அலாரம் அடிக்கிறது. விடியற்புறம் ஐந்து பதினைந்து. காலைக் கடன்களை அவசரமாக முடித்துக் கொண்டு, உடுப்புகளை அணிந்து கொள்கின்றான் சேகர். மனைவியைப் படுக்கையில் காணவில்லை. குசினிக்குள் சத்தம் கேட்கின்றது. மறு படுக்கையில் பெண்குழந்தை ஆழ்ந்த உறக்கத்தில். ‘அப்பா! பறக்காத பறவைகள் என்று இந்த உலகத்தில் ஏதாவது இருக்கின்றதா?’ நேற்றிரவு மகள் அவனைக் கேட்டிருந்தாள். நாலாம் வகுப்புப் படிக்கின்றாள். படிப்பிலே படு சுட்டி. ‘இன்ரநெற்’றில் பார்த்துச் சொல்வதாக சொல்லியிருந்தான். ஆனால் மறந்து போய் விட்டான். மனைவி தேநீரை நீட்டுகின்றாள். […]
கே.எஸ்.சுதாகர் நாளாந்தம் பழகும் சில நண்பர்கள், உறவினர்களிடமிருந்து சிலவேளைகளில் சொல்லாமல் கொள்ளாமல் தொலைபேசி அழைப்புகள் நின்றுவிடுவதுண்டு. எங்காவது வெளிநாட்டுக்குப் பயணம் செய்வதற்காகவோ அல்லது தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் பேசும் தருணங்களாகவோ அல்லது இன்னும் ஏதாவது பூடகமான விஷயங்களாகவோ அவை அமையலாம். சில பொழுதுகளில் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு ஒன்றுமே நடவாதது போல முன் வந்து நிற்பார்கள். அப்படித்தான் ஒருநாள் இராசலிங்கமும் அவர் மனைவி சுலோசனாவும் திடீரென்று, நினையாப் பிரகாரமாக சிறீதரனின் வீட்டிற்கு தரிசனம் கொடுத்தார்கள். சிறீதரனின் மனைவி […]
உண்மையில் நேற்றைய தினமே குழந்தை பிறந்திருக்க வேண்டும். ஒரு நாள் பிந்தி விட்டது. இரவு பகலாக விழித்திருந்ததில் செல்வாவிற்கு இந்தக் அதிகாலை வேளையிலும் அசதியாக இருந்தது. வைத்தியசாலைக்குப் போவதற்கு ஆயத்தமாகக் காரை வீட்டு முகப்பினிலே நிறுத்தியிருந்தான் அவன். “சாந்தினி வெளிக்கிடுவம் என்ன!” சாந்தினி பயந்தபடியே படுக்கைக்கும் கழிவறைக்குமாக, தனது பென்னாம் பெரிய வயிற்றையும் தூக்கிக் கொண்டு நடை பயின்று கொண்டிருந்தாள். செல்வாவிற்கு அவளைப் பார்க்கக் கவலையாக இருந்தது. சாந்தினி வெளிக்கிடுவதற்கு அரைமணி நேரமாவது எடுக்கும் என்று நினைத்தவாறே […]
கே.எஸ்.சுதாகர் ஆனந்தன் ‘கோல்ஸ்’ (Coles) சுப்பர்மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தான். அவுஸ்திரேலியாவில் ‘கோல்ஸ்’ பிரபலமான ஒரு பல் பொருள் அங்காடி. இரண்டொரு நிரைகள் தள்ளி அவனுடன் வேலை செய்யும் •பாம்(Pham) தனது றொலியில் (Troly) பொருட்களை நிரப்பிக் கொண்டிருந்தான். அவன் வியட்நாம் தேசத்தைச் சேர்ந்தவன். நிரப்பிக் கொண்டிருந்தான் என்று சொல்ல முடியாது. றொலி வெறுமையாக இருந்தது. பொருளின் விலையைத் திருப்பிப் பார்ப்பதும், பின்னர் முகர்ந்து பார்த்துவிட்டு பத்திரமாக இருந்த இடத்திலேயே வைப்பதுமாக இருந்தான். ஒரு சொல்லில் அவனைப் […]
“உங்களுக்கொரு கடிதம். இலங்கையிலிருந்து ஒரு ‘கேர்ள்’ போட்டிருக்கின்றாள்” தந்துவிட்டு அருகில் அதன் வாசிப்புக்காகக் காத்திருக்கின்றாள் மனைவி. பத்திரிகையில் மூழ்கியிருந்த என்னை அந்தக் கடிதம் திசை திருப்பியது. வழமைக்கு மாறான ஒரு கடிதம். கடிதத்தின் ‘கவரில்’ இருந்த பெயரை மட்டும் வைத்துக் கொண்டு பார்த்தால் அது ஒரு இளம்பெண்ணின் கடிதமாகத்தான் இருக்க வேண்டும். ஊகம் சரியானதுதான். வாசித்த நேரத்திலிருந்து மனம் கிளுகிளுப்பாக இருந்தது. உணர்வுகள் ‘வயக்கிரா’வினால் வாரி விடப்பட்டது போன்று தாளமிட்டன. இற்றைவரைக்கும் எனக்கு ஒரு காதல் கடிதம் […]
