Articles Posted by the Author:

 • குரு

  குரு

  விழுப்புரம் பேருந்து நிலையத்தில்தான் வண்டி நிற்கிறது தாம்பரம் செல்ல இன்னும் குறைந்தது மூன்று மணி ஆகலாம். முன் இரவுக்குள் இந்த வண்டி மாநகரம் சென்றுவிட்டால் நிம்மதி. தாண்டிப்போனால் ஆட்டோக்காரர்கள் வைத்ததுதான் வரி.. நாமும் ஒரிடம் நடந்து சென்றுவிடமுடியாது. நடந்து சென்றுவிடும் தூரத்தில் எதுவும் யாருக்கும் இல்லாமல் எப்படியோ ஒரு நகரம் தன்னை அமைத்துக்கொண்டுவிடுகிறது. அதுதானே வேடிக்கை. இதனை ஒரு வேதனை என்றுமே கூறலாமா. பேருந்தில் பயணிப்பவர்களின் மனோ கதியில் எப்போதும் அந்த வண்டியின் டிரைவரும் கண்டக்டரும் இருப்பதில்லை. […]


 • ஜரகண்டி

  ஜரகண்டி

  – எஸ்ஸார்சி அவன் எழுதிய புத்தகத்திற்குத்தான் அந்த ஆண்டிற்கான அரசாங்கத்தின் விருது என்று அறிவித்திருந்தார்கள். செய்தித்தாளில் அந்த அறிவிப்பு வந்திருக்கிறதே. அப்படி எல்லாம் அவனைப்போன்ற விருது என்ற ஒன்றினை வாங்கிவிடும் பிரத்தியேக அரசியல் அல்லது கலை தெரியாதவர்கட்கெல்லாம் இந்த காலத்தில் விருது அறிவிப்பு சொல்லி விடுவார்களா. ஆனாலும் சொல்லி இருக்கிறார்களே. அவன் அடிமனத்தில் கொஞ்சம் பெருமைப் பட்டுக்கொண்டான். செல் பேசியில் யாரெல்லாமோ அழைத்தார்கள். வாழ்த்துச் சொன்னார்கள். ‘எனக்கு உங்கள் படைப்பைபப்படித்த அப்போதே தெரிந்து விட்டது.. இதற்கு நிச்சயம் […]


 • நினைப்பு

  நினைப்பு

  மாநகரத்து மைய்யமாய்ப்பார்த்து அந்த பிரம்மாண்ட மண்டபத்தைத்தான் இயக்கத்துக்காரர்கள் த்தேர்வு செய்திருக்கிறார்கள். அவருக்கு எண்பது வயது நிறைந்தமைக்கு ஒரு விழா ஏற்பாடு. அவர் என்றால் அது யார் என்று கேட்பீர்கள். நான் பெயர் சொல்வதாயில்லை அந்த அவர்.தான் அது . ‘ எனக்கு எண்பது நிறைவுக்கு வருகிறது ஒரு விழா எல்லாம் ஏற்பாடு செய்யுங்கள்’ அவரா கேட்டார் என்றால் அதுதான் இல்லவே இல்லை. பின் எதற்கு இந்த விழா. அவர் சார்ந்திருக்கும் ஒரு இயக்கத்துக்குச் சொந்தக் கட்டிடம் எழுப்பும் […]


 • அவம்

  அவம்

  கிசு பற்றி உங்களுக்கு தெரிந்தும் இருக்கலாம் தெரியாமலும் இருக்கலாம்.. கிசு எண்பது அகவை தாண்டிய மூத்த படைப்பாளி. மொழி பெயர்ப்பு செய்வோரைப்போய் படைப்பாளி என்று எப்படி அழைப்பது என்று யாரேனும் குடுமிப்பிடிச் சண்டைக்கும் வரலாம்.  வரட்டும் அதனால் என்ன சண்டையேதான் வளர்ச்சிக்கு ஆதாரம்.                                                                                              கிசு இப்போதைக்கு கல்கத்தா என்கிற கொல்கத்தா நகரத்து வாசி. அவரின் அந்த வங்கத்து வாழ்க்கைக்கே  அறுபது ஆண்டுகள் முடிந்து போயிற்று. கொஞ்சம் கவிதை கொஞ்சம் கட்டுரை என்று தமிழில் ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கியவர்தான். […]


