author

மகளே கனிமொழி, வருந்துகிறேன், உனக்காக

This entry is part 18 of 46 in the series 26 ஜூன் 2011

சுமார் நான்கு வயதுக் குழந்தையாக இருக்கையில் என் மடி மீது உட்கார்ந்து கொஞ்சி விளையாடியவள் கனிமொழி. நானும் உனக்கு அப்பா மாதிரிதான் என்று சொன்னபோது கன்னங் குழியச் சிரித்து எனது சொல்லை அங்கீகரித்தவள் குழந்தை கனிமொழி. 1972 என்று நினைக்கிறேன். மதியழகன் மிகவும் வற்புறுத்தியதைத் தொடர்ந்து அவர் தம்பி கிருஷ்ணசாமி நடத்திய தென்னகம் நாளிதழ் கட்சிப் பத்திரிகை போல் இல்லாமல் செய்தித்தாளாக இருக்க வேண்டும் என்பதால் அதற்காக செய்தி ஆசிரியராக நான் அங்கு தினமும் சில மணி […]

யாதுமானவராய் ஒரு யாதுமற்றவர்

This entry is part 46 of 46 in the series 19 ஜூன் 2011

“கதைக்குள்ளேயிருந்து கதையை வெளியே எடுப்பதுதான் நான் செய்கிற வேலை” என்று சா. கந்தசாமி தனது எழுத்தைப் பற்றிச் சொல்வதுண்டு. இதை ஓர் இலக்கணம் என்றே விதித்துக் கொள்ளலாம், தற்காலப் படைப்பிலக்கியப் போக்கை அடையாளம் கண்டுகொள்வதற்கு. கதைக்குள்ளேயேயிருந்து பதமாகக் கதையை வெளியே எடுத்துப்போட வேண்டும். அது வாசக சுதந்திரத்திற்கு விசாலமான வெளியைக் கொடுத்து வாசகனை கெளரவிப்பதாக அமையும்.   இந்த விதியிலிருந்து வழுவாமல் ஒரு முயற்சியில் இறங்கி, அதில் கணிசமான வெற்றியையும் பெற்று விட்டிருக்கிறார், க. முத்துக்கிருஷ்ணன் என்ற […]

ராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்

This entry is part 32 of 46 in the series 19 ஜூன் 2011

தில்லி ராம் லீலா மைதானத்தில் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்தபோது அங்கு கூடியிருந்த மக்களை நள்ளிரவில் போலீசார் விரட்டிய காட்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது பலவிதமான சிந்தனைகள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.   முதலில் வன்முறை எதுவும் நிகழவில்லை என்று சாதித்த போலிஸ் அதிகாரிகளும் அமைச்சர்களும் தொலைக்காட்சியின் நேரடி சாட்சியமாகப் போலீசாரின் முரட்டுத்தனமான நடத்தையையும், வன்முறையாக அவர்கள் மக்களை அப்புறப்படுத்தியதையும் இடைவிடாது பார்க்க நேரிட்டதால் வேறு வழியின்றி மைதானத்தில் இருந்தவர்களை அகற்றுவதற்காகக் குறைந்தபட்ச வன்முறை பிரயோக்கிப்பட்டதாகச் சொல்லத் தொடங்கினார்கள். […]

வெ.சா. வின் விஜய பாஸ்கரன் நினைவுகள்: தவிர்க்கப்பட்ட தகவல்

This entry is part 17 of 48 in the series 15 மே 2011

 ஸ்ரீ வெங்கட் சாமிநானின் விஜய பாஸ்கரனுக்கு அஞ்சலி ஒரு சம்பிரதாயமான அஞ்சலியாக இல்லாமல் வழக்கமான வெ.சா. முத்திரையுடன் வெளிவந்திருப்பது மிகவும் நிறைவாக இருந்தது.  நண்பர் விஜய பாஸ்கரனை ஏலி, ஏலி, லாமா ஸபக்தானி என்று, மாற்றுக் கருத்தின்றி அனவராலும் கொண்டாடப்படும் தோழர் ஜீவா அவர்கள் பாடவைத்ததற்கு என்ன காரணம்? தமிழ் நாட்டில் ஈ.வே.ரா. தூவிய துவேஷம் என்கிற விஷ விதை வர்ஜா வர்ஜமின்றி எல்லார் தோட்டங்களிலும் பார்த்தீனியம் மாதிரி துளிர்த்து வளர்ந்துவிட்டதுதான் இதற்குக் காரணமா யிருக்க வேண்டும். […]