author

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 15

This entry is part 21 of 29 in the series 23 ஜூன் 2013

மறு நாள் காலை தயா தன் அலுவலகத்தை யடைந்த போது, சங்கரன் வந்திருக்கவில்லை. அவளுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. அவன் தன்னைத் தவிர்க்கிறானோ என்று அவள் சந்தேகப் பட்டாள். பத்து மணி தாண்டிய பின்னரும் அவன் வராமல் போகவே அவளுள் ஒரு கவலை தோன்றியது. ‘ என்ன ஆகியிருக்கும்? ஒரு வேளை லீவ் போட்டுவிட்டுக் கொஞ்ச நாள் என்னைப் பார்க்காமல் இருக்கலாம் என்று நினைக்கிறாரா என்ன? பிரச்னையை விட்டு நழுவுகிற முயற்சியா இது?’ அவள் நினைத்தது தவறு […]

நீங்காத நினைவுகள் – 7

This entry is part 4 of 23 in the series 16 ஜூன் 2013

      “ஆசாரம்”  என்னும் சொல்லுக்குத் தமிழ் அகராதியில், அதற்குரிய பல்வேறு பொருள்களிடையே, “சுத்தம்” என்னும் பொருளும் தரப்பட்டுள்ளது. இந்தியாவில் சில சாதியினர் – முக்கியமாய்ப் பார்ப்பனர்கள் – மிகவும் ஆசாரம் பார்ப்பவர்கள்.  ஆசாரம் என்கிற பெயரில் அவர்கள் அடித்து வந்துள்ள கூத்து நகைப்புக்கு மட்டுமல்லாது, அருவருப்புக்கும், கண்டனத்துக்கும் உரியதாகும். இப்போது அது பெருமளவு போய்விட்டாலும், பெருங்காயச் செப்பு காலியான பிறகும் வாசனை அடிப்பது போல் 80-90 வயதுகளில் உள்ளவர்கள் ஓரளவு அந்தப் பழக்கங்களை இன்னமும் பிடித்து […]

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 14

This entry is part 7 of 23 in the series 16 ஜூன் 2013

‘காலேஜ்ல இன்னிக்கு என்ன விசேஷம்’ எனும் கேள்வியை அதற்கு முன்னால் தீனதயாளன் ராதிகாவிடம் கேட்டதே இல்லை.  கேட்டிருந்திருப்பின், இப்போது கேட்ட கேள்வியைச் சாதாரணமாக அவளால் எடுத்துக் கொண்டிருந்திருக்க முடியும்.  அப்படி இல்லாததால், தான் அன்று கல்லூரிக்குப் போகவில்லை என்பது அவருக்கு எப்படியோ தெரிந்து போய்விட்டது என்பதை அவள் புரிந்துகொண்டாள். ‘அப்பாவுக்கு அது எப்படித் தெரிந்திருக்க முடியும்?  அவர்தான் காலையில் தம் அலுவலகத்திலிருந்து அந்தச் சிறுக்கியின் வீட்டுக்குப் போய்விட்டாரே?  … ஒரு வேளை தம் காரைப் பின்தொடர்ந்து பைக்கில் […]

நீங்காத நினைவுகள் – 6

This entry is part 10 of 24 in the series 9 ஜூன் 2013

8.6.2013 “ஹிந்து” ஆங்கில நாளிதழில் பிரபல எண்கணித ஜோதிடர் அமரர் நம்புங்கள் நாராயணன் அவர்கள் மறைந்த நாளை நினைவு கூர்ந்து அவருடைய குடும்பத்தார் அவரது புகைப்படத்துடன் கொடுத்திருந்த விளம்பரத்தைக் காண நேர்ந்தது. அவரது வயதுக்குப் பொருந்தாத குழந்தை முகத்தைப் பார்த்ததும் அவரது அறிமுகம் கிடைத்த நாளில் நடந்தவை யாவும் நினைவுக்கு வந்தன. 1980 களின் தொடக்கத்தில் ஒரு நாள். நான் பணி புரிந்துகொண்டிருந்த அஞ்சல் துறைத் தலைவரின் அலுவலகத்தில், எனது அறைக்கு அடுத்த அறையில் இருந்த குப்புசாமி […]

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 13

This entry is part 21 of 24 in the series 9 ஜூன் 2013

தன் அப்பா சொன்னபடி அவருடைய நண்பரைப் பார்த்துவிட்டு வந்திருந்த சங்கரன் திங்கள் கிழமையிலிருந்து அவன் வரலாம் என்று சொன்னதன் பேரில், இரவு எட்டரை மணிக்குப் பகுதி நேர ஊழியம் செய்ய அந்தக் கம்பெனிக்குப் போனான். நல்ல வேளையாக அவன் எட்டு மணிக்கு வேலை முடித்த அலுவலகத்துக்கு மிக அருகில் அது இருந்ததால், குறித்த நேரத்துக்கும் முன்னதாகவே அவனால் அங்கு செல்ல முடிந்தது. .  .  .  தயாவைப் பேருந்தில் ஏற்றிவிட்டு, அவன் தான் வேலை செய்யும் இடத்தை […]

