5. யமுனா ராஜேந்திரனின் கட்டுரை வத வதவென்று பல படங்களைப் பற்றிப பேசுகிறது. அவர் எத்தனை படங்களைப் பார்த்திருக்கிறார் என்று தம்பட்டம் அடிக்க இது உதவலாமே தவிர விஸ்வரூபம் விமர்சனத்திற்கு உதவாது. ஒரு கலாசாரத்தின் பின்னணியில் எடுக்கப்பட்ட படைப்பு ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கில் ஒவ்வொரு பார்வையில் ஒவ்வொரு அழுத்தப் புள்ளியில் செயல்படும். இரண்டு படங்களை ஒப்பிட்டு இந்தப்படம் சிறந்தது, இன்னொரு படம் சிறந்தது இல்லை என்று மதிப்பீட்டை முன்வைப்பதற்கு அவை இரண்டும் ஒரு நாட்டினைப் பற்றியது என்ற […]
இந்தத் தொடர் தொடங்கும்போது விஸ்வரூபம் விமர்சனங்களை முன்வைத்து தமிழில் எழுதப் படும் சினிமா விமர்சனங்களின் ஒரு தொகுப்புப் பார்வையாய் முன்வைக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். யமுனா ராஜேந்திரனின் விமர்சனம் அந்த விதத்தில் ஒரு சரியான உதாரணம் என்று எண்ணுகிறேன். யமுனா ராஜேந்திரனின் “அமெரிக்கப் பைத்திய நிலை தரும் சந்தோஷம்” (உயிர்மை) யமுனா ராஜேந்திரன் நிறையப் படிக்கிறார் நிறைய படங்களைப் பார்க்கிறார். நிறைய எழுதுகிறார் அவர் எழுத்துக்கும் அவர் தொட்டிருக்கும் விஷயங்களுக்கும் விமர்சனத்திற்கும் ஏதும் பொருத்தம் இருக்கிறதா என்பது […]
யமுனா ராஜேந்திரனின் “அமெரிக்கப் பைத்திய நிலை தரும் சந்தோஷம்” (உயிர்மை) பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு திரைப்படம் வந்தது. அதன் பெயர் “குட்பை லெனின்” . கிழக்கு ஜெர்மனியில் உள்ள ஒரு பெண், தன் மகன் கைது செய்யப்படுவதைக் கண்டு மயக்கமுற்று கோமா நிலைக்குச் சென்று விடுகிறாள். அவள் கோமாவிலிருந்து விடுபடும் முன்பு கிழக்கு ஜெர்மனியே காணாமல் போய் விடுகிறது. கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனியின் பிரிவுச் சுவர் தகர்க்கப் பட்டிருக்கிறது. இரண்டு ஜெர்மனிகளும் ஒன்றிணைந்து ஒரே […]
நல்ல படங்களைப் பார்க்கும் என் பழக்கம் திருச்சியில் சினி போரத்தில் தொடங்கியது. பேராசிரியர் எஸ் ஆல்பர்ட் அவர்களின் வழிகாட்டுதலில் தொடங்கிய சினி போரம் பல ஆண்டுகளாக உலக அளவிலும், இந்திய அளவிலும் வெளிவந்திருந்த முக்கியமான படங்களை பார்க்கும் அரிய சந்தர்ப்பத்தினை இந்த போரம் அளித்தது. சத்யஜித் ரே, குரோசவா, பெலினி, போலன்ஸ்கி, கோதார் , த்ருபோ என்று பலதரப்பட்ட பெரும் ஆளுமைகளின் படங்களைப் பார்க்கவும் விவாதிக்கவும் களத்தை அமைத்துக் கொடுத்த அந்த அமைப்பிற்கு என் ஈடுபாடுகளை விரிவு […]
இந்த கட்டுரை எழுதத் தொடங்கும்போதே என் இலக்கிய நண்பர்களில் சிலருக்கு நான் தீண்டத் தகாதவனாகி விடுவேன் என்பதை நான் உணர்கிறேன். கமல் ஹாசனின் சினிமா பங்களிப்பு தமிழ் சினிமாவின் தளத்தில் மிக முக்கியமான ஒன்று என்று தான் கருதுகிறேன். தமிழ் சினிமாவின் சிறந்த படங்கள் எனப் பட்டியலிட்டால் அவற்றில் “குணா” (இந்தப் படம் பற்றி ஆய்வாளர் காளி சுந்தர் ஒரு அருமையான விமர்சன ஆய்வினை எழுதியுள்ளார். அது தமிழில் மொழிபெயர்க்கப் பட்டதா என்று தெரியவில்லை.), “பேசும் படம்” […]
