தயாவின் கடித வாசகம் சங்கரனின் காதுகளைச் சுற்றிச் சுற்றி வந்தது. அவளுக்கு நேர்ந்துவிட்ட அவல வாழ்க்கையை அவனால் சகிக்கவே முடியவில்லை. ஆனால்,அவள் விஷயத்தில் தன்னால் ஒரு விரலைக்கூட அசைக்க முடியாது என்கிற நிலையே அவளது அவலத்தை விடவும் அவனை அதிகமாய்த் துன்புறுத்தியது. தயாவின் வீட்டில், எல்லாருக்கும் தெரியவேண்டும் என்பதற்காக ரமா தயாவின் கடிதத்தை இரைந்தே படித்தாள். அப்போது பக்கத்தில் இருந்த ஈசுவரனின் முகம் வெளிறிவிட்டது. ரேவதியோ வாயில் புடைவைத் தப?லப்பைப் பந்தாய்ச் சுருட்டி வைத்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள். சாம்பவிதான் […]
சில ஆண்டுகளுக்கு முன் சென்னைத் தொலைக்காட்சியில் ஒரு நேர்முக நிகழ்ச்சி ஒளிபரப்பாயிற்று. ஓர் எழுத்தாளரைத் தொலைக் காட்சி பேட்டி கண்ட நிகழ்ச்சி அது. அந்த எழுத்தாளர் துளியும் ஆணவமே இல்லாதவர். எனினும் தம் சாதனைகள் சிலவற்றை நோக்கர்களுக்கு ஒரு தகவல் போல் செருக்கே இல்லாத தொனியில் சற்றே கூச்சத்துடன் தெரிவித்தார். தம் சாதனைகளை அவர் பகிர்ந்துகொண்ட விதம் பாராட்டும்படி இருந்தது. அந்த “இனிய” எழுத்தாளருக்கு உடனே ஒரு பாராட்டுக் கடிதம் எழ்தி யனுப்பினேன்.. ’நாம் […]
ஆணி அடித்தது போல் சில நொடிகளுக்கு அப்படியே நின்றுவிட்டாலும், தயா திரும்பித்தான் பார்த்தாள். அவளுடைய ஓரகத்தி சாந்திதான் நின்றுகொண்டிருந்தாள். அச்சத்திடையேயும் தயாவுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ‘இவள் பாம்பா, பழுதையா என்று தெரியாது. இருந்தாலும் அவரிடமோ அல்லது மாமியாரிடமோ காட்டிக்கொடுக்கிற அளவுக்கு மோசமானவளாக இருக்க மாட்டாள் என்றே தோன்றுகிறது.’ – தயா சட்டென்று வெளியே வந்தாள். முகத்தில் அதற்குள் வேர்வை பொடித்து விட்டிருந்தது. “சும்மாதான்! சாவி அதிலேயே சொருகி இருந்தது. உள்ளே என்ன இருக்கு, எல்லாம் அடுக்கி […]
சிந்தியாவின் வீட்டிலிருந்து திரும்பிய தீனதயாளன் தமக்குக் கதவு திற்நத ராதிகாவை ஆழ்ந்து பார்க்க இயலாதவராய், செயற்கைத்தனமான ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டுத் தம் பார்வையை உடனே நகர்த்திக்கொண்டு அப்பால் நகர்ந்தார். ‘இந்த அப்பா சிந்தியாவின் வீட்டுக்குத்தான் போய்விட்டு வருகிறார். இங்கு வந்தது பற்றி அவளுடன் சண்டை போடுவதற்காகப் போயிருந்திருப்பார்.’ மகள் தம்மை ஏளனமாகப் பார்ப்பது போல் அவருக்குத் தோன்றியது. சில குடும்பங்களில், தகப்பன்மார்கள் தங்களின் ஒரு பார்வைக்கே உறைந்து போகிற அளவுக்கு ஓர் அச்சத்திலேயே மனைவி-குழந்தைகளை ஏன் வைத்திருக்கிறார்கள் […]
1959 அல்லது 1960 ஆக இருக்கலாம். என்னைப் பார்க்க ஒருவர் வந்துள்ளதாக வரவேற்பறையிலிருந்து தொலைபேசித் தகவல் வந்தது. அப்போது அலுவலரிடம் சென்று வாய்மொழிக் கடிதம் வாங்கி எழுதுவது என் முறையாக இல்லாததால் எனது இருக்கையில் இருந்தாக வேண்டிய அவசியமின்றி நான் சற்றே ஓய்வாக இருந்தேன் எனவே, கீழ்த்தளத்தில் இருந்த வரவேற்பறைக்குப் போனேன். நான் மாடிப்படிகளில் இறங்கிக்கொண்டிருந்த போது, வரவேற்ப்றைக்கு மேற்கூரை இல்லாததால், அங்கிருந்தவாறே தலை உயர்த்தி என்னைப் பார்த்துவிட்ட ஓர் இளைஞர் புன்சிரிப்புடன் எழுந்து நின்று […]
