குரு அரவிந்தன் சோதிடம் மூலம்தான் நாங்கள் முதலில் கிரகங்கள் பற்றி அறிந்திருந்தோம். நவக்கிரகங்கள் என்று சொல்லி ஒன்பது கிரகங்களைக் குறிப்பிட்டார்கள். ஆனால் அறிவியல் சார்ந்து பார்த்தால், இன்று கிரகங்களின் நிலையை அறிய மட்டுமல்ல, நிஜமாகவே எங்களால் அவற்றைப் பார்க்கவும் முடிகின்றது. ‘சோலார் பமிலி’ என்று ஆங்கிலத்தில் அழைக்கின்ற எங்கள் சூரியக் குடும்பத்தில் ஒன்பது கிரகங்கள் இருந்தன. ஆனால் அதில் ஒரு கிரகத்திற்கு வேண்டிய தன்மைகள் இல்லாததால், ‘பு@ட்டோ’ என்ற அந்தக் கிரகத்தை வெளியே எடுத்து விட்டார்கள். இப்பொழுது […]
குரு அரவிந்தன் சிரேஸ்ட ஊடகவியலாளரான, பலராலும் அறியப்பட்ட பாரதி இராசநாயகம் அவர்கள் தனது 62 ஆவது வயதில் திடீரென எம்மைவிட்டு நேற்றுப் பிரிந்த செய்தி (9-2-25) அதிர்ச்சி தரக்கூடியதாகவே இருக்கின்றது. ஊடக தர்மத்தை கடைசிவரை கடைப்பிடித்த இவர், போர்ச் சூழலில் பல இன்னல்களைச் சந்தித்தது மட்டுமல்ல பலதடவை உயிராபத்தையும் எதிர் கொண்டிருந்தார். பழகுவதற்கு இனிமையான இவர், ஞாயிறு தினக்குரல் ஆசிரியராக இருந்த போதுதான் என்னுடன் முதலில் தொடர்பு கொண்டிருந்தார். அப்போது தினக்குரல் பத்திரிகையின் உரிமையாளராக எனது மனைவி […]
குரு அரவிந்தன் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போயிருப்பதாக நண்பர் தெரிவித்ததைத் தொடர்ந்து சென்ற சனிக்கிழமை நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்க்கப் போயிருந்தேன். பல தடவை கனடிய பக்கமுள்ள 187 அடி உயரமும், 2590 அடி அகலமும் கொண்ட பெரிய நீர்வீழ்ச்சிக்கு அருகே படகில் சென்று, அவர்கள் தரும் சிகப்பு நிற மழைக்கோட் அணிந்து தூவானத்தில் நனைந்து ‘மெயிட் ஆப் த மிஸ்ட்’ ஐப் பார்த்து மகிழ்ந்த எங்களுக்கு உறைந்து போன நயாகராவைப் பார்க்க வியப்பாக இருந்தது. மனிதமனங்களும் இப்டித்தான் […]
குரு அரவிந்தன். வழமைபோல இந்த வருடமும் பனி கொட்டத் தொடங்கிவிட்டது. தரை எல்லாம் பனி வயலாகக் காட்சி தருகின்றது. மரங்கள் எல்லாம் இலை உதிர்த்து வெண்பனியால் போர்வை போர்த்திருக்கின்றன. புலம்பெயர்ந்த பின் இப்படியான காட்சிகளை ஒவ்வொரு வருடமும் பார்த்ததால்தான், புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வாழும் நிலச்சூழலையை வைத்து ‘ஆறாம் நிலத்திணை’ பனியும் பனி சூழ்ந்த பகுதியும் என்ற ஆய்வுக் கட்டுரையை நான் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டுக்காக எழுதினேன். சங்க இலக்கியத்தில் வரும் ஐந்து நிலத்திணைகளுடன் […]
குரு அரவிந்தன் சிகப்பு மஞ்சள் விளக்குகள் மின்னிக் கொண்டிருக்க, இராணுவ நோயாளர் காவுவண்டி ஒன்று அலறி அடித்துக் கொண்டு மருத்துவமனை வாசலில் வந்து நின்றது. என்னவோ ஏதோவென்று மருத்துவமனை ஊழியர்கள் எட்டிப் பார்த்தனர். நோயாளர் காவுவண்டிக்குப் பாதுகாப்பாய் வந்த இன்னுமொரு வண்டியில் இருந்து குதித்து இறங்கிய இராணுவத்தினர் ஆயுதங்களோடு தடதட என்று உள்ளே நுழைந்தனர். வெளிநோயாளர் பயந்துபோய் ஒதுங்கி நிற்க, வரவேற்பு மேசையில் இருந்த பெண் பதட்டத்தில் தன்னை அறியாமலே சட்டென்று எழுந்து நின்றாள். ‘டாக்டர் எங்கே..?’ […]
