Articles Posted by the Author:

 • என் ஆசை மச்சானுக்கு,

  என் ஆசை மச்சானுக்கு,

  குளச்சல் அபூ ஃபஹத் அன்புக்கணவா ..!!! முகப்புத்தகத்தில் உனது கவிதை வந்ததாம் – உன் வளைகுடா தனிமையை கண்ணீராய் வடித்திருந்தாயாம்….. கடிதங்கள் போய் இணையங்கள் வந்தபின் நீ நிறைய எழுதுகிறாயாம் – யாரோ தெரு வீதியில் பேசிச்செல்கின்றனர் நல்ல கவிதைகள் என்று….. நீ எனக்கெழுதுவது மாதமொருமுறை எனினும் தபாலில் உனது கடிதம் வரும்போது நீயே வந்ததாய் நினைத்துக்கொள்வேன்….. குடும்பத்தை விசாரித்து குழந்தை பற்றியும் விசாரித்திருப்பாய் – கூடவே நீ மாதம் அனுப்பும் பணத்தின் கணக்கையும் கேட்டிருப்பாய்….. கடிதத்தின் […]


 • கே.எஸ்.ரமணா எழுதிய “பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மிகமும் என்ற நூல் வெளியீட்டு விழா

  செய்திக் குறிப்பு நூல் வெளியீட்டு விழா கே.எஸ்.ரமணா எழுதிய “பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மிகமும் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கே கே நகரில் உள்ள “டிஸ்கவரி புக் பேலஸ்”-ல் இன்று (25/11/2012 ) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. இந்நூலை “புதிய தலைமுறை” வார இதழ் ஆசிரியர் திரு மாலன் அவர்கள் வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசும்போது “மனித நலத்திற்காக மகேசனை துணைக்கு அழைக்கவே ஆன்மிகத்தை பாரதி விரும்பினார்” என்று கூறினார். அவர் […]


 • வைரமுத்துவின் குமாரி எமிலி டேவிடும், நியூ சயண்டிஸ்ட் இதழும்

  (ஓர் அறிவியல் மாணவன்)   வைரமுத்துவின் அண்மைய பெஸ்ட் செல்லரான “மூன்றாம் உலகப் போர்” நாவலில் எமிலி டேவிட் என்னும் அழகான அமெரிக்கப் பெண் வருகிறாள். அவள் நியூ சயண்டிஸ்ட் இதழில் எழுதிய ஒரு கட்டுரை இந்த நாவலின் கருவாக அமைந்துள்ளது. புவி வெப்பமடைதலினால் ஏற்படும் வேளாண்மையின் வீழ்ச்சி பற்றி அது பேசுகிறது. கட்டுரையின் தலைப்பு தமிழ் மொழி பெயர்ப்பில் “போருக்கு எதிரான உலகப் போர்” என்று இருக்கிறது. ஆங்கிலத்தில் என்னவாக இருந்திருக்கலாம் என யூகமாக மொழிபெயர்த்தால் […]


 • கோவை இலக்கியச் சந்திப்பு – 25/11/2012 ஞாயிறு காலை 10 மணி

  கோவை இலக்கியச் சந்திப்பு – 25/11/2012 ஞாயிறு காலை 10 மணி

  *  25/11/2012 ஞாயிறு காலை 10 மணி   நரசிம்ம நாயுடு உயர்நிலைப்பள்ளி, மரக்கடை, கோவை   இவ்வாண்டின் சிறந்த நாவலாசிரியருக்கான கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின்  “ இரங்கம்மாள் விருது “  பெற்ற “ தமிழ் மகனின் படைப்புலகம்  “ : ஆய்வரங்கம்   பங்கு பெறுவோர்:     கோவை ஞானி, சுப்ரபாரதிமணியன், நித்திலன், சி.ஆர். ரவீந்திரன், எம்.கோபாலகிருஸ்ணன், இளஞ்சேரல், பொன் இளவேனில், யாழி, தியாகு                              வருக…     —————————————————————————————————————— *தமிழ் மகனின் நூல்கள்:   1.கவிதை […]


 • ரகசியத்தின் நாக்குகள்!!!

  ரகசியத்தின் நாக்குகள்!!!

