இளைப்பாறல்

சற்று நில். மண் பற்றிக் கொள்ளட்டும். திரிந்தலையும் மேகங்களைக் கண்டு பறந்தலையும் பறவைகள் உன்னிடம் சேருங் கால் இளைப்பாறுவாய் நீ நினைப்பொடுங்கி நிழல் பரப்பும் தருவாகி. கு.அழகர்சாமி

ஆட்டம்

ஆட்டம் சூடு பிடித்திருக்கும். கணிணியும் அவனும் மோதும் உச்சக்கட்டத்தில் கவனத்தின் குண்டூசி முனையில் இறுதிப் போர் நடக்கும். தன்னையே தான் பணயம் வைத்து ஆடுகிறானா? கடைசி நகர்த்தலில் கணிணி நகைக்கும். காணோம் அவன். தேடி ’மெளஸைக்’ ‘கிளிக்’ செய்தால் மெலிதாய்க் கீச்சிடுவான்.…

இலங்கை

  (1)   என்ன ஆனான் அவர்களிடம் அவன்?   காணவில்லை அவன்.   ’காணாமல் போய் விட்டானெ’ன்று ஏதோ தெரியாததைத் தெரிவிப்பது போல் தெரிந்ததே தெரிவிக்கப்படும்.   கரைந்த கனவா அவன்?   பொய்த்தவர் முதலில் தம்மிடம் தோற்றுப் போனவரென்று…

அப்பா வாசித்த திருக்குறள் புத்தகம்

    நைந்து  போயிருக்கும் புத்தகம்.   அட்டைகள் இல்லை.   முன் பக்கங்கள் சில முகம் கிழிந்து போயிருக்கும்.   கிழிந்த பக்கங்கள் கவனமாய் நூல் கட்டி வைக்கப்பட்டிருக்கும்.   ஒடிந்து போய் விடுமோ என்று எத்தனையோ பக்கங்கள் ஓய்ந்திருக்கும்.…

இயக்கமும் மயக்கமும்

  (1) ஓடும் ஆற்றைச் சதா பாலம் கடக்கும்.   (2) ஊருக்கு நடக்கும் முன்னே ஊர் போய்ச் சேர்ந்திருக்கும் அவசரமாய் ஒற்றையடிப் பாதை.   (3) எங்கு போய் நிற்பதென்று ஓடிப் பார்த்து விடவேண்டுமென்று ஓடும் நெடுஞ்சாலையில் ஓடும் ஒரு…

பெரிதே உலகம்

கத்திரி வெயில் வறுத்தெடுக்கும் கடற்கரை மணலில் கைவிடப்பட்டதாய்த் திரியும் கிழவனுக்கு அலைகள் தேற்றினாலும் என்ன ஆதரவிருக்கும்? சேரிக் குடிசையிலிருந்து தன் பெண்டின் சிகையைப் பிடித்து ’தர தர’வென்று தெருவில் இழுத்துச் செல்லும் ’தற்கொண்டானுக்கு’ என்ன இரக்கமிருக்கும்? பேருந்திலிருந்து கழுத்தைப் பிடித்து நெட்டித்…

கேட்ட மற்ற கேள்விகள்

    இன்னும் சூரியன் முகம் காட்டவில்லை.   கதவு தட்டப்படும்.   கதவைத் திறக்க கண்டு நாளும் பேசிக் கொள்ளும் ஒற்றைத் தென்னை குனிந்து நிற்கும்.   நேற்றிரவு நிலா இல்லாத வானம் கண்டு உறக்கமில்லையா?   அடையும் பறவைகளில்…

குழந்தைகளும் தட்டான் பூச்சிகளும்

காடு விட்டு பட்டாம் பூச்சிகள் கூட்டமாய் வந்தது போலிருக்கும். சிறகடிக்கும் மனம் போல் விரிந்து கிடக்கும் மைதானத்தில் குழந்தைகள். ஓடித் தொட்டு ஓடித் தொட்டு விளையாடும். யாரும் தோற்கவில்லை. யாரும் ஜெயிக்கவில்லை. விழுந்து எழும். எழுந்து விழும். கூட ஓடி ஓடி…

அன்பின் வழியது

பசியில் தீக்கொழுந்து போல் துள்ளும். நீட்டிப் படுத்துக் கிடக்கும் இரயில் நடைமேடை நெடுக நிலத்தில் இழுத்த கோடு போல் பின் தொடரும். விடுவதாயில்லை அவளை. கையிலிருக்கும் காகிதப் பொட்டலத்தைப் பிரிப்பாள் அவள். விழுங்கும் ஒரு பருக்கை விடாமல் சோற்றை ’அரக்கப் பரக்க’…

குழந்தைக்குப் பிடிக்கும் நட்சத்திரங்கள்

  பட்டாம் பூச்சியொன்று பறக்காமல் பைய நடந்து  வருவது போல் இருக்கும்.   அம்மா குழந்தையை அழைத்து வருவாள் மழலையர் பள்ளியில் சேர்க்க.   குழந்தை முதல் நாள் விடாது அழும்.   இரண்டாம் நாள் விட்டு விட்டு அழும்.  …