இந்த இதழ்கள் இடம்பெயராதா…..

ஜெ.பாண்டியன் வாரம் தவறாது வாசல் கொண்டுவரும் வார இதழின் முகப்பிலும் இன்னபிற பக்கங்களிலும் முழுக் காலும் இடையு முரித்த பெண்கள் இடை குறுக்கி கிறக்கும் கண்களும் முறுவல் புன்னகையுமாய் பெரும்பாலும் திரைப்பட மாதவிகள்தான்.. வாசிக்கும் வாசகனின் கண்களிலும் மனத்திலும் இச்சைகளை கிளர்ந்தெளச்…

ஒரு நதி ஒரு கடல் ஒரு சில கரைகள்

ஸ்வரூப் மணிகண்டன் மறுகரையில் இருப்பதாகச்சொல்லி செய்தியனுப்புகிறாய். நம்மிடையே நதியோடியிருந்த காலம் போய் வெகுநாட்களாகிவிட்டது. இப்போது நான் வந்து நிற்கும் கடலுக்கு எந்தெந்தப்பக்கம் எத்தனைக்கரைகள் என்று யாருக்குத்தெரியும்?

புதுச்சேரியில் 13 ஆம் உலகத்தமிழ் இணைய மாநாடு

புதுச்சேரியில் உலகத் தமிழ் இணைய மாநாடு புதுவை முதல்வர் ந . ரங்கசாமி தொடங்கி வைக்கின்றார்!   புதுச்சேரியில் 13 ஆம் உலகத்தமிழ் இணைய மாநாடு வரும் 2014, செப்டம்பர் 19 முதல் 21 ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டுக்கு உலகம் முழுவதிலிருந்தும் முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்க் கணினி…

ப்ரதிகள்

ப்ரதிகள் பலநேரம் அசலைப் ப்ரதிபலிப்பதில்லை. முன்னம் கூட்டிசைந்த பலவற்றின் கூட்டுப் தொகுப்பாய் இருக்கின்றன. அசலின் முத்திரை ப்ரதிகளில் கருநிற அடையாளமாகின்றன. பல்வேறு பயணங்கள் சென்று திரும்பும் ப்ரதிகள் பெரும்பாலும் அசலை வெருட்டுகின்றன. குறுக்குக் கோடுகளோ மையெழுத்தோ முனைசிதைவோ இன்றிச் சிலவே வீடடைகின்றன.…
மல்லிகை    ஜீவாவுக்கு   எதிர்வரும்   27  ஆம் திகதி 88 வயது பிறக்கிறது

மல்லிகை ஜீவாவுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி 88 வயது பிறக்கிறது

முருகபூபதி இலங்கையின் மூத்த எழுத்தாளரும் 45 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து மல்லிகை கலை, இலக்கிய மாத இதழை வெளியிட்ட அதன் ஆசிரியருமான டொமினிக்ஜீவாவுக்கு எதிர்வரும் ஜூன் 27 ஆம் திகதி 88 வயது பிறக்கிறது. 1927 ஆம் ஆண்டு ஜூன் மாதம்…

ஏன் என்னை வென்றாய் அத்தியாயம்- 2

ஏன் என்னை வென்றாய் அத்தியாயம்- 2 சிவக்குமார் அசோகன் மேனேஜர் அறையில் வசந்தி சீரியஸான முகத்துடன் பேசிக் கொண்டிருப்பதையும், மேனேஜர் ரெங்கராஜன் மெளனமாகக் கேட்டுக் கொண்டிருப்பதையும் பார்த்த போது குருவுக்கு சற்று கோபம் வந்தது. 'இவள் என்ன லூஸா? ஸ்கூல் பிள்ளை…

துவாரகா சாமிநாதன் கவிதைகள்

துவாரகா சாமிநாதன் என் வீட்டு கண்ணாடி என் வீட்டின் பின்புறம் 108 வாகனத்தின் ஓயாத அழுகை தெருவின் திருமண மண்டபத்தில் மகிழ்வும் எதிர் வீட்டின் துக்க அனுசரிப்பும் வாழ்வின் சித்திரங்களாக வரைந்து காட்டியது என் வீட்டு கண்ணாடி வாழ்வின் உள்ளீடுகளில் வரைகோடுகளின்…

உறக்கம்

நிஷாந்தன் தூங்காமல் அடம் பிடித்து அழுத குழந்தையிடம் கொடுத்தேன் பொம்மை ஒன்றை. சமாதானமடைந்த குழந்தை உறங்கத் தொடங்கியது. பொம்மை மட்டும் விழித்திருந்தது தனியாக.
துபாயில் எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூட இரண்டாம் ஆண்டு விழா

துபாயில் எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூட இரண்டாம் ஆண்டு விழா

துபாய் : துபாயில் எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூடத்தின் இரண்டாம் ஆண்டு விழா ஜூன் 6ம் தேதி மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது. துவக்கமாக எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூடத்தின் மாணவர்கள் அனைவரும் சேர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூட துணை…

மையல்

ஸ்வரூப் மணிகண்டன்  தேய்பிறை நிலவில் எரிகின்றது காடு. நிலவெரித்த மிச்சத்தை சேர்த்து வைக்கும் எனது முயற்சிகளை முடிபோட்டுத் திரிகொளுத்துகிறது உன் அருகாமை. காட்டில் தொலைவதற்கும் காடே தொலைவதற்கும் உள்ள வேறுபாட்டை யோசிக்க விடாமல் தற்பொழுதில் நின்று திரிகிறது காலம்.