  நேற்கொழு தாசன் இலை உதிர்த்திய காற்றில் பரவிக்கொண்டிருந்தது கிளையின் ஓலம், நுண்ணிய அந்த ஓசையால் உருகி வழியதொடங்கியது உணர்வுகள்…… வர்ணிப்புகளை எல்லாம் தோற்கடிக்கும் எரிமலைகுழம்பாய். அடங்காதவொரு பசியுடன் உறங்கிய மனமிருகம் _அந்த பேரிரைச்சலால் வெகுண்டு உன்னத்தொடங்கியது மனச்சாட்சியை, நாக்கின் வறட்சி மீது படிந்த மனச்சாட்சியின் அதிர்வுகள் ஓய்ந்துபோக மறுத்து ஆரோகண சுதியடைந்தன…….. மௌன விரிதலொன்றினை உருவாக்கி இடம்மாறிக்கொண்டது ஓலம் …………. எங்கோ தூசிஅடர்ந்த மூலையொன்றில் வௌவால் சிறகடிக்கும் ஓசை படரத்தொடங்கியது ————————– ஆக்கம் நேற்கொழு தாசன் வல்வை


 • ஆப்கானிஸ்தான் இந்துக்களும் சீக்கியர்களும் தங்களது கிராமத்தை மீட்டெடுக்க விரும்புகின்றனர்

  அபூபக்கர் சித்திக்கி ஷங்கர்லால் அவர்களுக்கு வயது 63 ஆகிறது. இவர் இந்தியாவில் அகதியாக கடந்த இருபது வருடங்களாக வாழ்ந்து வருகிறார். இவரது பூர்வீகமாக “அன்பு நகரத்தை” மீண்டும் அடைய விரும்புகிறார். தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் பிரேம் நகர் என்ற ஊரைச் சார்ந்தவர் இவர். இந்த ஊர் இப்போது அருகாமையில் உள்ள கோஸ்த் என்னும் நகரோடு இணைக்கப்பட்டுவிட்டது. 1990இல் நடந்த ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போரின்போது இவர்கள் இந்த ஊரை விட்டு ஓடிவந்தார்கள். கோஸ்த் நகரத்தில் ஒருகாலத்தில் வளமையாக இருந்த இந்து […]


 • சவுதி அரேபியாவின் அடக்குமுறையினால், ஷியா புரட்சி உருவாகிறது.

  கிரிஸ் ஸாம்பெலிஸ் அரபு நாடுகளில் நடந்துகொண்டிருக்கும் புரட்சிகளின் பின்னணியில், சவுதி அரேபியாவில் வளரும் கலவரங்கள் பார்க்கப்படாமலேயே போய்விட்டன. அரசியல் பகிரங்கமாக்கப்பட்டுகொண்டிருக்கும் சுழ்நிலையில், வெகுகாலமாக இருந்துவரும் சர்வாதிகார ஆட்சிகளின் முன்னால் அரபு மக்கள் தங்களது அபிலாஷைகளை வெளிப்படுத்துவது அதிகரித்துகொண்டிருக்கிறது. இந்த பின்னணியில், இதுவரை சமூகத்தின் விளிம்புக்கு தள்ளப்பட்டு, குறிவைத்து தாக்கப்பட்டுகொண்டிருந்த இன, மத சிறுபான்மையினர் தங்களது குரல்களையும் வெளிப்படுத்த இறங்கியுள்ளனர். 2011இலிருந்து சவுதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியத்தில் (அல் மிண்டாக் அல் ஷார்கியா) ஷியா சிறுபான்மையினர் ஒருங்கிணைந்து போராட்டம் […]


 • நானும் அவனும்

  நானும் அவனும்

  சு.பிரசன்ன கிருஷ்ணன் இப்போது 2012 இல் என்னுடைய 37 ஆவது அகவையில் கிருஷ்ணன் மற்றும் என்னுடைய வாழ்க்கை சரித்திரத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். ஆங்கிலத்தில் ஆட்டோ-பயோக்ராஃபி.. இதையெல்லாம் புத்தகமாக வெளியிட ஏதாவதொரு மடையன் முன்வர வேண்டும்..அப்படி என்ன நான் கிழித்து விட்டேன் என்று இதை படிக்க நேரும் போது உங்களுக்கு தெரியும். 37 மாதங்களில், 37 நாட்களில், 37 மணி நேரங்களில், ஏன் 37 மணி துளிகளிலும் கூட என் இனத்தவர்கள் அழிந்ததுண்டு. ஆனால் என் […]