்.இம்மாத இதழை அலங்கரிப்பவர்கள்:கட்டுரைகள்: கவிஜி பிரேமா இரவிச்சந்திரன் சென்னை திருஞானசம்பந்தன் லலிதகோபன் கவிதைகள்: வாசுகி வாசு தங்கேஸ் […]
லாவண்யா சத்யநாதன் மருத்துவமனையின்முதலாளி அவரேதலைமை மருத்துவரும்.அவர் கண்ணுக்கு நான்ஆஸ்டின் பசுவாகவோஜெர்சி பசுவாகவோ தெரிந்திருக்கவேண்டும்.கறந்தார் கறந்தார் அப்படிக் கறந்தார்.வலித்தாலும் வாயில்லா ஜீவனானேன்.வந்த வயிற்றுவலிபோகாமல் போகவேவார்டில் சேர்த்தோம்.வதைமுகாமிலகப்பட்டவர்போல்வதங்கிப்போனார் அப்பா.ஆடாமல் அசையாமல் ஒருநாள்ஆம்புலன்சில் வீடு சேர்ந்தார்.காற்றில் கலந்த அப்பாவின் உயிரைகரைசேர்ப்பதாய் புரோகிதர் வந்தார்.தகனம் முதல் கிரேக்கியம்வரைஐந்து லகர ஏழு லகர பேக்கேஜ்களைசிபாரிசு செய்துகொண்டிருந்தார்.நான் மொட்டை போட்டுக் கொண்டிருந்தேன்.
அன்புள்ள ஆசிரியருக்கு எனது நாவல் நேற்று வெளியிடப்பட்டது. எனது நாவலை அறிமுகப் படுத்த வேண்டுகிறேன். கடிகார கோபுரம் (நாவல்) தாரமங்கலம் வளவன் காவியா பதிப்பகம் விலை -ரூ 260 ISBN No.978-93-93358-24-0 தொடர்புக்கு- 044-23726882/8129567895 அன்புடன் தாரமங்கலம் வளவன் 8129567895
ரோகிணி கனகராஜ் காலத்தின் வானத்தில் மெதுவாக நகரும் மேகங்களென என் கனவுகள்… என் இதயத்தின் ஓரத்தில் பறந்துக் கொண்டிருக்கிறது ஒரு நம்பிக்கைப்புறா… புறாவை எடுத்து வானில் பறக்கவிட்டேன்… மேகங்களைக் கிழித்துக் கொண்டு வேகமாக பறக்கத் தொடங்கியது என்புறா…
( பாலை நிலம் நிரந்தரமான ஒன்றே ) காவடி மு. சுந்தரராஜன் பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப் பட்டுள்ள ஐவகை நிலங்களில் பாலை நிலம் என்று ஒன்று இல்லை என்ற ஒரு கருத்து நெடுங்காலமாக நிலவி வருகிறது. அது சரியல்ல என்பதை நிறுவவே இக்கட்டுரை. சிலப்பதிகாரத்தில், காடு காண் காதையில், கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி வேத்தியல் இழந்த வியனிலம் போல வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் தானலந் திருகத் தன்மையிற் குன்றி முல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் […]
பின்னூட்டங்கள்