author

மீளா நிழல்

This entry is part 23 of 32 in the series 24 ஜூலை 2011

* கைப்பிசைந்து நிம்மதியிழக்க நேர்கிறது இப்பெரு அமைதியில் காலடி ஓசைகளின் அதிர்வில் நடுங்குகிறது நிற்கும் நிழல் ஒளி கசியும் ஜன்னல் திரையில் மடிந்து மடிந்து தொங்குகிறது மீளா துக்கம் கையெழுத்து இடச் சொன்ன படிவத்தில் உறுதி செய்து கேட்கிறார்கள் அவன் மரணத்தை வெண்துணி போர்த்திய உடலென வருகிறான் பின் எப்போதும் பார்க்க விரும்பாத விழிகள் நிலைக் குத்த.. ***** –இளங்கோ

முடிச்சிட்டுக் கொள்ளும் நாளங்கள்..

This entry is part 2 of 38 in the series 10 ஜூலை 2011

* ஒரு கறுமைப் பொழுதை ஊற்றிக் கொண்டிருக்கிறேன் இரவின் குடுவையில் வெளிச்சத் திரள் என சிந்துகிறாய் துயரத்தின் வாசலில் கைப்பிடியளவு இதயத்தில் அழுத்தும் நினைவு நாளங்களில் முடிச்சிட்டுக் கொள்கிறது எப்போதும் முடிவற்று விரியும் கோரிக்கை யாவும் **** –இளங்கோ 

மரணித்தல் வரம்

This entry is part 45 of 51 in the series 3 ஜூலை 2011

* கை நீளுதலை யாசகம் என்கிறாய் யாசித்து பெறுவதாக இருப்பதில்லை எனக்கு தேவையான பார்வை பேசாதிருத்தல் அமைதி என்கிறாய் பேசி அடைவதாக இருந்ததில்லை நான் பெற்ற மௌனம் மரணித்தல் வரம் என்பாய் எதன் பொருட்டு தவம் இருந்தேனோ அதிலில்லை யாசகமோ ஒரு மௌனமோ குறைந்தபட்சம் ஒரு பார்வையோ ***** –இளங்கோ

சலனப் பாசியின் பசலை.

This entry is part 3 of 46 in the series 26 ஜூன் 2011

. * மரண மீன் செதிலசைத்து நீந்துகிறது நாளங்களில் மூச்சுக் குமிழ் வீங்கும் நொடியில் உடைந்து வாலசைக்கிறது இதயம் நோக்கி மௌன நீர்மையில் வேர்ப் பிடித்து முளைக்கும் சலனப் பாசி நெளிந்து நெளிந்து கலக்கும் பசலையைத் தின்று தீர்க்க வாய் திறந்து திறந்து மூடுகிறது உயிரின் நித்திரைத் திரட்டுகள்.. ***** –இளங்கோ

உறைந்திடும் துளி ரத்தம்..

This entry is part 8 of 46 in the series 5 ஜூன் 2011

* உன் துயரத்தின் சாயலை நகலெடுத்துக் கொள்ளும்படி உத்தரவிடுகிறாய் பிடி நழுவும் குறுவாளின் கூர் முனையில் உறைந்திடும் துளி ரத்தம்.. ஊடுருவி மீண்ட துரோகக் கணத்தின் சாட்சியென துருப்பிடித்துக் காத்திருக்கிறது உன் வரவுக்காக ******* –இளங்கோ

மீன்பிடி கொக்குகள்..

This entry is part 37 of 43 in the series 29 மே 2011

* வார்த்தைகளின் வேலிப் படலைத் திறந்து வைத்திருக்கிறேன் என் மனவெளியை சூறையாடிக் கொள் நேற்றிரவு உரையாடலின் குளம் இன்னும் தளும்பிக் கொண்டிருக்கிறது அதில் உன் மௌனக் கொக்கு ஒற்றைக் காலில் நி ற் கி ற து.. நீ சுருள் பிரிக்கும் உன் கைத் தூண்டில் முனையில் ஒரு எழுத்து நெளிகிறதே மீன் பிடிக்கவா..? தூ..! கொக்கை விரட்டு கொக்கை விரட்டு..

கை விடப்பட்ட திசைகள்..

This entry is part 30 of 42 in the series 22 மே 2011

* நீங்கள் அப்படி ஒப்புக் கொள்ளும்போதே கொஞ்சம் மரணிக்கிறீர்கள்.. ஆட்படும் கண நேர தலையசைப்பில் நீர்த்துப் போகிறது இருப்பதாக நம்பப்படும் வைராக்கியம். தேங்கியக் குட்டைக்குள்ளிருந்து நீந்திப் பழகிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் சிறகுகள் முளைத்து கூரைக்கு மேலே பறத்தலை நிகழ்த்துகின்றன.. ரகசியமென இரவுகளில் கவிழ்கின்றது முன்னெப்போதும் இளமையென கை  விடப்பட்ட சந்தர்ப்பங்கள்.. ***** –இளங்கோ