நீங்காத நினைவுகள் – 5

This entry is part 12 of 21 in the series 2 ஜூன் 2013

      அனசூயா தேவி என்பவர் அஞ்சல் துறையின் தலைமை அலுவலகத்தில் என்னுடன் பணி புரிந்தவர்.  ‘ யங் வுமன்’ஸ் ஹரிஜன் வெல்ஃபேர் அசோயேஷன்’ எனும் அமைப்பை மயிலாப்பூரில் அவர் நடத்தி வந்தார்.  பெயரில்தான் ‘ஹரிஜன்’ எனும் சொல் இடம் பெற்றிருந்ததே தவிர, அதில் பிற ஜாதியினரும் மதத்தினரும் கூட இடம் பெற்றிருந்தனர்.  அந்த அமைப்பின் தொடர்பாக அடிக்கடி அவர் புகழ் பெற்ற சமுதாய ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், கலைஞர்கள் போன்றோரைச் சந்திக்கச் செல்லுவதுண்டு. அவ்வப்போது என்னையும் […]

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 12

This entry is part 14 of 21 in the series 2 ஜூன் 2013

மறு நாள் அதிகாலையில் கண் விழித்த ராதிகா தன் தோழி ஒருத்தியின் வீட்டுக்குப் போய்விட்டு அங்கிருந்தே கல்லூரிக்குப் போவதாகச் சொல்லிவிட்டு வழக்கத்தை விடவும் ஒரு மணி நேரம் முன்னதாகப் புறப்பட்டுவிட்டாள். தீனதயாளன் ஏற்கெனவே கிளம்பிப் போய்விட்டிருந்தார். அவள் பத்மஜாவின் வீட்டை அடைந்த போது, பத்மஜா சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். “அடடே. வாடி, வா. காலங்கார்த்தால வந்திருக்கே? ஆச்சரியமா இருக்கே? சாப்பிட்டியாடி?” ”சாப்பிட்டுட்டுத்தாண்டி கெளம்பினேன். உன்னோட உதவி எனக்கு அவசரமாத் தேவை.” ”சொல்லு. என்ன உதவி?” ”உங்கம்மா இல்லையா?” “இருக்காங்களே. […]

நீங்காத நினைவுகள் -4

This entry is part 37 of 40 in the series 26 மே 2013

மே மாதம் 27 ஆம் நாள் நம் நாட்டுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த மறக்க முடியாத நாளாகும். மிகவும் துயரமான நாள். 1964 ஆம் ஆண்டின் மே மாதத்து 27 ஆம் நாளன்று தான் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு அவர்கள் காலமானார். இந்தியா விடுதலை அடைந்த நாளில் இருந்து அவர் மரித்த நாள் வரை தொடர்ந்து இந்தியாவின் பிரதமராக இருந்தவர். அவரை விட்டால் இந்தியப் பிரதமர் ஆவதற்குரிய தகுதி படைத்தவர் வேறு […]

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 11

This entry is part 34 of 40 in the series 26 மே 2013

ஜோதிர்லதா கிரிஜா தயா தன் அலுவலகத்துள் நுழைந்து, பிரிவுக்குள் சென்றடைந்த போது, சங்கரன் ஏற்கெனவே வந்து உட்கார்ந்து கொண்டிருந்தான். மணி ஒன்பதரை கூட ஆகியிருக்கவில்லை யாதலால், வேறு யாரும் வந்திருக்கவில்லை. இருவருக்கும் பக்கத்துப் பக்கத்து இருக்கைகள். தயா கைப்பையை மேசை மீது போட்டுவிட்டு முகத்தைப் பொத்திக்கொண்டு அழத் தொடங்கினாள். எப்போதும் தமாஷாக ஏதேனும் பேசிச் சிரிப்பதையே இயல்பாகக் கொண்ட தயா அழுதது சங்கரனை வேதனையில் ஆழ்த்தியது. சீனு கொண்டுவந்து கொடுத்த அவள் கடிதத்தைப் படித்ததும் தனக்கே கண்கள் […]

நீங்காத நினைவுகள் – 3

This entry is part 7 of 33 in the series 19 மே 2013

முக்கியத்துவம் இல்லாதவையானாலும், சில நினைவுகள் நம் மனங்களை விட்டு நீங்குவதேயில்லை. சில நினைவுகளை மற்றவர்களுடன் உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ளும் போது நம்மைப் பற்றிய சிலவற்றைச் சொல்ல நேர்ந்து விடுகிறது. இந்த நிலையைத் தவிர்க்க முடிவதில்லை. சில நேரங்களில் கொஞ்சம் தற்பெருமையாக நம்மைப் பற்றிப் பேசுவதிலோ எழுதுவதிலோ இந்தப் பகிர்தல் முடிந்துவிடுகிறது. இது பற்றிய கூச்சம் ஏற்பட்டாலும், இந்த நிலை தவிர்க்க முடியாத தாகிவிடுகிறது. இப்போது சொல்லப் போகும் விஷயமும் அப்படிப்பட்டதுதான் என்பதால் தான் இந்தப் புலம்பல் […]