 • ரணம்

  ரணம்

  புத்தகம் வெளியிட்டுத்தரும் பெரிய மனிதர்கள் எல்லோரும்  ஒரு எழுத்தாளனுக்கு சம்பந்திமார்கள். சர்வ ஜாக்கிரதையாய்ப்பழகி வந்தால்தான் உண்டு. உண்டு என்று சொல்லிவிட்டீர்களே அது என்ன என்று  என்னைக் கேட்டால்  எப்படித்தான் நான் சொல்வது.  எழுத்தாளனாய் இருந்து ஒருவன் கொஞ்சம் மொத்துப்பட்டால் மட்டுமே இதுகள் எல்லாம் அத்துப்படி ஆகும். யாருக்கேனும் யான் பட்ட இந்த அவத்தையை உடன் சொல்லிவிடவேண்டும் என்று  உறுத்தலாயிருக்கிறதே பிறகென்ன செய்ய. ஆகத்தான் கதை. புத்தக வெளியீட்டாளர்களை எடுத்தேன் கவிழ்த்தேன் என்றெல்லாம் ஒரு எழுத்தாளர் பேசிவிடலாம். அதற்கென்னக் […]


 • உழுதவன் கணக்கு

  உழுதவன் கணக்கு

  புத்தாண்டு பிறந்த அன்று அதனை வாழ்த்தி வரவேற்பதற்காக அய்ந்துகிலோ பச்சரிசி வாங்கி வண்ணங்கள் பல சேர்த்து அலுவலக வாயிலிலே கோலம் போட்டிருந்தார்கள். கோலம் போட்ட அய்ந்து கிலோ அரிசியும் அய்ந்து ரூபாயுக்கு பெருநகர ரேஷன் கடை வாயிலில் வாங்கியதாம். மத்திய அரசின் ஒரு அலுவலக வாயிலில்தான் அந்த அழகுக்கோலம். அந்தக்கோலம் போட்டவர்கள் ஐவரும் அந்த அலுவலகத்துப் பெண் ஊழியர்கள். அவ்வலுவலக அதிகாரிகள் சிலரும் கூடவே இப்படியும் அப்படியும் அக்கோல கோஷ்டியோடு தொங்கிகொண்டிருந்தார்கள். கம் கணபதியே நம என்று […]


 • பாதுஷா என்னும் ஒரு பாதாசாரி

  பாதுஷா என்னும் ஒரு பாதாசாரி

  மலையாள மூலம் – ஆர். உன்னி ஆங்கில வழி தமிழில்- எஸ்ஸார்சி பெருங்கடற்கரையா, பாலைவனமா, களர்நிலமா, எங்கிருந்தால்தான் என்ன நடத்தல் மட்டுமே தனிச் சுகம்-தொரயூ அவனிடம் ஒரு சாவி ஒரு கிளிஞ்சல் பச்சையாய் இலையொன்று இருந்தது. அவர்களுக்குச்சோதனையில் அவனிடமிருந்து வெறெதுவும் கிடைக்கவில்லை. அவர்கள் அவனை மாறி மாறித்தான் சோதனை போட்டார்கள். அவனுடைய நரைத்த தலை முடி முகம் தொங்கும் தாடி, வாயொடு குதத்திறப்பு எல்லாமே சோதனைக்குள்ளானது. இதோ தெரிகிறதே காவல் நிலையம் அதன் உள்ளே இருக்கும் ஒரு […]


 • பட்டறிவு – 2

  பட்டறிவு – 2

  அவன் மாலை அலுவலகம் முடிந்து தன் கோர்ட்டர்ஸ் வீடு நோக்கிப்புறப்பட்டான்.. கோர்டர்ஸ் பிரதான வாயிலில் அதே மினி லாரியின் உறுமல் ஒலி கேட்டது. ஆமாம் அதே மினி லாரி தான் வந்து கொண்டிருந்தது. ஆசாரி அதனுள்ளாக அமர்ந்துகொண்டிருந்தான். தன் கைகளை அசைத்து வேலை முடிந்து தான் திரும்புவதைச் சொல்லியிருக்கவேண்டும். லாரியின் பின்னாலேயே அவன் தன் டிவி எஸ் வண்டியில் வந்தான். மினிலாரி கோர்ட்டர்சின் வாயில் பகுதியில் முன்பாக நின்றுகொண்டது. ஆசாரி லாரியின் முன்பக்கத்தில் இருந்து இறங்கி வந்து […]


 • பட்டறிவு – 1

  பட்டறிவு – 1

  – எஸ்ஸார்சி (குறுநாவல்) அவனும் அவளும் மும்பை சென்று வந்தார்கள். விடுப்புச்சலுகைப்பயணம் என்கிற அந்த வசதியை பயன்படுத்திக்கொண்டுதான். மைய அரசின் ஒரு அலுவலகத்தில் அவன் பணி புரிவதாலே அவர்கள் தந்த சலுகை. நான்காண்டுகளுக்கு ஒரு தடவை பறந்து விரிந்த இந்த இந்திய தேசத்தில் எங்கேயாவது ஒரு ஊருக்கு குடும்பத்தோடு சென்று திரும்பலாம். குடும்பம் என்பது எது என்கிற வினாவுக்கு ச்சரியாக விடை தெரிந்திருக்க வேண்டும். தெரியாவிட்டால் கூட அப்படி ஒன்றும் பாதகம் இல்லை. நீட்டி முழக்கி வியாக்கியானங்கள் […]