author

கிளைகளின் கதை

This entry is part 12 of 30 in the series 20 ஜனவரி 2013

பிரபு கிருஷ்ணா  நெடுஞ்சாலையில் ஐம்பது வருடங்களாக நின்டிருந்து இன்று வெட்டப்பட்ட அந்த புளியமரத்தின் கிளைகள் ஒவ்வொன்றும் தன் நினைவுகளை பகிர ஆரம்பித்தன தழைகளை கடித்த ஆடுகள் கல்லெறிந்த கார்த்திக் சிறுவன் காதல் பேசிய சரவணன் துர்கா அழுது தீர்த்த செல்லம்மா திருடியதை புதைத்த கதிரவன் பிள்ளை பெற்ற லட்சுமி என எல்லா கிளைகளும் தங்கள் நினைவுகளை சொன்ன பிறகு மிச்சமிருந்த கடைசி கிளை எதுவும் சொல்லவில்லை அநேகமாய் அது வெட்டியவனின் பெயரை அறிந்திருக்கும் – பிரபு கிருஷ்ணா

பொம்மலாட்டம்

This entry is part 11 of 30 in the series 20 ஜனவரி 2013

கவிஞன் என்ற அடையாளத்திற்காக வளர்த்த குறுந்தாடி…….   பக்கத்திற்கு பக்கம் பதிய வைக்க அழகிய புகைப்படம்………   சுயமாய் அச்சடித்து தொகுப்பாய் கொடுக்க தேவையான பணம்…..   எல்லாவற்றையும் வசப்படுத்திய பின்பும் ஏனோ வசப்பட மறுக்கிறது கவிதை மட்டும்….!   மு.கோபி சரபோஜி.

நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும். . .

This entry is part 5 of 30 in the series 20 ஜனவரி 2013

          அர.வெங்கடாசலம்   இந்தமாதம் பதினைந்தாம் தேதி ஜான்பென்னி குய்க் என்ற ஆங்கிலேயே பொறியாளருக்கு முல்லைப்பெரியார் அனைக்கட்டில் தமிழக அரசு கட்டியுள்ள மணிமண்டபம் திறப்பு விழா கண்டது. 2011 டிசம்பர் மாதம் அப்போதைய மதுரை ஆட்சியர் சகாயம் தேனி மாவட்ட தனியமங்கலத்தைச் சேர்ந்த அறுபத்து மூன்று வயது விவசாயி வி.மாதவன் என்பவர் எழுதிய பத்து பக்கங்கள் கொண்ட ஜான்பென்னி குய்க்கின் வரலாற்றுப் புத்தகத்தை வெளியிட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஒரு செய்தி வெளியிட்டு இருந்தது. அந்தச் செய்தி […]

பேசாமொழி – வீடு சிறப்பிதழ்..

This entry is part 4 of 30 in the series 20 ஜனவரி 2013

பேசாமொழி – வீடு சிறப்பிதழ்..    http://www.pesaamoli.com/ நண்பர்களே பேசாமொழி இதழ் இந்த மாதம் வீடு சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. வீடு திரைப்படத்தின் வெள்ளி விழாவை கொண்டாடும் வகையில் இந்த இதழ் முழுவதும் வீடு திரைப்படம் சார்ந்தக் கட்டுரைகள், மற்றும் பாலு மகேந்திராவின் மிக விரிவான நேர்காணலுடன் வெளிவந்துள்ளது. நண்பர்கள் அவசியம் வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிரவும். http://www.pesaamoli.com/ இந்த இதழில்:    வெங்கட் சாமிநாதன்   அம்ஷன் குமார்   தியோடர் பாஸ்கரன்   ராஜன் குறை […]

கட்டாய உழைப்பு முகாம்களை சீர்திருத்த போவதாக சீனா கூறுகிறது.

This entry is part 1 of 32 in the series 13 ஜனவரி 2013

சீன அரசாங்க ஊடகமான க்ஸின்ஹூவா, இந்த வருடம் சீனாவின் கட்டாய உழைப்புமுகாம் முறையை சீர்திருத்தப்போவதாக அறிவித்திருக்கிறது.  சீனாவின் புதிய கம்யூனிஸ்ட் தலைவராக பொறுப்பேற்கும் க்ஸி ஜின்பிங்  Xi Jinping  தனது உரையில் சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ளப்போவதாக வாக்குறுதி அளித்ததன் முதல் படி என்று கூறுகிறார்கள். 1957இலிருந்து சீனாவில் இருக்கும் “உழைப்பு மூலம் மறுகல்வி”re-education through labour அமைப்பு, சாதாரண குற்றங்களுக்கு கூட எந்த விதமான நீதிமன்றம், வழக்குறைஞர் இடையீடு இல்லாமல் நான்கு வருடங்களுக்கு சிறை தண்டனை கொடுக்கலாம் […]

இன்னொரு வால்டனைத் தேடி…..