ஜோதிர்லதா கிரிஜா ஒரு வாரம் கழித்து வீட்டுக்கு வந்து சேர்ந்த சங்கரன் வலத் தோளில் போடப்பட்ட கட்டுடன் ஓய்வில் இருக்கலானான். கட்டுப் போட்டுக்கொள்ள மருத்துவ மனைக்குச் செல்லும் வழியில், ரமாவோடு தொலைபேசினான். திரு¦நெல்வேலியிலிருந்து தயாவின் ராஜிநாமாக் கடிதம் அலுவலகத்துக்கு வந்துள்ளதாக அவள் தெரிவித்ததும் அவனுக்குத் தொண்டை அடைத்துக் கொண்டது. ரமாவிடம் எதுவுமே பேசாமல் தொடர்பைத் துண்டித்தான். கண்கள் சிவக்க வீடு திரும்பினான். . . . நான்கு நாள்கள் கழித்து ரமணி ஈசுவரனின் வீட்டுக்கு வந்தான். திருமணத்தின் […]
இப்படியும் ஓர் அப்பா! (மீள்பதிவு– சில சேர்க்கைகளுடன்) ஜோதிர்லதா கிரிஜா “அப்பாக்கள் தினம்” கடந்துசென்று விட்டது. ஆனாலும், நல்ல அப்பாக்களையும் அம்மாக்களையும் பொறுத்த மட்டில், எல்லா நாள்களுமே பெற்றோர் தினமாய்க் கொண்டாடப்பட வேண்டிய பெருமை படைத்த நாள்கள்தானே! ‘அதென்ன நல்ல அப்பா, நல்ல அம்மா?’ என்கிறீர்களா? இவ்வாறு சொல்லுவதற்குக் காரணம் உண்டு. பெற்றோர்களிலும் சராசரி, சராசரிக்கும் மேல், மிக. மிக உயர்ந்தவர்கள் என்றெல்லாம் பாகுபடுத்தப்படக் கூடியவர்கள் உண்டு என்பதும் உண்மைதானே? எல்லாருக்கும்தான் அப்பாக்கள் […]
ராதிகா இல்லாத நேரம் பார்த்து வாழிநடையில் இருந்த குப்பைக்கூடையைச் சோதித்த தீனதயாளன் அதனுள் அந்த டிக்கெட் ஒட்டுத் துண்டுகள் இல்லை யென்பதைக் கண்டார். பிறிதொரு நாளில், நீ வேற யாரையோ அரையுங் குறையுமாப் பாத்துட்டு நான்குறே’ என்று தாம் சொல்லக் கூடுமென்பதால், அந்தத் துணுக்குகளை எடுத்து அவள் பத்திரப்படுத்திக்கொண்டு விட்டாள் என்று ஊகித்து அவர் பெருமூச்செறிந்தார். அவருக்கும் ராதிகாவுக்குமிடையே இருந்த உறவு பல பிற குடும்பங்களில் போல் சாதாரணமானதாக இருந்திருப்பின் அவர் அந்த அளவுக்குப் பாதிக்கப் பட்டிருந்திருக்க […]
“வாங்க, மேடம்!…. அப்பா! நான் சொன்னேனே, அந்த சிந்தியா தீனதயாளன் இவங்கதான்!… உள்ள வாங்க, மேடம் நான் இங்க இருக்கிறது உங்களுக்கு எப்படித் தெரிஞ்சுது? …எல்லா டிகெகெட்சும் வித்தாச்சு, மேடம்!” என்று ஒரு போலியான உற்சாகத்துடன் ராதிகா அவளை உள்ளே அழைத்தாள். தமக்கு முதன் முதலாய் அறிமுகப்படுத்தப்பட்டவருக்குச் சொல்லுவது போல், தீனதயாளன், “வணக்கம்!” என்றார். “இவர் என் அப்பா. மிஸ்டர் தீனதயாளன். ரெய்ல்வே டிபார்ட்மெண்ட்ல இருக்காரு.” “அப்ப ரிசெர்வேஷனுக் கெல்லாம் உங்கப்பாவை அப்ரோச் பண்ணலாம்னு சொல்லு!” என்று […]
“தாமரை மணாளன்” எனும் புனைபெயரில் எழுதிக்கொண்டிருந்த ஓர் அருமையான எழுத்தாளர் இருந்தார். அவரைப் பற்றி இந்த்த தலைமுறையினரில் எத்தனை பேருக்க்குத் தெரியும்? தெரியவில்லை. (படிப்பது குறைந்துகொண்டு வருவதாய்ச் சொல்லப்படும் இந்நாளில் தற்போதைய எழுத்தாளர்களைப் பற்றியே அநேகருக்குத் தெரியவில்லை என்கிறார்கள். அப்படி இருக்க, சிலஆண்டுகளுக்கு முன் காலமாகிவிட்ட தாமரை மணாளனைப் பற்றி அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறதாம்?) அற்புதமான அந்த எழுத்தாளர் பற்றி மற்ற எழுத்தாளர்களே பேசாத நிலையில் பிறரைப் பற்றி என்ன சொல்ல! 1968 இன் இறுதி […]