Articles Posted by the Author:

 • என் பெயர் அழகர்சாமி

  என் பெயர் அழகர்சாமி

  அறுபதாண்டுகள் பழகிய பின் என் பெயர் ’அழகர்சாமி’ என்னை இறுக்குவது போலிருக்கும்.. எப்படி பிறர் இந்தப் பெயரைக் கூப்பிட்ட போதெல்லாம் ஒத்துழைத்துத் திரும்பியிருக்கிறேன். எத்தனையோ லெளகீக விஷயங்களுக்கு இந்தப் பெயர் உதவிக்கு வந்திருக்கிறது. அப்பா வைத்த பெயரென்று அப்பாவின் மேல் என் மரியாதைக்கு சாட்சியாக இருந்திருக்கிறது. (ஏன் அம்மா வைத்த பெயரில்லையென்று கேட்க வேண்டாம்) திரும்பத் திரும்ப எழுதிய வார்த்தைகளில் என் பெயர் தான் நான் அதிகம் எழுதிய வார்த்தையென்பதலிருந்து அதன் மேல் என் பிரியம் தெரியும். […]


 • கடந்து செல்லும் பெண்

  கடந்து செல்லும் பெண்

      நீ மெதுவாய் நடந்து வர நேரமும் பொழுதும் இருக்கிறது.   அதற்குள் ஒன்றும் நடந்து விட முடியாதென்று உறுதியாயிருக்கிறாய்.   நீ தனியாக நடந்து வருகிறாய் என்பதால் பொறுப்பாக இருக்க வேண்டியதை உணர்த்துகிறாய்.   உன் வனப்பில் இருக்கும் கண்டிப்பில் யாரும் உன்னை பலவந்தப்படுத்தி விட முடியாது.   யார் மேலான அவநம்பிக்கையிலும் அதைரியத்திலும் உன் நம்பிக்கையையும் தைரியத்தையும் நீ அமைத்துக் கொள்ளவில்லை என்பது தெரியும்.   காதலை வெளிப்படுத்துவது பலவீனமில்லையென்பதில் நீ யதார்த்ததை […]


 • பறவை ஒலித்தலின் அர்த்தங்கள்

  பறவை ஒலித்தலின் அர்த்தங்கள்

  ஒரு பறவையின் ஒலித்தல் எனக்குப் பல விதங்களில் அர்த்தமாகிறது. பறக்கும் திசையைப் பறக்கையிலே தீர்மானிக்கும் அதன் பறத்தலைப் போல் எதிர்பாராது ஒலித்தலில் அதன் பரிமாணம் விரிகிறது. ஆற்றாமையாயும், ஆனந்தமாயும், துக்கமாயும், ஏமாற்றமாயும் எத்தனையோ அர்த்தங்களில் என் நிலைக்கேற்பவும் அர்த்தமாகிறது. ‘க்கீ க்கீ க்க்கீ க்க்கீ க்க்க்கீ…….’என்று துரித கதியில் ஒலிக்குங் கால் காலம் கடந்து கொண்டிருக்கிறது என்று எச்சரிக்கிறது. விட்டு விட்டு ஒலிக்கும் அது ஒலிக்காத இடை வெளிகளில் நான் கவனிக்கத் தவறி நழுவிய காலத்தையும் குறிக்கிறது. […]


 • றெக்கைகள் கிழிந்தவன்

  றெக்கைகள் கிழிந்தவன்

  வழி நெடுக உற்ற பெருந்துணை போல் அடக்கத்துடன் கூட வரும் அடுக்கு மலைத் தொடர் விழி நெடுகத் தொடர்ந்தாலும் மாறி மாறித் தோற்றம் மாய்மாலம் செய்யும் மேகக் கூட்டம் புழுதி படிந்து பரட்டைத் தலை விரிய ஏனென்று எப்பவும் கேள்வி கேட்கும் ’ஒத்தப்’ பனை புறப்பட்டுச் செல்ல ஐயனாரை ஏற்றிக் கொண்டு எந்தச் சமயத்திலும் கம்பீரமாய்க் காத்திருக்கும் கல் குதிரை என்றோ தண்ணீர் கரை புரண்டோடிய காலம் எண்ணி எண்ணி மனம் திரைத்து மணல் திரளாகிய வறண்டாறு […]


 • நினைவுகளைக் கூட்டுவது

  நினைவுகளைக் கூட்டுவது

      காலம் தன்னிடம் மண்டியிட்டு அகாலமாய் இறுகியது போல் முகம் கொண்டு கைகளில் குச்சியில் கட்டிய துடைப்பத்தை ஏந்தி, அணி வகுத்து நிற்கும் மரங்களிடம் முன் பின் சொல்லாமல் உதிரும் சருகு மேல் சருகு சேர்ந்த சருகுக் குவியலின் இரகசியத்தைக் கலைத்துப் பார்த்து விட்டு மறுபடியும் குவித்து வைப்பது போல் சருகுகளைக் கூட்டிச் சேர்க்கிறானே முதியவன் அவனைப் பார்.   தன் முகச் சுருக்கங்களில் காலம் தன் மடிப்புக்களைச் சேர்க்க, விழிகளின் தீட்சண்யத்தில் சூரிய ரேகைகளைச் […]


