author

வலி

This entry is part 14 of 34 in the series 6 ஜனவரி 2013

உறவினர் வீட்டுத்திருமணமொன்றிற்குச்சென்றுவிட்டு நானும் என் மனைவியும் திரும்பிக்கொண்டிருந்தோம். திருமண நிகழ்வில் இசைச் சங்கதிகள் ஆழமாய்த்தெரிந்த ஒரு நாதசுரக்காரரின் வாசிப்புக் கேட்ட பின்னே   நல்ல தொரு மண விருந்து. சாப்பாட்டுப்பந்தியில்தான் சுவை மிகுந்த எத்தனை எத்தனைப்பதார்த்தங்கள். கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்தான். சாப்பிடுவோர் முகம் பார்த்து இலை பார்த்து ப்பரிமாறும் சமையல் சிப்பந்திகள். திருமண விருந்து முடிந்து இனம் புரியாத ஒரு நிறைவு எங்கிருந்தோ வந்து கள்ளமாய் மனதிற்குள்ளே  ஆக்கிரமித்துக்கொண்டது. . இது மாதிரி எல்லாம் எப்போதேனும் […]

பதில்

This entry is part 12 of 26 in the series 30 டிசம்பர் 2012

தாம்பரம் ரயில் நிலையம்.முன் போலவா இருக்கிறது அதுதான். இல்லை. தமிழ் பேசுபவர்களைவிட இந்தி மொழி பேசிக்கொண்டு ராஜ நடை நடந்து செல்பவர்களே அதிகம். தமிழுக்குத்தாலாட்டு இந்திக்கு ,,,, என்னவென்றால் வே அது இது என்று கையில் கிடைத்த கரிக்கட்டியால் ரயில்வே சுவரில் எழுதிவிட்டு அப்போதைக்கு கண்ணில் பட்ட இந்தி எழுத்துப் பெயர்ப்பலகைகளையெல்லாம் எல்லாம் ஔசியில் கிடைத்த தார் பூசி கன்னா பின்னா என குழப்பியும் கீறியும் விட்டு என்னைப்பார் என் அழகைப்பார் என்கிறபடி ஒரு காலத்தில் நாம் […]

தாயுமானவன்

This entry is part 23 of 27 in the series 23 டிசம்பர் 2012

அவள் வெளியே தெருவில் நிற்கிறாள். இனி அவள் அந்த வீட்டின் உள்ளே வருவாளா. யாருக்கு அதுதெரியும். நேரமோ நள்ளிரவு. தெருவின் மின்கம்ப விளக்குகள் அனாதையாக எரிந்துகொண்டிருந்தன. வெளிச்சம் வேண்டுமென்று ஆசைப்பட்டு மின்விளக்கு அருகே போய்த் தம்மை முடித்துகொாள்ளும் பறக்கும் சிறு சிறு இறக்கைப் பூச்சிகள் வீதி யெங்கும் மண்டிக்கிடந்தன. ஆகாயத்து அரை நிலா பளிச்சென்று தன் இருப்பைக்காட்டி பூ உலக நடப்பைப் பார்த்து நகைத்துக்கொண்டே நகர்ந்தது. பூமியொடு ஆகாயத்து நிலவுக்குத்தான் தொப்புள் கொடி பந்தமாயிற்றே. எங்கோ ஒரு […]

பொறுப்பு

This entry is part 23 of 31 in the series 16 டிசம்பர் 2012

கணியம் பதிப்பகத்து சம்பந்தனாரின் மகள் திருமணம். என்னுடைய பதிப்பகத்தார் வீட்டுத்திருமணம். நான் எழுதுவதை எல்லாம் அவர் வெளியிட்டுத்தான் நான் எழுத்தாளன் என்று ஆனேன். அப்படியெல்லாம் இல்லை என்று நான் எப்படிப்பொய்ச்சொல்வது. எழுதியதைப் புத்தகம் என்றாக்கி ஒர் உருக்கொடுத்து க்கொண்டு வந்தால்தான் வெளியுலகம் நாம் எழுதியிருப்பதாய் சொல்கிறது. என்னத்தை நாம் அப்படி எழுதியிக்கிழித்து விட்டோம் என்பது யாருக்கும் தெரியவேண்டிய அவசியமே இல்லை. எவருக்குமே அக்கறை இல்லாத எழுத்தின் ஆழம் கனம் இவை பற்றி நாம் மட்டும் கவலைப்படுவானேன். எழுதியவன் […]

சந்திப்பு

This entry is part 13 of 26 in the series 9 டிசம்பர் 2012

தாம்பரம் தொடர் வண்டி நடைமேடையில் நான் நடந்துகொண்டிருந்தேன் மின்சார ரயிலை விட்டிறங்கி இன்னும் ஐந்து கிலோமீட்டருக்கு ச்சென்றாக வேண்டும். அங்கு தான் வீடு என்று சொல்லிக்கொள்ள ஒன்றைக்கட்டிக்கொண்டு மிச்ச வாழ்க்கையை ஒட்ட எனக்கு சாத்தியமாயிற்று. பணம் படுத்தும் பாடுதானே எல்லாமும். ‘ அது சரி எதிரே வருகிறவன் நண்பன் சிவா போலே தெரிகிறான்.சிவா என்கிற அந்த சிவசுப்பிரமணியன் என் நண்பன். அவனைப்பார்த்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருக்கும், நானும் அவனும் ஒரே அறையில் வசித்தவர்கள். ஒரே […]

