Posted inகவிதைகள்
நெருப்பின் நிழல்
ஒற்றை மெழுகுவர்த்தி பிரகாசமான சுடர். . காற்றின் அசைவுக்கு சுற்றி சுழன்று அணைகிற போக்கில் சப்பனமிட்டு -பின் நிலைபடுத்தி நெடுநெடுவென்று அலைஅலையாய்... வாழ் சூட்சம நெளிவுகள் . . சூட்சமங்களின் அவசியமற்று மெழுகுவர்த்தியின் காலை சுற்றி வட்டமாய், நீள்வட்டமாய்,நெளிநெளியாய்…