நீண்ட நாட்களின் பின்பு அஞ்சலியிடமிருந்து ராகவனுக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது. நீண்ட நாட்கள் என்பது இங்கே நான்கு வருடங்களைக் குறிக்கும். அஞ்சலி ராகவனிற்கு மருமகள். முன்பெல்லாம் ஆறு ஆண்டுகளாக தினமும் மின்னஞ்சல் வரும். எள்ளளவும் பிரயோசனமில்லாத அந்த அஞ்சல்களை குறைந்தது முப்பது நாற்பது பேருக்காவது ‘·போர்வேட்’ பண்ணாமல் விடமாட்டாள் அஞ்சலி. அப்பொழுதெல்லாம் இருவரும் ‘மெசஞ்சரில்’ (Messenger) செய்திப் பரிவர்த்தனைகள் செய்திருக்கின்றார்கள். எல்லாம் ஒருநாள் திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் நின்றுவிட்டன. எல்லாம் அவரவர் விருப்பம். அந்த இடைவெளிக்குள் ராகவன் மூன்று […]
மெல்பேர்ணில் தமிழ்ப்பாடசாலைகள் களை கட்டத் தொடங்கின. இந்தத் தடவை பேச்சுப்போட்டிக்குரிய விடயதானத்தை மாணவர்களும் பெற்றோரும் தெரிவு செய்யலாம் என்று நிர்வாகத்தினர் சொல்லியிருந்தார்கள். இந்த மாற்றம் மோகனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஒவ்வொரு தடவையும் பாரதியார், திருவள்ளுவர், நாவலர் என்று நிர்வாகம் எழுதிக் கொடுத்ததை – மாணவர்கள் ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ எழுதி ஒப்புவிப்பார்கள். ஒவ்வொரு வருடமும் இரண்டாவது அல்லது மூன்றாவதாக வரும் மகனை இந்தத்தடவை முதல் ஸ்தானத்திற்கு உயர்த்தி விடலாம். புரட்சிகரமான வசனங்களாக எழுதி புழுதி கிழப்பிவிட வேண்டும். […]
றோமனொஸ்க்கி என்னுடன் வேலை செய்பவன். போலந்து நாட்டவன். றோமன் என்று சுருக்கமாகக் கூப்பிடுவோம். 65 வயதை நெருங்கியும் இளமை குன்றாமல் இருப்பான். எனக்கு அடுத்த தெருவில் வசிக்கின்றான். தினமும் காலை எட்டு ஒன்பது மணிக்குள், குறைந்தது மூன்று தடவையாவது எனது வீட்டைக் கடந்து ஓடுவான். கடந்த சில தினங்களாக அவனுடன் ஒரு நாயும் கூடவே ஓடுகின்றது. ஒரு கையில் ‘ஷொப்பிங் பாக்’கும் மறு கையில் கயிற்றில் நாயுமாக பாய்ந்து செல்லும் அவனைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். சில […]
– கே.எஸ்.சுதாகர் வரன் மிகவும் பிரயாசை உள்ள மனிதர். ஒரு டொலரேனும் வீணாகச் செலவழிக்க மாட்டார். வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்துவிட்டு குசினிக்குள் சென்றார். அப்பொழுதுதான் மனைவி வாணி ‘ஷொப்பிங்’ முடித்து வந்திருந்தாள். வாங்கி வந்த பொருட்களை அடுக்குவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள். “பில்லை ஒருக்கால் தாரும் பார்ப்பம்!” “சரி… இனி அக்கவுண்டன் வந்திட்டார்.” வரன் பில்லைப் பார்த்தார். முகம் அஸ்ட திக்கிற்கு கோணலாகியது. “ஐஞ்சு கிலோ உருளைக்கிழங்கு இரண்டு டொலர் எண்டு எங்கையோ கிடந்தது. நீர் என்னடாவெண்டால் […]