குரு அரவிந்தன் கனடாவில் நினைவுதினம் என்பது போர்க்காலத்தில் நாட்டுக்காக உயிர் தந்தவர்களையும், அக்காலத்தில் போர்முனையில் தம் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றியவர்களையும் கௌரவிக்கும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி அனுசரிக்கப்படுகின்றது. இதில் காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த மரணித்த போர் வீரர்களும் அடங்குவர். இந்த வாரம் முழுவதும் கனடியர்கள் சிகப்பு நிறத்திலான பாப்பி மலர்களை அணிவதன் மூலம் மரணித்தவர்களை நினைவேந்தல் மூலம் கௌரவிக்கின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த மொய்னா மைக்கேல் என்பவர்தான் சிவப்பு பாப்பி […]
குரு அரவிந்தன் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘விருது விழா -2024’ஸ்காபரோ சிவிக்சென்றர் மண்டபத்தில் 26-10–2024 அன்று இணையத்தின் தலைவர் திரு. கனகசபை ரவீந்திரநாதன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 31 ஆண்டுகளாக இந்தக் கனடிய மண்ணில் சிறப்பாக இயங்கிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர்களாக திரு. தெ.சண்முகராசா, திரு. திருமாவளவன், திரு. வி.கந்தவனம், திரு.சின்னையா சிவநேசன், திரு.ஆர். என். லோகேந்திரலிங்கம், திரு.சிவபாலு தங்கராசா, திரு. சின்னையை சிவநேசன், […]
குரு அரவிந்தன் கனடாவில் உள்ள மார்க்கம் நகரில் சென்ற 14-09-2024 சனிக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த முன்னாள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் (கவிஞர் ஆரணி) ‘நினைவிடைத் தோய்தல்’ என்ற கவிதை நூல் வெளியிட்டு வைக்கப்பெற்றது. மார்க்கம் நகரில் உள்ள யுயniin ஊழஅஅரnவைல ஊநவெசநஇ 5665 14வா யுஎநரெந என்ற இடத்தில் உள்;ள அரங்கில் இந்த நிகழ்ச்சி இடம் பெற்றது. இந்த நிகழ்வுக்கு பேராசிரியர் இ. பாலசுந்தரம் […]
குரு அரவிந்தன் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் ஒன்றான கனடாவில் தயாரிக்கப்பட்ட ‘ஆக்குவாய் காப்பாய்’ என்ற திரைப்படம் பற்றிய ஊடகச் சந்திப்பு சென்ற ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ரொறன்ரோ நகெட் அவென்யூவில் உள்ள பிறைமா நடனப்பள்ளி மண்டபத்தில் மாலை 7 மணியளவில் நடைபெற்றது. கனடாவில் இருந்து வெளிவரும் ‘தமிழ் ஆரம்,’ ‘வதனம்’ ஆகிய தமிழ் இதழ்களின் ஆசிரியர் என்ற வகையில் எனக்கும் அழைப்பு வந்தது. இந்தப்படம் கனடா நாட்டில் வசிக்கும் ஒரு தமிழ்ப் […]
குரு அரவிந்தன் சென்ற யூலை மாதம் 13 ஆம் திகதி பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்களின் ஆய்வு நூல்கள் மூன்று ரொறன்ரோவில் வெளியிட்டு வைக்கப்பெற்றன. சுவாமி விபுலாந்தர் தமிழ் ஆய்வு மையத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வுக்குக் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் அகணி சுரேஸ் அவர்கள் தலைமை தாங்கியிருந்தார். இந்த நிகழ்வில் சங்க இலக்கியம் ஒரு புதிய கண்ணோட்டம், தமிழர் நாட்டுப்புறவியல் களஞ்சியம், திருக்குறள் ஓர் உலகப் பொது நூல், ஆகிய மூன்று […]