This entry is part 27 of 32 in the series 13 ஜனவரி 2013

எஸ்.எம்.ஏ.ராம்   தொடர்பு சாதனங்கள் பல்கிப் பெருகிய காலத்தில் வாழ்கிற நாம், உண்மையிலேயே சக மனிதர்களோடு தொடர்பு கொண்டிருக்கிறோமா? தொடர்பு என்பது என்ன? தொடர்பு என்றால் தீண்டுதல் என்று பொருள் கொள்ளலாமா? எப்படி என் சக மனிதனை நான் தீண்டுவது? உடலாலா? மனத்தாலா? அரூபமான மனம் எப்படி இன்னொரு அரூபத்தை ஸ்பரிசிக்கும்?   முதலில் இந்தத் தொடர்பு நிகழ்ந்தாக வேண்டிய அவசியமே தான் என்ன? தொடர்பே இல்லாமல் போனால் தான் என்ன கெட்டு விடும்? என்னைச் சுற்றி […]

‘எனது பர்மா குறிப்புகள்’ ‍பற்றிய ஒரு வாசகனின் சில‌ குறிப்புகள்

This entry is part 3 of 32 in the series 13 ஜனவரி 2013

ப குருநாதன் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் செ. முஹம்மது யூனூஸின் ‘எனது பர்மா குறிப்புகள்’ என்ற நூலின் தொகுப்பாளர் நண்பர் மு இராமனாதன் என்னிடம் இந்த நூலைப் பற்றி ஹாங்காங்கில் பிறகு நடக்கவிருந்த அந்த நூலின் வெளியீட்டு விழாவில் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்பொழுது இந்நூல் வெளியிடப்பட்டிருக்கவில்லை. முதல் பதிப்பு அச்சில் இருந்தது. ஆதலால், நூலைப் பற்றி நான் அதைப் படித்துவிட்டு பேசுவதற்காக, நூலின் வரைவுப்பிரதியை மின்னஞ்சல் மூலம் எனக்கு அவர் அனுப்பி வைத்தார். […]

சாய்ந்து.. சாய்ந்து

This entry is part 28 of 32 in the series 13 ஜனவரி 2013

– முஷாரஃப் முதுநபீன் (முஷாஃபி),   அன்று கல்லூரியின ‘பெயார்வெல் டே’. நண்பர்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பிரியாவிடை பெற்றுக் கொண்டிருந்தனர். எல்லோர் கையிலும் ஒரு ‘ஆட்டோகிராப்’ இருந்தது. ஒரே படபடப்புடன் காணப்பட்டாள் சைந்தவி. அவளின் கண்களோ ஆகாஷைத் தேடியது. ஆகாஷ் சைந்தவிக்கு ரொம்ப நெருக்கமானவன். ஆனால் இவர்கள் இருவருக்குமிடையில் ரொம்ப பெரிய இடைவெளி இருக்கும். ஆகாஷை தூரத்தில பார்த்தாளே சைந்தவி குஷியாகிவிடுவாள். கூடவே பதற்றமும் தொற்றிக் கொள்ளும். ஒரே கல்லூரி என்ற படியால் ஆகாஷும் சைந்தவியும் […]

சாதி….!

This entry is part 20 of 32 in the series 13 ஜனவரி 2013

மலை மங்கை   என் மனைவி சுமி போன்செய்திருந்தாள். இன்று கீதனை படசாலையிலிருந்து வீட்டுக்கு கூட்டிச்செல்லும்படி. தனக்கு அலுவலகத்தில் அவசர வேலை இருப்பதால் என்னைத்தான் மகன் கீதனை அழைத்துச்செல்லும்படி அன்புக்கட்டளை  இட்டிருந்தாள். இரண்டு மணித்துளிகள் விடுப்பு எடுத்துக்கொண்டு கீதனின் பாடசாலைக்கு விரைந்தேன். கீதன் அங்கு என்னை எதிர்பார்க்கவில்லை என்பது என்னைக்கண்டதும் அவன் முகம் மாறியதிலிருந்து என்னால் உணரமுடிந்தது. “Where is mum? What happened to her? …” அவன் கண்கள் அங்கும் இங்கும் அலைபாய்ந்தன. கீதனுக்குப்பக்கத்தில் […]

பொல்லாதவளாகவே

This entry is part 18 of 32 in the series 13 ஜனவரி 2013

கோமதி நடராஜன் அநியாயங்களைச் ,சகித்துக் கொண்டே போனேன் . நல்லவளானேன் . சகிப்பு தொலைந்து , நிமிர்ந்து பார்த்தேன் கெட்டவளாய் ஆனேன் நக்கல்களை ,நல்லவிதமாய், எடுத்துக் கொண்டே நகர்ந்தேன் நம்மவள் ஆனேன். ஏனென்று ஏறெடுத்துப் பார்த்தேன். யாரோ என்றானேன் . பொய்யென்று தெரிந்தும், பொறுத்துப் போனேன் ஏற்றவளானேன் நம்பாத முகம் காட்டினேன் தகாதவளானேன் நல்லவளாய் ஏற்றவளாய் இனியவளாய் என்றுமிருக்க நல்லவை அல்லாதவைகளைப், பொறுத்துப் போனால்தான் சாத்தியமென்றால் , பாதகமில்லை ! நான் ,பொல்லாதவளாகவே இருந்துவிட்டுப் போகிறேன். ————————–