 • மழையின் சித்தம்

  மழையின் சித்தம்

    மழையின் நீர்க் கால்கள் நிலத்தில் தொடும்.   மழை வலுத்தாலும் வலுக்கலாம்.   பிசு பிசுத்தாலும் பிசு பிசுக்கலாம்.   அது அதன் இஷ்டம்.   வலுத்தாலும் வலுக்கட்டாயமில்லை.   நீ நனையலாம்.   நனையாமலும் இருக்கலாம்.   உனக்கென்ன கவலை?   உனக்குப் பதில் நனைய உன் வீடிருக்கும்.   இல்லையானால் ஒதுங்க ஒரு கூரையிருக்கும்.   ஒரு மரத்தடியாவது இருக்கும்.   ஓடிப் போக முடியாமல் ஒற்றைக் காலில் மரம் தான் நனையும். […]


 • பெஷாவர்

              பெஷாவர்   (1)   எங்கிருந்தாலும் குழந்தைகள் உயிர் நிலவுகள்.   நிலவுகளை நெற்றிப் பொட்டில் சுட்டார்கள்.   நெஞ்சில் இருள்.   (2)   குழந்தைகளுக்கு என்ன தெரியும்?   பட்டாம் பூச்சிகள் தெரியும்.   ஓடியாடி விளையாடத் தெரியும்.   பயங்கரவாதிகளையும் மனிதர்கள் என்று தான் தெரியும்.   எப்படி மனம் வந்தது சுட?   (3)   வகுப்பறைகளில் வார்த்தை கற்கும் குழந்தைகள் சுடப்பட்டார்கள். […]


 • ஒரு விநோதமான இரவும் அதன் பின்னும்

  ஒரு விநோதமான இரவும் அதன் பின்னும்

  (1) ஒரு விநோதமான இரவும் அதன் பின்னும் ஒரு விநோதமான இரவு. முதல் யாமம். யாரோ கைகளாலல்ல ஆனால் கதவைத் தட்டுவது போலிருக்கும். இந்த வேளையில் இப்படி யாரென்று கதவைத் திறக்கவில்லை. நடு யாமம். யாரோ கைகளாலல்ல ஆனால் கதவைத் தட்டுவது போலிருக்கும் மறுபடியும். இந்த வேளையில் இப்படி யாரென்று கதவைத் திறக்கவில்லை. கடைசி யாமம். யாரோ கைகளாலல்ல ஆனால் கதவைத் தட்டுவது போலிருக்கும் மறுபடியும் மறுபடியும். இந்த வேளையில் இப்படி யாரென்று கதவைத் திறக்கவில்லை. விடியலில் […]


 • கு.அழகர்சாமி கவிதைகள்

  கு.அழகர்சாமி கவிதைகள்

    (1) பூக்காரி   பந்து பந்தாய் மல்லிகைப் பூவைச் சுற்றிப் பிரம்புக் கூடையில் அடுக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு லிஃப்ட் இல்லாத அடுக்ககத்தின் உச்சி மாடி வீட்டுக்குத் தினம் தினம் மூச்சு வாங்க ஏறி வந்து மல்லிகைப் பூவை விட முகம் மலர்ந்து முழம் போட்டு மல்லிகைப் பூ தந்து விட்டுப் போகும் ஒல்லிக் குச்சியான பூக்காரியை மல்லிகைக் கூடையுடன் நகர் விட்டு நீங்கிய சில காலம் கழித்து தற்செயலாய் நகரின் நாற்சாலைகளின் ‘சிக்னல்’ சந்திப்பில் […]


 • கவிதைகள்- கு.அழகர்சாமி

  கவிதைகள்- கு.அழகர்சாமி

      (1) சிறகுகளைக் கேட்கும் நான்   எப்படி கடல் மேல் பறக்குங் கால் கடலை உறிஞ்சி ஒரு துளி மேகமாகி விடுகிறாய்?   எப்படி குன்றைக் கடக்கும் போது குன்றின் தலையில் ஒரு குட்டு குட்டுகிறாய்?   எப்படி ஆகாயத்தின் முடிவில்லாக் கனவின் கதவுகளைத் திறந்து முடிவில் ஒன்றுமில்லையென்கிறாய்?   எப்படி சித்தம் போக்கில் திரிந்து வெட்ட வெளியில் கற்ற ஞானத்தைக் காற்றின் பாடலாய் எழுதுகிறாய்?   எப்படி கோடுகளிழுக்காமல் பகலெல்லாம் நீ பறந்து […]