கோவை எழிலன் பொதிகைமலை தனில்தோன்றி தமிழ கத்தின் பொருநையிலும் பொன்னியிலும் குளித்துப் பின்னர் விதவிதமாய் மதுமலர்கள் வாசம் வீசும் விந்தியமா மலைச்சாரல் தாண்டி இந்த நதிக்கரையில் ராதையெனைத் தழுவி நிற்கும் நல்லநறு மணங்கொண்ட தென்றல் காற்றே! விதிவசத்தால் துணையிழந்த என்றன் நெஞ்சின் வாட்டத்தைப் போக்கிடவே தூது செல்லாய். அடியவளின் தூதெனவே நீயும் இந்த ஆய்பாடி நன்னகரை விட்ட கன்று கடிநகராம் மதுராவில் ஏகி ஆங்கே கண்ணன்வாழ் இல்லடைந்தே அன்னான் முன்னர் கொடிகளையே அசைவிப்பாய்; அதனைக் கண்டால் […]
எழிலன் , கோவை சுப்பு ரத்தினமாகப் பிறந்து பின் பாரதியால் கண்டெடுக்கப்பட்டு பாரதிதாசனாக பரிமளத்த பாவேந்தர், பாரதியின் அடியொட்டி சமூக விடுதலையை அடி நாதமாகக் கொண்ட பல பாடல்களை எழுதியுள்ளார். எவ்வாறு பாரதியின் கவிதைகளில் தேச விடுதலை மையமாக இருந்ததோ அவ்வாறு பாவேந்தரின் கவிதைகளில் தமிழும் பகுத்தறிவும் மையமாக இருந்தன. அவ்வாறு எழுந்த ஒரு குறுங்க்காவியமே சஞ்சீவி பார்வத்ததின் சாரல் என்பது ஆகும். இந்தியத் திருநாட்டின் பெரும் இதிகாசங்களில் ஒன்றான இராமகாதையில் வரும் அனுமன் மருத்துவ […]