விஸ்வரூபம் படத்துக்கு திரைப்பட விமர்சனம் எழுதலாம். அல்லது அந்த திரைப்படத்தில் பேசப்பட்ட அரசியலுக்கு விமர்சனம் எழுதலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்த விமர்சகர்கள், விஸ்வரூபம் படத்தின் கலை நுணுக்கத்தையும் பார்க்கவில்லை. அதன் அரசியலையும் பார்க்கவில்லை. வஹாபி பார்வையுடைய இஸ்லாமிய அமைப்புகள் இந்த படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது, இந்த அமைப்புகளை ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களின் பிரதிநிதிகளாக கருதிகொண்டு, அதன் காரணம் தொட்டு கமலஹாசனை விமர்சிப்பதையே முக்கியமாக செய்தார்கள். முதலில் விஸ்வரூபம் படத்தின் அடிப்படை அரசியல் நிலைப்பாடு என்ன என்பதை […]
6.26. ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? (விவிலியம் – மத்தேயு) ** விஸ்வரூபம் திரைப்படம் பற்றி விமர்சனம் எழுதப்புகுந்தால், அது முழுமையாக ஆராயப்பட வேண்டும். அப்போது அதன் முழுக்கதையையும் பேச வேண்டி வரலாம் என்பதாலும், அன்றைக்கு எப்படிப்பட்ட விமர்சனங்களை விஸ்வரூபம் எதிர்கொண்டிருக்கிறது என்பதாலும், அவற்றில் சொல்லப்படாத சில விஷயங்களை பேசுவதற்காக தாமதமாக இந்த விமர்சனம் எழுதப்படுகிறது. ** மறுபடியும், தமிழ் […]
இஸ்மத் சுக்தாய் எழுதிய ஒரு கட்டுரையினை ராகவன் தம்பி இந்த வாரம் அளித்துள்ளார். எப்படி இஸ்மத் சுக்தாய் எழுதிய ஒரு கதைக்காக அவர் மீது வழக்க்குத் தொடரப் பட்டது என்றும் அவர் அதனை எதிர்கொண்டது எப்படி என்றும் முன்னமே மலர் மன்னன் ஒரு முறை சுக்தாய் வரலாற்றை எழுதியவர்களின் கட்டுரையிலிருந்து மொழியாக்கம் செய்து அளித்துள்ளார். http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20708232&format=html ராகவன் தம்பியின் மொழியாக்கம் நேரடியாக இஸ்மத் சுக்தாய் வார்த்தைகளிலேயே வெளியாகிறது. புத்தகத்திற்கு எதிரான போர் என்பது எல்லாக் காலங்களிலும் கருத்துகளை […]
மரபு பற்றியும், மரபு நமக்குச் சுமையா அல்லது நாம் மரபுக்குச் சுமையா என்பதையும் பற்றி பல கேள்விகளை எழுப்பிச் செல்கிறது பாரவியின் நீள் கட்டுரை. “மரபு எது? மரபுக்கு பொருள் உண்டா? மரபு தளம் உண்டா? உண்டெனில் அது என்னவாக இருக்கிறது? ” தொடர்ந்து பல கேள்விகளை இதச் சுற்றியே பின்னுகிறார் பாரவி. “இங்கு இன்று நான் எதுவாக இருக்கிறேன். நீ என்னவாக உள்ளாய்? எதன் அர்த்தம்/ பொருள் இயங்கு தளங்களாக நாம் பயணப் படுகிறோம். தேடலின்றியே […]
(எஸ் சுவாமிநாதன்) அர்த்தம் என்பதை எப்படி அர்த்தப் படுத்திக் கொள்வது என்பது மொழியியலும், சமூக வரலாறும், அன்றாட வழக்காடலும் இணைந்து நிற்கும் ஒரு களத்தில் எழுகிற கேள்வி. இதற்கான பதில் சுலபமானதோ எளிய ஸூத்திரங்களுக்குள் அடங்குவதோ அல்லது இதற்கு இது தான் அர்த்தம் என்று சட்டாம்பிள்ளைத்தனம் செய்வதிலோ இல்லை. அர்த்தத்தின் பரிணாம வளர்ச்சியை அறிந்து கொள்வது எனபது ஒரு சமூகததின் பரிணாம வளர்ச்சியை அறிந்து கொள்வதும் ஆகும். ஆங்கிலத்தில் புகழ் பெற்ற விமர்சகர்கள் ஐ ஏ ரிச்சர்ட்சும் […]