குரு

This entry is part 26 of 31 in the series 2 டிசம்பர் 2012

விழுப்புரம் பேருந்து நிலையத்தில்தான் வண்டி நிற்கிறது தாம்பரம் செல்ல இன்னும் குறைந்தது மூன்று மணி ஆகலாம். முன் இரவுக்குள் இந்த வண்டி மாநகரம் சென்றுவிட்டால் நிம்மதி. தாண்டிப்போனால் ஆட்டோக்காரர்கள் வைத்ததுதான் வரி.. நாமும் ஒரிடம் நடந்து சென்றுவிடமுடியாது. நடந்து சென்றுவிடும் தூரத்தில் எதுவும் யாருக்கும் இல்லாமல் எப்படியோ ஒரு நகரம் தன்னை அமைத்துக்கொண்டுவிடுகிறது. அதுதானே வேடிக்கை. இதனை ஒரு வேதனை என்றுமே கூறலாமா. பேருந்தில் பயணிப்பவர்களின் மனோ கதியில் எப்போதும் அந்த வண்டியின் டிரைவரும் கண்டக்டரும் இருப்பதில்லை. […]

ஜரகண்டி

This entry is part 18 of 42 in the series 25 நவம்பர் 2012

– எஸ்ஸார்சி அவன் எழுதிய புத்தகத்திற்குத்தான் அந்த ஆண்டிற்கான அரசாங்கத்தின் விருது என்று அறிவித்திருந்தார்கள். செய்தித்தாளில் அந்த அறிவிப்பு வந்திருக்கிறதே. அப்படி எல்லாம் அவனைப்போன்ற விருது என்ற ஒன்றினை வாங்கிவிடும் பிரத்தியேக அரசியல் அல்லது கலை தெரியாதவர்கட்கெல்லாம் இந்த காலத்தில் விருது அறிவிப்பு சொல்லி விடுவார்களா. ஆனாலும் சொல்லி இருக்கிறார்களே. அவன் அடிமனத்தில் கொஞ்சம் பெருமைப் பட்டுக்கொண்டான். செல் பேசியில் யாரெல்லாமோ அழைத்தார்கள். வாழ்த்துச் சொன்னார்கள். ‘எனக்கு உங்கள் படைப்பைபப்படித்த அப்போதே தெரிந்து விட்டது.. இதற்கு நிச்சயம் […]

நினைப்பு

This entry is part 9 of 29 in the series 18 நவம்பர் 2012

மாநகரத்து மைய்யமாய்ப்பார்த்து அந்த பிரம்மாண்ட மண்டபத்தைத்தான் இயக்கத்துக்காரர்கள் த்தேர்வு செய்திருக்கிறார்கள். அவருக்கு எண்பது வயது நிறைந்தமைக்கு ஒரு விழா ஏற்பாடு. அவர் என்றால் அது யார் என்று கேட்பீர்கள். நான் பெயர் சொல்வதாயில்லை அந்த அவர்.தான் அது . ‘ எனக்கு எண்பது நிறைவுக்கு வருகிறது ஒரு விழா எல்லாம் ஏற்பாடு செய்யுங்கள்’ அவரா கேட்டார் என்றால் அதுதான் இல்லவே இல்லை. பின் எதற்கு இந்த விழா. அவர் சார்ந்திருக்கும் ஒரு இயக்கத்துக்குச் சொந்தக் கட்டிடம் எழுப்பும் […]

அவம்

This entry is part 12 of 33 in the series 11 நவம்பர் 2012

கிசு பற்றி உங்களுக்கு தெரிந்தும் இருக்கலாம் தெரியாமலும் இருக்கலாம்.. கிசு எண்பது அகவை தாண்டிய மூத்த படைப்பாளி. மொழி பெயர்ப்பு செய்வோரைப்போய் படைப்பாளி என்று எப்படி அழைப்பது என்று யாரேனும் குடுமிப்பிடிச் சண்டைக்கும் வரலாம்.  வரட்டும் அதனால் என்ன சண்டையேதான் வளர்ச்சிக்கு ஆதாரம்.                                                                                              கிசு இப்போதைக்கு கல்கத்தா என்கிற கொல்கத்தா நகரத்து வாசி. அவரின் அந்த வங்கத்து வாழ்க்கைக்கே  அறுபது ஆண்டுகள் முடிந்து போயிற்று. கொஞ்சம் கவிதை கொஞ்சம் கட்டுரை என்று தமிழில் ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கியவர்தான். […]

ரணம்

This entry is part 8 of 31 in the series 4 நவம்பர் 2012

புத்தகம் வெளியிட்டுத்தரும் பெரிய மனிதர்கள் எல்லோரும்  ஒரு எழுத்தாளனுக்கு சம்பந்திமார்கள். சர்வ ஜாக்கிரதையாய்ப்பழகி வந்தால்தான் உண்டு. உண்டு என்று சொல்லிவிட்டீர்களே அது என்ன என்று  என்னைக் கேட்டால்  எப்படித்தான் நான் சொல்வது.  எழுத்தாளனாய் இருந்து ஒருவன் கொஞ்சம் மொத்துப்பட்டால் மட்டுமே இதுகள் எல்லாம் அத்துப்படி ஆகும். யாருக்கேனும் யான் பட்ட இந்த அவத்தையை உடன் சொல்லிவிடவேண்டும் என்று  உறுத்தலாயிருக்கிறதே பிறகென்ன செய்ய. ஆகத்தான் கதை. புத்தக வெளியீட்டாளர்களை எடுத்தேன் கவிழ்த்தேன் என்றெல்லாம் ஒரு எழுத்தாளர் பேசிவிடலாம். அதற்கென்னக் […]