குற்றமுள்ள குக்கீகள் (cookies)

உனது செல்பேசியைக் கொந்த முயன்றதில் எனது சில நழுவிய அழைப்புகளும் கூந்தல் பராமரிப்பிற்கான குறுஞ்செய்திகளும் மட்டுமே கிடைத்தன உனது மின்னஞ்சலை புகுந்து படித்ததில் சில எரிதமும், எண்ணவே இயலாத அளவு பணப்பரிசு அஞ்சல்களும் மட்டுமே கிடைத்தன உனது இணைய அரட்டைகளை இடைமறித்து…

சொல்வலை வேட்டுவன்

தொடங்கத்தயங்கி நின்ற எனது காற்புள்ளிகள் உனது மேற்கோள்கள் தொடத்தயங்கும் உனது பதங்கள் எனது வரிகள் தர்க்கங்களைக்கடந்து நிற்கும் உனது விவாதங்கள் எனது வாக்கியங்கள் பொருளை வெளிச்சொல்ல தாமே நாணி நின்ற உந்தன் சொற்கள் எனக்கு இடைவெளிகள் நீ விட்ட இடத்திலிருந்து நான்…

நூலிழை

கவிதைக்கும்,பொய்க்கும் உள்ள தூரம் கனவுக்கும்,நனவுக்கும் உள்ள தூரம் நிழலுக்கும்,நிஜத்திற்கும் உள்ள தூரம் ஒப்பனைக்கும்,இயல்பிற்கும் உள்ள தூரம் அடங்கலுக்கும்,மீறலுக்கும் உள்ள தூரம் மனதிற்கும்,நினைவிற்கும் உள்ள தூரம் சொல்லுக்கும்,பொருளுக்கும் உள்ள தூரம் விழிப்பிற்கும்,உறங்கற்கும் உள்ள தூரம் உனக்கும் எனக்கும் இடையே உள்ள தூரம்.... சின்னப்பயல்…

அட்ஜஸ்ட்

காதலியோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா அவளுக்கே கணவனா ஆகியிருக்கலாம், வாத்தியாரோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா இந்நேரம் டிகிரி முடிச்சிருக்கலாம், கூட்டாளிகளோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா பிஸினஸ்ல இன்னும் நல்ல ப்ராஃபிட் பாத்திருக்கலாம், பங்காளிகளோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு…

காதல் பரிசு

ப்ரிட்னி ஸ்பியர்ஸ் பாடிக்கொண்டிருந்தாள் எம்.டீவியில் "Bombastic love , So Fantastic " என்று சத்தம் போட்டுக்கொண்டு., "அந்த வால்யூமத்தான் கொஞ்சம் கொறக்கிறது , உனக்கு என்ன காது செவிடா ? டீவி முன்னாலதான ஒக்காந்துருக்க? " உள்ளேயிருந்து ஸ்வேதா இரைந்த…

ஆர்வமழை

மழையில் எந்த மழை சிறந்தது? சிறு தூறலா, இல்லை அடித்துப்பிளக்கும் மழையா? வெறுமனே போக்குக்காட்டி விட்டு போகும் மழையா? அல்லது சிறிதும் எதிர்பார்க்காத கணத்தில் கிளையிலிருந்து சட்டெனப்பறந்து போகும் பறவை போல, தூறிக்கொண்டிருந்து விட்டு சட்டெனக்கலையும் மழையா? அல்லது நேற்றுப்பெய்த மழையா…

கிறீச்சிடும் பறவை

  நாள் தவறாமல் வந்து என் ஜன்னல் கம்பிகளில் அமர்ந்து ஒரு சிறு பறவை கிறீச்சிடுகிறது என் கவனத்தைக்கவர.   எதை ஞாபகப்படுத்த ? மறந்துபோன இயற்கையுடனான நட்பையா ? அல்லது கடந்து சென்ற காலங்களை மீள் நினைவூட்டவா ?  …

அபியும் அப்பாவும்

சிகரெட் பிடிப்பதில்லை மது அருந்தும் பழக்கம் இல்லை பிற கெட்ட பழக்கங்கள் இல்லை - இவன் வேண்டாம்   வெள்ளி செவ்வாய் தவறாது கோவிலுக்கு போவான் இறைவழி நடப்பதில் தான் விருப்பம் வம்புதும்புக்கு போய் பார்த்ததில்லை - இவன் வேண்டாம்  …

வட்டத்துக்குள் சதுரம்

சில சதுரங்கள் கூடி தம்மைக்கொண்டு ஒரு வட்டத்தை உருவாக்க முனைந்தன சில சதுரங்கள் அதற்கு ஒத்துக்கொண்டன சில அவற்றை சற்றுத்தள்ளி நின்று வேடிக்கை பார்த்தன ஒரு சதுரம் நாம் எவ்வளவு தான் முயன்றாலும் வட்டத்தை உருவாக்க முடியாது என வாதிட்டது அதனை…

ஆமைகள் ஏன் தற்கொலை செய்து கொள்வதில்லை?

சற்றேறக்குறைய வெறும் அறுபது ஆண்டுகளே வாழ்வதில் சலித்துப்போகிறது நமக்கு. ஆமை முன்னூறு ஆண்டுகள் எப்படி ,ஏன் வாழ்கிறது ?! வாழ்ந்து என்ன சாதிக்கிறது ?! சொய்வு,கழிவிரக்கம், திரும்பத்திரும்ப அதே செயல்களை வாழ்வில் மீண்டும் மீண்டும் செய்தல், போட்டி,போராட்டங்கள், சலிப்பு,பேருவகை, தாங்கமுடியா துயரம்…